Monday, May 26, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 87, ஸ்ரீ நாராயணீயம் 87வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -87
குசேலோபாக்யானம்

कुचेलनामा भवत: सतीर्थ्यतां गत: स सान्दीपनिमन्दिरे द्विज: ।
त्वदेकरागेण धनादिनिस्स्पृहो दिनानि निन्ये प्रशमी गृहाश्रमी ॥१॥

குசேலநாமா ப₄வத: ஸதீர்த்₂யதாம் க₃த: ஸ ஸாந்தீ₃பநிமந்தி₃ரே த்₃விஜ: |
த்வதே₃கராகே₃ண த₄நாதி₃நிஸ்ஸ்ப்ருஹோ தி₃நாநி நிந்யே ப்ரஶமீ க்₃ருஹாஶ்ரமீ || 1||

1. ஸாந்தீபனி முனிவரிடம் தாங்கள் குருகுலம் பயின்றபோது, குசேலர் என்ற பிராமணர் தங்களுடன் பயின்றார். கிருஹஸ்தனான அவர் உம் ஒருவரிடத்திலேயே பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார்.

समानशीलाऽपि तदीयवल्लभा तथैव नो चित्तजयं समेयुषी ।
कदाचिदूचे बत वृत्तिलब्धये रमापति: किं न सखा निषेव्यते ॥२॥

ஸமாநஶீலா(அ)பி ததீ₃யவல்லபா₄ ததை₂வ நோ சித்தஜயம் ஸமேயுஷீ |
கதா₃சிதூ₃சே ப₃த வ்ருத்திலப்₃த₄யே ரமாபதி: கிம் ந ஸகா₂ நிஷேவ்யதே || 2||

2. அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். ஆனால் ஆசையற்ற நிலையை அடையவில்லை. ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள்.

इतीरितोऽयं प्रियया क्षुधार्तया जुगुप्समानोऽपि धने मदावहे ।
तदा त्वदालोकनकौतुकाद्ययौ वहन् पटान्ते पृथुकानुपायनम् ॥३॥

இதீரிதோ(அ)யம் ப்ரியயா க்ஷுதா₄ர்தயா ஜுகு₃ப்ஸமாநோ(அ)பி த₄நே மதா₃வஹே |
ததா₃ த்வதா₃லோகநகௌதுகாத்₃யயௌ வஹந் படாந்தே ப்ருது₂காநுபாயநம் || 3||

3. பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் ஒரு பிடி அவலை முடிந்துகொண்டு, தங்களுக்குக் காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.

गतोऽयमाश्चर्यमयीं भवत्पुरीं गृहेषु शैब्याभवनं समेयिवान् ।
प्रविश्य वैकुण्ठमिवाप निर्वृतिं तवातिसम्भावनया तु किं पुन: ॥४॥

க₃தோ(அ)யமாஶ்சர்யமயீம் ப₄வத்புரீம் க்₃ருஹேஷு ஶைப்₃யாப₄வநம் ஸமேயிவாந் |
ப்ரவிஶ்ய வைகுண்ட₂மிவாப நிர்வ்ருதிம் தவாதிஸம்பா₄வநயா து கிம் புந: || 4||

4. ஆச்சர்யம் மிக்க தங்களது நகரத்தை அடைந்தார். தங்கள் மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். தாங்கள் அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார்.

प्रपूजितं तं प्रियया च वीजितं करे गृहीत्वाऽकथय: पुराकृतम् ।
यदिन्धनार्थं गुरुदारचोदितैरपर्तुवर्ष तदमर्षि कानने ॥५॥

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம் கரே க்₃ருஹீத்வா(அ)கத₂ய: புராக்ருதம் |
யதி₃ந்த₄நார்த₂ம் கு₃ருதா₃ரசோதி₃தைரபர்துவர்ஷ தத₃மர்ஷி காநநே || 5||

5. அன்புடன் வரவேற்கப்பட்ட அவருக்கு உமது மனைவி விசிறி வீசினாள். தாங்கள் அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தீர்கள். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினீர்கள்.

त्रपाजुषोऽस्मात् पृथुकं बलादथ प्रगृह्य मुष्टौ सकृदाशिते त्वया ।
कृतं कृतं नन्वियतेति संभ्रमाद्रमा किलोपेत्य करं रुरोध ते ॥६॥

த்ரபாஜுஷோ(அ)ஸ்மாத் ப்ருது₂கம் ப₃லாத₃த₂ ப்ரக்₃ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா₃ஶிதே த்வயா |
க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்₄ரமாத்₃ரமா கிலோபேத்ய கரம் ருரோத₄ தே || 6||

6. கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டீர். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி உம்முடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்).

भक्तेषु भक्तेन स मानितस्त्वया पुरीं वसन्नेकनिशां महासुखम् ।
बतापरेद्युर्द्रविणं विना ययौ विचित्ररूपस्तव खल्वनुग्रह: ॥७॥

ப₄க்தேஷு ப₄க்தேந ஸ மாநிதஸ்த்வயா புரீம் வஸந்நேகநிஶாம் மஹாஸுக₂ம் |
ப₃தாபரேத்₃யுர்த்₃ரவிணம் விநா யயௌ விசித்ரரூபஸ்தவ க₂ல்வநுக்₃ரஹ: || 7||

7. பக்தர்களுக்கு அடியவனான தங்களால் குசேலர் மிகவும் உபசரிக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு உம்முடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். தாங்கள் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் விதமே மிக ஆச்சர்யமாகும்!

यदि ह्ययाचिष्यमदास्यदच्युतो वदामि भार्यां किमिति व्रजन्नसौ ।
त्वदुक्तिलीलास्मितमग्नधी: पुन: क्रमादपश्यन्मणिदीप्रमालयम् ॥८॥

யதி₃ ஹ்யயாசிஷ்யமதா₃ஸ்யத₃ச்யுதோ வதா₃மி பா₄ர்யாம் கிமிதி வ்ரஜந்நஸௌ |
த்வது₃க்திலீலாஸ்மிதமக்₃நதீ₄: புந: க்ரமாத₃பஶ்யந்மணிதீ₃ப்ரமாலயம் || 8||

8. பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் பகவான் கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்கத் தங்களது புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார்.

किं मार्गविभ्रंश इति भ्रंमन् क्षणं गृहं प्रविष्ट: स ददर्श वल्लभाम् ।
सखीपरीतां मणिहेमभूषितां बुबोध च त्वत्करुणां महाद्भुताम् ॥९॥

கிம் மார்க₃விப்₄ரம்ஶ இதி ப்₄ரம்மந் க்ஷணம் க்₃ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த₃த₃ர்ஶ வல்லபா₄ம் |
ஸகீ₂பரீதாம் மணிஹேமபூ₄ஷிதாம் பு₃போ₃த₄ ச த்வத்கருணாம் மஹாத்₃பு₄தாம் || 9||

9. க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். தங்கள் கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.

स रत्नशालासु वसन्नपि स्वयं समुन्नमद्भक्तिभरोऽमृतं ययौ ।
त्वमेवमापूरितभक्तवाञ्छितो मरुत्पुराधीश हरस्व मे गदान् ॥१०॥

ஸ ரத்நஶாலாஸு வஸந்நபி ஸ்வயம் ஸமுந்நமத்₃ப₄க்திப₄ரோ(அ)ம்ருதம் யயௌ |
த்வமேவமாபூரிதப₄க்தவாஞ்சி₂தோ மருத்புராதீ₄ஶ ஹரஸ்வ மே க₃தா₃ந் || 10||

10. ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் உம்மிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார். பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றும் குருவாயூரப்பனே! என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.

No comments:

Post a Comment