Saturday, May 17, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 78, ஸ்ரீ நாராயணீயம் 78வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -78
துவாரகா வாழ்க்கை, ருக்மிணியின் சேதி

त्रिदिववर्धकिवर्धितकौशलं त्रिदशदत्तसमस्तविभूतिमत् ।
जलधिमध्यगतं त्वमभूषयो नवपुरं वपुरञ्चितरोचिषा ॥१॥

த்ரிதி₃வவர்த₄கிவர்தி₄தகௌஶலம் த்ரித₃ஶத₃த்தஸமஸ்தவிபூ₄திமத் |
ஜலதி₄மத்₄யக₃தம் த்வமபூ₄ஷயோ நவபுரம் வபுரஞ்சிதரோசிஷா || 1||

1. விஸ்வாகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, தங்களுடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது.

ददुषि रेवतभूभृति रेवतीं हलभृते तनयां विधिशासनात् ।
महितमुत्सवघोषमपूपुष: समुदितैर्मुदितै: सह यादवै: ॥२॥

த₃து₃ஷி ரேவதபூ₄ப்₄ருதி ரேவதீம் ஹலப்₄ருதே தநயாம் விதி₄ஶாஸநாத் |
மஹிதமுத்ஸவகோ₄ஷமபூபுஷ: ஸமுதி₃தைர்முதி₃தை: ஸஹ யாத₃வை: || 2||

2. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன்,  தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள்.

अथ विदर्भसुतां खलु रुक्मिणीं प्रणयिनीं त्वयि देव सहोदर: ।
स्वयमदित्सत चेदिमहीभुजे स्वतमसा तमसाधुमुपाश्रयन् ॥३॥

அத₂ வித₃ர்ப₄ஸுதாம் க₂லு ருக்மிணீம் ப்ரணயிநீம் த்வயி தே₃வ ஸஹோத₃ர: |
ஸ்வயமதி₃த்ஸத சேதி₃மஹீபு₄ஜே ஸ்வதமஸா தமஸாது₄முபாஶ்ரயந் || 3||

3. விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி உம்மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

चिरधृतप्रणया त्वयि बालिका सपदि काङ्क्षितभङ्गसमाकुला ।
तव निवेदयितुं द्विजमादिशत् स्वकदनं कदनङ्गविनिर्मितं ॥४॥

சிரத்₄ருதப்ரணயா த்வயி பா₃லிகா ஸபதி₃ காங்க்ஷிதப₄ங்க₃ஸமாகுலா |
தவ நிவேத₃யிதும் த்₃விஜமாதி₃ஶத் ஸ்வகத₃நம் கத₃நங்க₃விநிர்மிதம் || 4||

4. ருக்மிணி உம்மிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். மன்மதனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை உம்மிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரைத் தங்களிடம் தூது அனுப்பினாள்.

द्विजसुतोऽपि च तूर्णमुपाययौ तव पुरं हि दुराशदुरासदम् ।
मुदमवाप च सादरपूजित: स भवता भवतापहृता स्वयम् ॥५॥

த்₃விஜஸுதோ(அ)பி ச தூர்ணமுபாயயௌ தவ புரம் ஹி து₃ராஶது₃ராஸத₃ம் |
முத₃மவாப ச ஸாத₃ரபூஜித: ஸ ப₄வதா ப₄வதாபஹ்ருதா ஸ்வயம் || 5||

5. அந்த அந்தணர், தீயவர்களால் அடையமுடியாத தங்கள் நகரத்தை, விரைவாக அடைந்தார். ஸம்ஸாரத்தில் உழலும் மக்களின் துயரத்தைப் போக்கும் நீர், அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தீர். அவரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

स च भवन्तमवोचत कुण्डिने नृपसुता खलु राजति रुक्मिणी ।
त्वयि समुत्सुकया निजधीरतारहितया हि तया प्रहितोऽस्म्यहम् ॥६॥

ஸ ச ப₄வந்தமவோசத குண்டி₃நே ந்ருபஸுதா க₂லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜதீ₄ரதாரஹிதயா ஹி தயா ப்ரஹிதோ(அ)ஸ்ம்யஹம் || 6||

6. அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

तव हृताऽस्मि पुरैव गुणैरहं हरति मां किल चेदिनृपोऽधुना ।
अयि कृपालय पालय मामिति प्रजगदे जगदेकपते तया ॥७॥

தவ ஹ்ருதா(அ)ஸ்மி புரைவ கு₃ணைரஹம் ஹரதி மாம் கில சேதி₃ந்ருபோ(அ)து₄நா |
அயி க்ருபாலய பாலய மாமிதி ப்ரஜக₃தே₃ ஜக₃தே₃கபதே தயா || 7||

7. “உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் தங்களிடம் தெரிவித்தார்.

अशरणां यदि मां त्वमुपेक्षसे सपदि जीवितमेव जहाम्यहम् ।
इति गिरा सुतनोरतनोत् भृशं सुहृदयं हृदयं तव कातरम् ॥८॥

அஶரணாம் யதி₃ மாம் த்வமுபேக்ஷஸே ஸபதி₃ ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி₃ரா ஸுதநோரதநோத் ப்₄ருஶம் ஸுஹ்ருத₃யம் ஹ்ருத₃யம் தவ காதரம் || 8||

8. “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், தங்கள் மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது.

अकथयस्त्वमथैनमये सखे तदधिका मम मन्मथवेदना ।
नृपसमक्षमुपेत्य हराम्यहं तदयि तां दयितामसितेक्षणाम् ॥९॥

அகத₂யஸ்த்வமதை₂நமயே ஸகே₂ தத₃தி₄கா மம மந்மத₂வேத₃நா |
ந்ருபஸமக்ஷமுபேத்ய ஹராம்யஹம் தத₃யி தாம் த₃யிதாமஸிதேக்ஷணாம் || 9||

9. பின்னர் தாங்கள் அந்த அந்தணரிடம், “ அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினீர்கள்.

प्रमुदितेन च तेन समं तदा रथगतो लघु कुण्डिनमेयिवान् ।
गुरुमरुत्पुरनायक मे भवान् वितनुतां तनुतां निखिलापदाम् ॥१०॥

ப்ரமுதி₃தேந ச தேந ஸமம் ததா₃ ரத₂க₃தோ லகு₄ குண்டி₃நமேயிவாந் |
கு₃ருமருத்புரநாயக மே ப₄வாந் விதநுதாம் தநுதாம் நிகி₂லாபதா₃ம் || 10||

10. மிகவும் களிப்படைந்த அந்த அந்தணருடன் ரதத்தில் ஏறிக்கொண்டு. சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தீர்கள். குருவாயூர் நாதனே! தாங்கள் என் எல்லா நோய்களையும் போக்கி, என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.

No comments:

Post a Comment