Monday, May 5, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 66, ஸ்ரீ நாராயணீயம் 66வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -66
கோபியர்கள் களித்தல் 

उपयातानां सुदृशां कुसुमायुधबाणपातविवशानाम् ।
अभिवाञ्छितं विधातुं कृतमतिरपि ता जगाथ वाममिव ॥१॥

உபயாதாநாம் ஸுத்₃ருஶாம் குஸுமாயுத₄பா₃ணபாதவிவஶாநாம் |
அபி₄வாஞ்சி₂தம் விதா₄தும் க்ருதமதிரபி தா ஜகா₃த₂ வாமமிவ || 1||

1. தங்கள் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள். அவர்கள் விருப்பத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் நேர்மாறாகப் பேசினீர்கள்.

गगनगतं मुनिनिवहं श्रावयितुं जगिथ कुलवधूधर्मम् ।
धर्म्यं खलु ते वचनं कर्म तु नो निर्मलस्य विश्वास्यम् ॥२॥

க₃க₃நக₃தம் முநிநிவஹம் ஶ்ராவயிதும் ஜகி₃த₂ குலவதூ₄த₄ர்மம் |
த₄ர்ம்யம் க₂லு தே வசநம் கர்ம து நோ நிர்மலஸ்ய விஶ்வாஸ்யம் || 2||

2. வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு எடுத்துக் கூறினீர்கள். தர்மம் நிறைந்த அச்சொற்களைக் கடைப்பிடிக்க வேண்டும், உம்முடைய செய்கைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

आकर्ण्य ते प्रतीपां वाणीमेणीदृश: परं दीना: ।
मा मा करुणासिन्धो परित्यजेत्यतिचिरं विलेपुस्ता: ॥३॥

ஆகர்ண்ய தே ப்ரதீபாம் வாணீமேணீத்₃ருஶ: பரம் தீ₃நா: |
மா மா கருணாஸிந்தோ₄ பரித்யஜேத்யதிசிரம் விலேபுஸ்தா: || 3||

3. நேர்மாறான தங்கள் வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கருணைக்கடலே! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.

तासां रुदितैर्लपितै: करुणाकुलमानसो मुरारे त्वम् ।
ताभिस्समं प्रवृत्तो यमुनापुलिनेषु काममभिरन्तुम् ॥४॥

தாஸாம் ருதி₃தைர்லபிதை: கருணாகுலமாநஸோ முராரே த்வம் |
தாபி₄ஸ்ஸமம் ப்ரவ்ருத்தோ யமுநாபுலிநேஷு காமமபி₄ரந்தும் || 4||

4. முரனைக் கொன்றவனே! அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த தாங்கள் கருணை கொண்டீர்கள். யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினீர்கள்.

चन्द्रकरस्यन्दलसत्सुन्दरयमुनातटान्तवीथीषु ।
गोपीजनोत्तरीयैरापादितसंस्तरो न्यषीदस्त्वम् ॥५॥

சந்த்₃ரகரஸ்யந்த₃லஸத்ஸுந்த₃ரயமுநாதடாந்தவீதீ₂ஷு |
கோ₃பீஜநோத்தரீயைராபாதி₃தஸம்ஸ்தரோ ந்யஷீத₃ஸ்த்வம் || 5||

5. நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் தங்களுக்கு ஆசனம் அமைத்தார்கள். அதில் தாங்கள் அமர்ந்தீர்கள்.

सुमधुरनर्मालपनै: करसंग्रहणैश्च चुम्बनोल्लासै: ।
गाढालिङ्गनसङ्गैस्त्वमङ्गनालोकमाकुलीचकृषे ॥६॥

ஸுமது₄ரநர்மாலபநை: கரஸம்க்₃ரஹணைஶ்ச சும்ப₃நோல்லாஸை: |
கா₃டா₄லிங்க₃நஸங்கை₃ஸ்த்வமங்க₃நாலோகமாகுலீசக்ருஷே || 6||

6. கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தீர்கள்.

वासोहरणदिने यद्वासोहरणं प्रतिश्रुतं तासाम् ।
तदपि विभो रसविवशस्वान्तानां कान्त सुभ्रुवामदधा: ॥७॥

வாஸோஹரணதி₃நே யத்₃வாஸோஹரணம் ப்ரதிஶ்ருதம் தாஸாம் |
தத₃பி விபோ₄ ரஸவிவஶஸ்வாந்தாநாம் காந்த ஸுப்₄ருவாமத₃தா₄: || 7||

7. முன்பு ஆடைகளை அபகரித்தபோது தாங்கள் கொடுத்த வாக்கின்படி, தங்கள் செய்கையால் மனம் கலங்கிய அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தீர்கள்.

कन्दलितघर्मलेशं कुन्दमृदुस्मेरवक्त्रपाथोजम् ।
नन्दसुत त्वां त्रिजगत्सुन्दरमुपगूह्य नन्दिता बाला: ॥८॥

கந்த₃லிதக₄ர்மலேஶம் குந்த₃ம்ருʼது₃ஸ்மேரவக்த்ரபாதோ₂ஜம் |
நந்த₃ஸுத த்வாம் த்ரிஜக₃த்ஸுந்த₃ரமுபகூ₃ஹ்ய நந்தி₃தா பா₃லா: || 8||

8. நந்தனின் புத்திரனே! குந்த மலர்போல் அழகாய்ப் புன்னகைத்தீர்கள். தாமரை போன்ற தங்கள் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்திருந்தது.
மூவுலகிலும் அழகு வாய்ந்த தங்களை அப்பெண்கள் தழுவிக் கொண்டனர்.

विरहेष्वङ्गारमय: शृङ्गारमयश्च सङ्गमे हि त्वम्
नितरामङ्गारमयस्तत्र पुनस्सङ्गमेऽपि चित्रमिदम् ॥९॥

விரஹேஷ்வங்கா₃ரமய: ஶ்ருங்கா₃ரமயஶ்ச ஸங்க₃மே ஹி த்வம்
நிதராமங்கா₃ரமயஸ்தத்ர புநஸ்ஸங்க₃மே(அ)பி சித்ரமித₃ம் || 9||

9. தங்களைப் பிரியும்போது நெருப்பைப் போல் தாபம் அளிப்பவராகவும் , சேரும்போது ஸ்ருங்காரமாகவும் இருப்பீர்கள். ஆனால் இப்போதோ, சேர்க்கையிலும் அளவில்லாத ஆனந்தம் அளிப்பவராய் இருக்கிறீர்கள். ஆச்சர்யம்!

राधातुङ्गपयोधरसाधुपरीरम्भलोलुपात्मानम् ।
आराधये भवन्तं पवनपुराधीश शमय सकलगदान् ॥१०॥

ராதா₄துங்க₃பயோத₄ரஸாது₄பரீரம்ப₄லோலுபாத்மாநம் |
ஆராத₄யே ப₄வந்தம் பவநபுராதீ₄ஶ ஶமய ஸகலக₃தா₃ந் || 10||

10. உயர்ந்த கொங்கைகளை உடைய ராதையைத் தழுவ எண்ணம் கொண்ட தங்களையே தொழுகிறேன். என் எல்லா நோய்களையும் போக்கிக் காத்தருள வேண்டும்.

No comments:

Post a Comment