த³ஶகம் -71
கேசீ வதம், வ்யோமாசுர வதம்
यत्नेषु सर्वेष्वपि नावकेशी केशी स भोजेशितुरिष्टबन्धु: ।
त्वां सिन्धुजावाप्य इतीव मत्वा सम्प्राप्तवान् सिन्धुजवाजिरूप: ॥१॥
யத்நேஷு ஸர்வேஷ்வபி நாவகேஶீ கேஶீ ஸ போ₄ஜேஶிதுரிஷ்டப₃ந்து₄: |
த்வாம் ஸிந்து₄ஜாவாப்ய இதீவ மத்வா ஸம்ப்ராப்தவாந் ஸிந்து₄ஜவாஜிரூப: || 1||
1. கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. ஸிந்துவில் (பாற்கடலில்) பிறந்த மகாலக்ஷ்மியால் விரும்பப்படுபவரான தங்களை, ஸிந்து தேசத்தில் பிறந்த குதிரை வடிவில் வந்தடைந்தான்.
गन्धर्वतामेष गतोऽपि रूक्षैर्नादै: समुद्वेजितसर्वलोक: ।
भवद्विलोकावधि गोपवाटीं प्रमर्द्य पाप: पुनरापतत्त्वाम् ॥२॥
க₃ந்த₄ர்வதாமேஷ க₃தோ(அ)பி ரூக்ஷைர்நாதை₃: ஸமுத்₃வேஜிதஸர்வலோக: |
ப₄வத்₃விலோகாவதி₄ கோ₃பவாடீம் ப்ரமர்த்₃ய பாப: புநராபதத்த்வாம் || 2||
2. அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு தங்களிடம் வந்தான்.
तार्क्ष्यार्पिताङ्घ्रेस्तव तार्क्ष्य एष चिक्षेप वक्षोभुवि नाम पादम् ।
भृगो: पदाघातकथां निशम्य स्वेनापि शक्यं तदितीव मोहात् ॥३॥
தார்க்ஷ்யார்பிதாங்க்₄ரேஸ்தவ தார்க்ஷ்ய ஏஷ சிக்ஷேப வக்ஷோபு₄வி நாம பாத₃ம் |
ப்₄ருகோ₃: பதா₃கா₄தகதா₂ம் நிஶம்ய ஸ்வேநாபி ஶக்யம் ததி₃தீவ மோஹாத் || 3||
3. கருடனிடத்தில் (தார்க்ஷ்ய) பாதத்தை அர்ப்பித்த தங்களுடைய மார்பில் இந்தக் குதிரை (தார்க்ஷ்ய) எட்டி உதைத்தது. பிருகு முனிவர் தங்களை மார்பில் உதைத்த கதையைக் கேட்டு, தானும் அவ்வாறு செய்யலாம் என்று நினைத்தானோ?
प्रवञ्चयन्नस्य खुराञ्चलं द्रागमुञ्च चिक्षेपिथ दूरदूरम्
सम्मूर्च्छितोऽपि ह्यतिमूर्च्छितेन क्रोधोष्मणा खादितुमाद्रुतस्त्वाम् ॥४॥
ப்ரவஞ்சயந்நஸ்ய கு₂ராஞ்சலம் த்₃ராக₃முஞ்ச சிக்ஷேபித₂ தூ₃ரதூ₃ரம்
ஸம்மூர்ச்சி₂தோ(அ)பி ஹ்யதிமூர்ச்சி₂தேந க்ரோதோ₄ஷ்மணா கா₂தி₃துமாத்₃ருதஸ்த்வாம் || 4||
4. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தீர்கள். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் தங்களிடம் ஓடி வந்தான்.
त्वं वाहदण्डे कृतधीश्च वाहादण्डं न्यधास्तस्य मुखे तदानीम् ।
तद् वृद्धिरुद्धश्वसनो गतासु: सप्तीभवन्नप्ययमैक्यमागात् ॥५॥
த்வம் வாஹத₃ண்டே₃ க்ருததீ₄ஶ்ச வாஹாத₃ண்ட₃ம் ந்யதா₄ஸ்தஸ்ய முகே₂ ததா₃நீம் |
தத்₃ வ்ருத்₃தி₄ருத்₃த₄ஶ்வஸநோ க₃தாஸு: ஸப்தீப₄வந்நப்யயமைக்யமாகா₃த் || 5||
5. அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த நீர், பெரிய தடியைப் போன்ற தங்கள் கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினீர்கள். அதனால் மூச்சுத் திணறி உயிரிழந்த அந்த குதிரை வடிவெடுத்த அசுரன், தங்களிடத்திலேயே ஐக்கியம் ஆனான்.
आलम्भमात्रेण पशो: सुराणां प्रसादके नूत्न इवाश्वमेधे ।
कृते त्वया हर्षवशात् सुरेन्द्रास्त्वां तुष्टुवु: केशवनामधेयम् ॥६॥
ஆலம்ப₄மாத்ரேண பஶோ: ஸுராணாம் ப்ரஸாத₃கே நூத்ந இவாஶ்வமேதே₄ |
க்ருதே த்வயா ஹர்ஷவஶாத் ஸுரேந்த்₃ராஸ்த்வாம் துஷ்டுவு: கேஶவநாமதே₄யம் || 6||
6. அஸ்வமேத யாகத்தில் குதிரையின் அங்கங்களை யாகத்தீயில் இடுவது போல, இந்தக் கேசீ என்ற குதிரை வேறு விதமாகக் கொல்லப்பட்டது என்று தேவர்கள் மகிழ்ந்தனர். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், உமக்குக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர்.
कंसाय ते शौरिसुतत्वमुक्त्वा तं तद्वधोत्कं प्रतिरुध्य वाचा।
प्राप्तेन केशिक्षपणावसाने श्रीनारदेन त्वमभिष्टुतोऽभू: ॥७॥
கம்ஸாய தே ஶௌரிஸுதத்வமுக்த்வா தம் தத்₃வதோ₄த்கம் ப்ரதிருத்₄ய வாசா|
ப்ராப்தேந கேஶிக்ஷபணாவஸாநே ஶ்ரீநாரதே₃ந த்வமபி₄ஷ்டுதோ(அ)பூ₄: || 7||
7. நாரதர், கம்ஸனிடம் தாங்கள் வசுதேவரின் மகன் என்று கூறினார். அதைக் கேட்ட கம்ஸன் வசுதேவரைக் கொல்ல முயன்றபோது நாரதர் தடுத்தார். பின்னர், அசுரன் கேசீ வதம் செய்யப்பட்டதும் தங்களைத் துதித்தார்.
कदापि गोपै: सह काननान्ते निलायनक्रीडनलोलुपं त्वाम् ।
मयात्मज: प्राप दुरन्तमायो व्योमाभिधो व्योमचरोपरोधी ॥८॥
கதா₃பி கோ₃பை: ஸஹ காநநாந்தே நிலாயநக்ரீட₃நலோலுபம் த்வாம் |
மயாத்மஜ: ப்ராப து₃ரந்தமாயோ வ்யோமாபி₄தோ₄ வ்யோமசரோபரோதீ₄ || 8||
8. ஒரு நாள் இடையர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான்.
स चोरपालायितवल्लवेषु चोरायितो गोपशिशून् पशूंश्च
गुहासु कृत्वा पिदधे शिलाभिस्त्वया च बुद्ध्वा परिमर्दितोऽभूत् ॥९॥
ஸ சோரபாலாயிதவல்லவேஷு சோராயிதோ கோ₃பஶிஶூந் பஶூம்ஶ்ச
கு₃ஹாஸு க்ருத்வா பித₃தே₄ ஶிலாபி₄ஸ்த்வயா ச பு₃த்₃த்₄வா பரிமர்தி₃தோ(அ)பூ₄த் || 9||
9. திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த நீர் அவனைக் கொன்றீர்.
एवं विधैश्चाद्भुतकेलिभेदैरानन्दमूर्च्छामतुलां व्रजस्य ।
पदे पदे नूतनयन्नसीमां परात्मरूपिन् पवनेश पाया: ॥१०॥
ஏவம் விதை₄ஶ்சாத்₃பு₄தகேலிபே₄தை₃ராநந்த₃மூர்ச்சா₂மதுலாம் வ்ரஜஸ்ய |
பதே₃ பதே₃ நூதநயந்நஸீமாம் பராத்மரூபிந் பவநேஶ பாயா: || 10||
10. இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினீர்கள். குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பனே! என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment