Thursday, May 15, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 76, ஸ்ரீ நாராயணீயம் 76வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -76
கோபியருக்கு உத்தவர் மூலம் சேதி அனுப்புதல் 

गत्वा सान्दीपनिमथ चतुष्षष्टिमात्रैरहोभि:
सर्वज्ञस्त्वं सह मुसलिना सर्वविद्या गृहीत्वा ।
पुत्रं नष्टं यमनिलयनादाहृतं दक्षिणार्थं
दत्वा तस्मै निजपुरमगा नादयन् पाञ्चजन्यम् ॥१॥

க₃த்வா ஸாந்தீ₃பநிமத₂ சதுஷ்ஷஷ்டிமாத்ரைரஹோபி₄:
ஸர்வஜ்ஞஸ்த்வம் ஸஹ முஸலிநா ஸர்வவித்₃யா க்₃ருஹீத்வா | 
புத்ரம் நஷ்டம் யமநிலயநாதா₃ஹ்ருதம் த₃க்ஷிணார்த₂ம்
த₃த்வா தஸ்மை நிஜபுரமகா₃ நாத₃யந் பாஞ்சஜந்யம் || 1||

1. பிறகு பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றீர். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தீர்கள். பாஞ்சஜன்யம் என்ற தங்கள் சங்கை ஊதிக்கொண்டு மதுரா நகரத்தை அடைந்தீர்.

स्मृत्वा स्मृत्वा पशुपसुदृश: प्रेमभारप्रणुन्ना:
कारुण्येन त्वमपि विवश: प्राहिणोरुद्धवं तम् ।
किञ्चामुष्मै परमसुहृदे भक्तवर्याय तासां
भक्त्युद्रेकं सकलभुवने दुर्लभं दर्शयिष्यन् ॥२॥

ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பஶுபஸுத்₃ருஶ: ப்ரேமபா₄ரப்ரணுந்நா:
காருண்யேந த்வமபி விவஶ: ப்ராஹிணோருத்₃த₄வம் தம் | 
கிஞ்சாமுஷ்மை பரமஸுஹ்ருதே₃ ப₄க்தவர்யாய தாஸாம்
ப₄க்த்யுத்₃ரேகம் ஸகலபு₄வநே து₃ர்லப₄ம் த₃ர்ஶயிஷ்யந் || 2||

2. கோபிகைகள், அன்பினால் தங்களை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அவர்கள் மீது கருணை கொண்ட தாங்கள், உமது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினீர். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினீர்.

त्वन्माहात्म्यप्रथिमपिशुनं गोकुलं प्राप्य सायं
त्वद्वार्ताभिर्बहु स रमयामास नन्दं यशोदाम् ।
प्रातर्द्दृष्ट्वा मणिमयरथं शङ्किता: पङ्कजाक्ष्य:
श्रुत्वा प्राप्तं भवदनुचरं त्यक्तकार्या: समीयु: ॥३॥

த்வந்மாஹாத்ம்யப்ரதி₂மபிஶுநம் கோ₃குலம் ப்ராப்ய ஸாயம்
த்வத்₃வார்தாபி₄ர்ப₃ஹு ஸ ரமயாமாஸ நந்த₃ம் யஶோதா₃ம் | 
ப்ராதர்த்₃த்₃ருஷ்ட்வா மணிமயரத₂ம் ஶங்கிதா: பங்கஜாக்ஷ்ய:
ஶ்ருத்வா ப்ராப்தம் ப₄வத₃நுசரம் த்யக்தகார்யா: ஸமீயு: || 3||

3. உம்முடைய மகத்துவத்தினால் செழுமையாய் இருந்த கோகுலத்திற்கு உத்தவர் மாலையில் சென்றார். உம்மைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். காலையில், தேர் நிற்பதைப் பார்த்த தாமரை போன்ற கண்களுடைய கோகுலத்துப் பெண்கள், தங்கள் நண்பரான உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர்.

दृष्ट्वा चैनं त्वदुपमलसद्वेषभूषाभिरामं
स्मृत्वा स्मृत्वा तव विलसितान्युच्चकैस्तानि तानि ।
रुद्धालापा: कथमपि पुनर्गद्गदां वाचमूचु:
सौजन्यादीन् निजपरभिदामप्यलं विस्मरन्त्य: ॥४॥

த்₃ருஷ்ட்வா சைநம் த்வது₃பமலஸத்₃வேஷபூ₄ஷாபி₄ராமம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதாந்யுச்சகைஸ்தாநி தாநி | 
ருத்₃தா₄லாபா: கத₂மபி புநர்க₃த்₃க₃தா₃ம் வாசமூசு:
ஸௌஜந்யாதீ₃ந் நிஜபரபி₄தா₃மப்யலம் விஸ்மரந்த்ய: || 4||

4. தங்களைப் போன்றே உத்தவர் அணிந்திருந்த அழகான ஆடைகள் மற்றும் ஆபரணங்களைப் பார்த்த அவர்கள், உம்முடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். மற்றவர்களுக்கும், தமக்கும் உள்ள பேதங்களை மறந்தார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள்.

श्रीमान् किं त्वं पितृजनकृते प्रेषितो निर्दयेन
क्वासौ कान्तो नगरसुदृशां हा हरे नाथ पाया: ।
आश्लेषाणाममृतवपुषो हन्त ते चुम्बनाना-
मुन्मादानां कुहकवचसां विस्मरेत् कान्त का वा ॥५॥

ஶ்ரீமாந் கிம் த்வம் பித்ருஜநக்ருதே ப்ரேஷிதோ நிர்த₃யேந
க்வாஸௌ காந்தோ நக₃ரஸுத்₃ருஶாம் ஹா ஹரே நாத₂ பாயா: |
ஆஶ்லேஷாணாமம்ருதவபுஷோ ஹந்த தே சும்ப₃நாநா-
முந்மாதா₃நாம் குஹகவசஸாம் விஸ்மரேத் காந்த கா வா || 5||

5. உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்? என்று அரற்றினார்கள்.

रासक्रीडालुलितललितं विश्लथत्केशपाशं
मन्दोद्भिन्नश्रमजलकणं लोभनीयं त्वदङ्गम् ।
कारुण्याब्धे सकृदपि समालिङ्गितुं दर्शयेति
प्रेमोन्मादाद्भुवनमदन त्वत्प्रियास्त्वां विलेपु: ॥६॥

ராஸக்ரீடா₃லுலிதலலிதம் விஶ்லத₂த்கேஶபாஶம்
மந்தோ₃த்₃பி₄ந்நஶ்ரமஜலகணம் லோப₄நீயம் த்வத₃ங்க₃ம் | 
காருண்யாப்₃தே₄ ஸக்ருத₃பி ஸமாலிங்கி₃தும் த₃ர்ஶயேதி
ப்ரேமோந்மாதா₃த்₃பு₄வநமத₃ந த்வத்ப்ரியாஸ்த்வாம் விலேபு: || 6||

6. கருணைக் கடலே! மன்மதனைப் போன்ற அழகனே! ராஸக்ரீடையினால் கலைந்த கேசத்துடன், வாடி வியர்த்திருக்கும் தங்கள் திருமேனியை ஒரு முறையாவது தழுவ மாட்டோமா? என்று புலம்பினார்கள்.

एवंप्रायैर्विवशवचनैराकुला गोपिकास्ता-
स्त्वत्सन्देशै: प्रकृतिमनयत् सोऽथ विज्ञानगर्भै: ।
भूयस्ताभिर्मुदितमतिभिस्त्वन्मयीभिर्वधूभि-
स्तत्तद्वार्तासरसमनयत् कानिचिद्वासराणि ॥७॥

ஏவம்ப்ராயைர்விவஶவசநைராகுலா கோ₃பிகாஸ்தா-
ஸ்த்வத்ஸந்தே₃ஶை: ப்ரக்ருதிமநயத் ஸோ(அ)த₂ விஜ்ஞாநக₃ர்பை₄: | 
பூ₄யஸ்தாபி₄ர்முதி₃தமதிபி₄ஸ்த்வந்மயீபி₄ர்வதூ₄பி₄-
ஸ்தத்தத்₃வார்தாஸரஸமநயத் காநிசித்₃வாஸராணி || 7||

7. இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்துள்ள உமது சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு உமது செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களைக் கழித்தார்.

त्वत्प्रोद्गानै: सहितमनिशं सर्वतो गेहकृत्यं
त्वद्वार्तैव प्रसरति मिथ: सैव चोत्स्वापलापा: ।
चेष्टा: प्रायस्त्वदनुकृतयस्त्वन्मयं सर्वमेवं
दृष्ट्वा तत्र व्यमुहदधिकं विस्मयादुद्धवोऽयम् ॥८॥

த்வத்ப்ரோத்₃கா₃நை: ஸஹிதமநிஶம் ஸர்வதோ கே₃ஹக்ருத்யம்
த்வத்₃வார்தைவ ப்ரஸரதி மித₂: ஸைவ சோத்ஸ்வாபலாபா: | 
சேஷ்டா: ப்ராயஸ்த்வத₃நுக்ருதயஸ்த்வந்மயம் ஸர்வமேவம்
த்₃ருஷ்ட்வா தத்ர வ்யமுஹத₃தி₄கம் விஸ்மயாது₃த்₃த₄வோ(அ)யம் || 8||

8. கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, தங்கள் லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் உம்மைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் உம்மை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் தங்கள்மயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

राधाया मे प्रियतममिदं मत्प्रियैवं ब्रवीति
त्वं किं मौनं कलयसि सखे मानिनीमत्प्रियेव।
इत्याद्येव प्रवदति सखि त्वत्प्रियो निर्जने मा-
मित्थंवादैररमदयं त्वत्प्रियामुत्पलाक्षीम् ॥९॥

ராதா₄யா மே ப்ரியதமமித₃ம் மத்ப்ரியைவம் ப்₃ரவீதி
த்வம் கிம் மௌநம் கலயஸி ஸகே₂ மாநிநீமத்ப்ரியேவ| 
இத்யாத்₃யேவ ப்ரவத₃தி ஸகி₂ த்வத்ப்ரியோ நிர்ஜநே மா-
மித்த₂ம்வாதை₃ரரமத₃யம் த்வத்ப்ரியாமுத்பலாக்ஷீம் || 9||

9. உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தங்கள் பிரியையான தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார்.

एष्यामि द्रागनुपगमनं केवलं कार्यभारा-
द्विश्लेषेऽपि स्मरणदृढतासम्भवान्मास्तु खेद: ।
ब्रह्मानन्दे मिलति नचिरात् सङ्गमो वा वियोग-
स्तुल्यो व: स्यादिति तव गिरा सोऽकरोन्निर्व्यथास्ता: ॥१०॥

ஏஷ்யாமி த்₃ராக₃நுபக₃மநம் கேவலம் கார்யபா₄ரா-
த்₃விஶ்லேஷே(அ)பி ஸ்மரணத்₃ருட₄தாஸம்ப₄வாந்மாஸ்து கே₂த₃: | 
ப்₃ரஹ்மாநந்தே₃ மிலதி நசிராத் ஸங்க₃மோ வா வியோக₃-
ஸ்துல்யோ வ: ஸ்யாதி₃தி தவ கி₃ரா ஸோ(அ)கரோந்நிர்வ்யதா₂ஸ்தா: || 10||

10. “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று தாங்கள் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார்.

एवं भक्ति सकलभुवने नेक्षिता न श्रुता वा
किं शास्त्रौघै: किमिह तपसा गोपिकाभ्यो नमोऽस्तु ।
इत्यानन्दाकुलमुपगतं गोकुलादुद्धवं तं
दृष्ट्वा हृष्टो गुरुपुरपते पाहि मामामयौघात् ॥११॥

ஏவம் ப₄க்தி ஸகலபு₄வநே நேக்ஷிதா ந ஶ்ருதா வா
கிம் ஶாஸ்த்ரௌகை₄: கிமிஹ தபஸா கோ₃பிகாப்₄யோ நமோ(அ)ஸ்து | 
இத்யாநந்தா₃குலமுபக₃தம் கோ₃குலாது₃த்₃த₄வம் தம்
த்₃ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ கு₃ருபுரபதே பாஹி மாமாமயௌகா₄த் || 11||

11. இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு கோகுலத்திலிருந்து திரும்பி வந்த உத்தவரைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தாங்கள் என்னையும் வியாதியிலிருந்து காத்து அருள வேண்டும்.

No comments:

Post a Comment