த³ஶகம் -70
சுதர்சனன் முக்தி, சங்கசூட, அரிஷ்டாசுர வதம்
इति त्वयि रसाकुलं रमितवल्लभे वल्लवा:
कदापि पुरमम्बिकामितुरम्बिकाकानने ।
समेत्य भवता समं निशि निषेव्य दिव्योत्सवं
सुखं सुषुपुरग्रसीद्व्रजपमुग्रनागस्तदा ॥१॥
இதி த்வயி ரஸாகுலம் ரமிதவல்லபே₄ வல்லவா:
கதா₃பி புரமம்பி₃காமிதுரம்பி₃காகாநநே |
ஸமேத்ய ப₄வதா ஸமம் நிஶி நிஷேவ்ய தி₃வ்யோத்ஸவம்
ஸுக₂ம் ஸுஷுபுரக்₃ரஸீத்₃வ்ரஜபமுக்₃ரநாக₃ஸ்ததா₃ || 1||
1. இவ்வாறு ராஸக்ரீடை செய்து முடித்தீர். ஒரு நாள், கோபர்களுடன் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றீர்கள். தொழுது முடித்ததும் கோபர்கள் கண்ணயர்ந்தனர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது.
समुन्मुखमथोल्मुकैरभिहतेऽपि तस्मिन् बला-
दमुञ्चति भवत्पदे न्यपति पाहि पाहीति तै: ।
तदा खलु पदा भवान् समुपगम्य पस्पर्श तं
बभौ स च निजां तनुं समुपसाद्य वैद्यधरीम् ॥२॥
ஸமுந்முக₂மதோ₂ல்முகைரபி₄ஹதே(அ)பி தஸ்மிந் ப₃லா-
த₃முஞ்சதி ப₄வத்பதே₃ ந்யபதி பாஹி பாஹீதி தை: |
ததா₃ க₂லு பதா₃ ப₄வாந் ஸமுபக₃ம்ய பஸ்பர்ஶ தம்
ப₃பௌ₄ ஸ ச நிஜாம் தநும் ஸமுபஸாத்₃ய வைத்₃யாத₄ரீம் || 2||
2. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. உடனே கோபர்கள் தங்களைச் சரணடைந்து, காக்க வேண்டும் என்று கதறினார்கள். தாங்கள் அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தீர்கள். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது.
सुदर्शनधर प्रभो ननु सुदर्शनाख्योऽस्म्यहं
मुनीन् क्वचिदपाहसं त इह मां व्यधुर्वाहसम् ।
भवत्पदसमर्पणादमलतां गतोऽस्मीत्यसौ
स्तुवन् निजपदं ययौ व्रजपदं च गोपा मुदा ॥३॥
ஸுத₃ர்ஶநத₄ர ப்ரபோ₄ நநு ஸுத₃ர்ஶநாக்₂யோ(அ)ஸ்ம்யஹம்
முநீந் க்வசித₃பாஹஸம் த இஹ மாம் வ்யது₄ர்வாஹஸம் |
ப₄வத்பத₃ஸமர்பணாத₃மலதாம் க₃தோ(அ)ஸ்மீத்யஸௌ
ஸ்துவந் நிஜபத₃ம் யயௌ வ்ரஜபத₃ம் ச கோ₃பா முதா₃ || 3||
3. சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன் என்று கூறி அவன் வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.
कदापि खलु सीरिणा विहरति त्वयि स्त्रीजनै-
र्जहार धनदानुग: स किल शङ्खचूडोऽबला: ।
अतिद्रुतमनुद्रुतस्तमथ मुक्तनारीजनं
रुरोजिथ शिरोमणिं हलभृते च तस्याददा: ॥४॥
கதா₃பி க₂லு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீஜநை-
ர்ஜஹார த₄நதா₃நுக₃: ஸ கில ஶங்க₂சூடோ₃(அ)ப₃லா: |
அதித்₃ருதமநுத்₃ருதஸ்தமத₂ முக்தநாரீஜநம்
ருரோஜித₂ ஶிரோமணிம் ஹலப்₄ருதே ச தஸ்யாத₃தா₃: || 4||
4. ஒரு சமயம், தாங்கள் பலராமனோடும், கோபியர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தபோது, குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளைக் கவர்ந்து சென்றான். உடனே அவனைப் பின்தொடர்ந்தீர்கள். தாங்கள் அவனை வதம் செய்து, கோபிகைகளை மீட்டு, அவனுடைய சூடாமணியை எடுத்து பலராமனிடம் தந்தீர்கள்.
दिनेषु च सुहृज्जनैस्सह वनेषु लीलापरं
मनोभवमनोहरं रसितवेणुनादामृतम् ।
भवन्तममरीदृशाममृतपारणादायिनं
विचिन्त्य किमु नालपन् विरहतापिता गोपिका: ॥५॥
தி₃நேஷு ச ஸுஹ்ருஜ்ஜநைஸ்ஸஹ வநேஷு லீலாபரம்
மநோப₄வமநோஹரம் ரஸிதவேணுநாதா₃ம்ருதம் |
ப₄வந்தமமரீத்₃ருஶாமம்ருதபாரணாதா₃யிநம்
விசிந்த்ய கிமு நாலபந் விரஹதாபிதா கோ₃பிகா: || 5||
5. பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடினீர்கள். மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தீர்கள். உம்மைப் பிரிந்த கோபியர், தங்களை நினைத்து பலவிதமாகப் புலம்பினார்கள்.
भोजराजभृतकस्त्वथ कश्चित् कष्टदुष्टपथदृष्टिररिष्ट: ।
निष्ठुराकृतिरपष्ठुनिनादस्तिष्ठते स्म भवते वृषरूपी ॥६॥
போ₄ஜராஜப்₄ருதகஸ்த்வத₂ கஶ்சித் கஷ்டது₃ஷ்டபத₂த்₃ருஷ்டிரரிஷ்ட: |
நிஷ்டு₂ராக்ருதிரபஷ்டு₂நிநாத₃ஸ்திஷ்ட₂தே ஸ்ம ப₄வதே வ்ருஷரூபீ || 6||
6. கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு தங்கள் முன் வந்தான்.
शाक्वरोऽथ जगतीधृतिहारी मूर्तिमेष बृहतीं प्रदधान: ।
पङ्क्तिमाशु परिघूर्ण्य पशूनां छन्दसां निधिमवाप भवन्तम् ॥७॥
ஶாக்வரோ(அ)த₂ ஜக₃தீத்₄ருதிஹாரீ மூர்திமேஷ ப்₃ருஹதீம் ப்ரத₃தா₄ந: |
பங்க்திமாஶு பரிகூ₄ர்ண்ய பஶூநாம் ச₂ந்த₃ஸாம் நிதி₄மவாப ப₄வந்தம் || 7||
7. அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு வேதங்களின் இருப்பிடமான தங்களிடம் வந்தான்.
तुङ्गशृङ्गमुखमाश्वभियन्तं संगृहय्य रभसादभियं तम् ।
भद्ररूपमपि दैत्यमभद्रं मर्दयन्नमदय: सुरलोकम् ॥८॥
துங்க₃ஶ்ருங்க₃முக₂மாஶ்வபி₄யந்தம் ஸம்க்₃ருஹய்ய ரப₄ஸாத₃பி₄யம் தம் |
ப₄த்₃ரரூபமபி தை₃த்யமப₄த்₃ரம் மர்த₃யந்நமத₃ய: ஸுரலோகம் || 8||
8. நீண்ட கொம்புடன் தங்கள் எதிரே வந்தான். அவனைப் பிடித்துக் கொன்றீர்கள். தேவர்கள் மகிழ்ந்தனர்.
चित्रमद्य भगवन् वृषघातात् सुस्थिराऽजनि वृषस्थितिरुर्व्याम् ।
वर्धते च वृषचेतसि भूयान् मोद इत्यभिनुतोऽसि सुरैस्त्वम् ॥९॥
சித்ரமத்₃ய ப₄க₃வந் வ்ருஷகா₄தாத் ஸுஸ்தி₂ரா(அ)ஜநி வ்ருஷஸ்தி₂திருர்வ்யாம் |
வர்த₄தே ச வ்ருஷசேதஸி பூ₄யாந் மோத₃ இத்யபி₄நுதோ(அ)ஸி ஸுரைஸ்த்வம் || 9||
9. வ்ருஷமான அவனைக் கொன்று, உலகில் தர்மத்தைக் காத்தீர்கள் என்று தேவர்கள் துதித்தனர். (வ்ருஷம் என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு காளை என்றும், தர்மம் என்றும் பொருள்).
औक्षकाणि परिधावत दूरं वीक्ष्यतामयमिहोक्षविभेदी ।
इत्थमात्तहसितै: सह गोपैर्गेहगस्त्वमव वातपुरेश ॥१०॥
ஔக்ஷகாணி பரிதா₄வத தூ₃ரம் வீக்ஷ்யதாமயமிஹோக்ஷவிபே₄தீ₃ |
இத்த₂மாத்தஹஸிதை: ஸஹ கோ₃பைர்கே₃ஹக₃ஸ்த்வமவ வாதபுரேஶ || 10||
10. இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்களுடன் வீடு திரும்பினீர்கள். பகவானே! கொடிய நோயிலிருந்து என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment