த³ஶகம் -81
நரகாசுர வதம், பாரிஜாத ஹரணம்
स्निग्धां मुग्धां सततमपि तां लालयन् सत्यभामां
यातो भूय: सह खलु तया याज्ञसेनीविवाहम् ।
पार्थप्रीत्यै पुनरपि मनागास्थितो हस्तिपुर्यां
सशक्रप्रस्थं पुरमपि विभो संविधायागतोऽभू: ॥१॥
ஸ்நிக்₃தா₄ம் முக்₃தா₄ம் ஸததமபி தாம் லாலயந் ஸத்யபா₄மாம்
யாதோ பூ₄ய: ஸஹ க₂லு தயா யாஜ்ஞஸேநீவிவாஹம் |
பார்த₂ப்ரீத்யை புநரபி மநாகா₃ஸ்தி₂தோ ஹஸ்திபுர்யாம்
ஸஶக்ரப்ரஸ்த₂ம் புரமபி விபோ₄ ஸம்விதா₄யாக₃தோ(அ)பூ₄: || 1||
1. அன்புடைய, அழகிய ஸத்யபாமாவை மிகுந்த சந்தோஷமடையச் செய்தீர். ஸத்யபாமாவுடன் திரௌபதியின் திருமணத்திற்காக ஹஸ்தினாபுரம் சென்றீர். பாண்டவர்களை மகிழ்விக்க அங்கேயே சில தினங்கள் தங்கினீர். விஸ்வாகர்மாவைக் கொண்டு இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்தை உருவாக்கி, பின் துவாரகைக்குத் திரும்பினீர்.
भद्रां भद्रां भवदवरजां कौरवेणार्थ्यमानां
त्वद्वाचा तामहृत कुहनामस्करी शक्रसूनु: ।
तत्र क्रुद्धं बलमनुनयन् प्रत्यगास्तेन सार्धं
शक्रप्रस्थं प्रियसखमुदे सत्यभामासहाय: ॥२॥
ப₄த்₃ராம் ப₄த்₃ராம் ப₄வத₃வரஜாம் கௌரவேணார்த்₂யமாநாம்
த்வத்₃வாசா தாமஹ்ருத குஹநாமஸ்கரீ ஶக்ரஸூநு: |
தத்ர க்ருத்₃த₄ம் ப₃லமநுநயந் ப்ரத்யகா₃ஸ்தேந ஸார்த₄ம்
ஶக்ரப்ரஸ்த₂ம் ப்ரியஸக₂முதே₃ ஸத்யபா₄மாஸஹாய: || 2||
2. தங்களது சகோதரியான சுபத்திரையை துரியோதனன் மணந்துகொள்ள விரும்பினான். தங்களது ஆலோசனைப்படி, அர்ஜுனன் ஸன்யாசி வேடமிட்டு அவளைக் கவர்ந்து சென்றான். அதனால் பலராமன் மிகவும் கோபமடைந்தார். அவரை சமாதானம் செய்தீர். பின்னர், தங்களது நண்பனான அர்ஜுனனின் சந்தோஷத்திற்காக, பலராமனுடனும், ஸத்யபாமாவுடனும் இந்திரப்பிரஸ்தம் சென்றீர்.
तत्र क्रीडन्नपि च यमुनाकूलदृष्टां गृहीत्वा
तां कालिन्दीं नगरमगम: खाण्डवप्रीणिताग्नि: ।
भ्रातृत्रस्तां प्रणयविवशां देव पैतृष्वसेयीं
राज्ञां मध्ये सपदि जहृषे मित्रविन्दामवन्तीम् ॥३॥
தத்ர க்ரீட₃ந்நபி ச யமுநாகூலத்₃ருஷ்டாம் க்₃ருஹீத்வா
தாம் காலிந்தீ₃ம் நக₃ரமக₃ம: கா₂ண்ட₃வப்ரீணிதாக்₃நி: |
ப்₄ராத்ருத்ரஸ்தாம் ப்ரணயவிவஶாம் தே₃வ பைத்ருஷ்வஸேயீம்
ராஜ்ஞாம் மத்₄யே ஸபதி₃ ஜஹ்ருஷே மித்ரவிந்தா₃மவந்தீம் || 3||
3. யமுனைக்கரையில் கண்ட காளிந்தீயை மனைவியாக ஏற்றுக் கொண்டீர். காண்டவ வனத்தை அக்னிக்கு உணவாக அளித்துவிட்டு, துவாரகைக்குத் திரும்பினீர். தங்கள் அத்தையின் பெண்ணும், அவந்தி தேசத்து இளவரசியுமான மித்ரவிந்தை, தங்களிடம் காதல் கொண்டாள். அவள் தனது சகோதரர்களிடத்தில் பயந்து கதியற்று இருந்தாள். அவளைப் பல அரசர்கள் முன்னிலையில் கவர்ந்து சென்றீர்.
सत्यां गत्वा पुनरुदवहो नग्नजिन्नन्दनां तां
बध्वा सप्तापि च वृषवरान् सप्तमूर्तिर्निमेषात् ।
भद्रां नाम प्रददुरथ ते देव सन्तर्दनाद्या-
स्तत्सोदर्या वरद भवत: साऽपि पैतृष्वसेयी ॥४॥
ஸத்யாம் க₃த்வா புநருத₃வஹோ நக்₃நஜிந்நந்த₃நாம் தாம்
ப₃த்₄வா ஸப்தாபி ச வ்ருஷவராந் ஸப்தமூர்திர்நிமேஷாத் |
ப₄த்₃ராம் நாம ப்ரத₃து₃ரத₂ தே தே₃வ ஸந்தர்த₃நாத்₃யா-
ஸ்தத்ஸோத₃ர்யா வரத₃ ப₄வத: ஸா(அ)பி பைத்ருஷ்வஸேயீ || 4||
4. கோசல தேசத்து அரசன் நக்னஜித்தின் பெண்ணான ஸத்யை என்பவளை மணப்பதற்காக, ஏழு காளைகளை ஏழு உருவம் எடுத்து அடக்கி, பின்னர் அவளை மணந்து கொண்டீர். வரதனே! பத்ரை என்பவளை, அவளது சகோதரன் ஸந்தர்தனனும், மற்றவர்களும் தங்களுக்கு மணம் செய்து கொடுத்தனர். அவளும் தங்கள் அத்தை அருத்கீர்த்தியின் பெண்தான்.
पार्थाद्यैरप्यकृतलवनं तोयमात्राभिलक्ष्यं
लक्षं छित्वा शफरमवृथा लक्ष्मणां मद्रकन्याम् ।
अष्टावेवं तव समभवन् वल्लभास्तत्र मध्ये
शुश्रोथ त्वं सुरपतिगिरा भौमदुश्चेष्टितानि ॥५॥
பார்தா₂த்₃யைரப்யக்ருதலவநம் தோயமாத்ராபி₄லக்ஷ்யம்
லக்ஷம் சி₂த்வா ஶப₂ரமவ்ருதா₂ லக்ஷ்மணாம் மத்₃ரகந்யாம் |
அஷ்டாவேவம் தவ ஸமப₄வந் வல்லபா₄ஸ்தத்ர மத்₄யே
ஶுஶ்ரோத₂ த்வம் ஸுரபதிகி₃ரா பௌ₄மது₃ஶ்சேஷ்டிதாநி || 5||
5. அர்ஜுனன் முதலியவர்களால் கூட அடிக்க முடியாத, தண்ணீரில் மட்டுமே பிரதிபலிக்கும் மீன்குறியை அடித்து, மத்ர அரசனின் மகளான லக்ஷ்மணை என்பவளை மனைவியாக அடைந்தீர். இப்போது உமக்கு எட்டு மனைவிகள் இருந்தார்கள். நரகாசுரன் என்ற அசுரன் உலகைக் கொடுமைப்படுத்துவதாக இந்திரன் கூறக் கேட்டீர்கள்.
स्मृतायातं पक्षिप्रवरमधिरूढस्त्वमगमो
वहन्नङ्के भामामुपवनमिवारातिभवनम् ।
विभिन्दन् दुर्गाणि त्रुटितपृतनाशोणितरसै:
पुरं तावत् प्राग्ज्योतिषमकुरुथा: शोणितपुरम् ॥६॥
ஸ்ம்ருதாயாதம் பக்ஷிப்ரவரமதி₄ரூட₄ஸ்த்வமக₃மோ
வஹந்நங்கே பா₄மாமுபவநமிவாராதிப₄வநம் |
விபி₄ந்த₃ந் து₃ர்கா₃ணி த்ருடிதப்ருதநாஶோணிதரஸை:
புரம் தாவத் ப்ராக்₃ஜ்யோதிஷமகுருதா₂: ஶோணிதபுரம் || 6||
6. தாங்கள் நினைத்த மாத்திரத்தில் தங்கள் வாகனமான கருடன் பறந்து வந்தது. அதன் மீது ஏறி, ஸத்யபாமாவை மடியில் வைத்துக் கொண்டீர். பூந்தோட்டத்திற்குச் செல்வதுபோல் எதிரியான நரகாசுரனின் நகரத்திற்குச் சென்றீர். அந்நகரின் கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கி, சேனைகளை அழித்தீர். பெருகிய ரத்தத்தால் ப்ராக்ஜ்யோதிஷம் என்ற அந்த நகரை, சோணிதபுரம், அதாவது ரத்தம் நிறைந்த நகரமாக மாற்றினீர்.
मुरस्त्वां पञ्चास्यो जलधिवनमध्यादुदपतत्
स चक्रे चक्रेण प्रदलितशिरा मङ्क्षु भवता ।
चतुर्दन्तैर्दन्तावलपतिभिरिन्धानसमरं
रथाङ्गेन छित्वा नरकमकरोस्तीर्णनरकम् ॥७॥
முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி₄வநமத்₄யாது₃த₃பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத₃லிதஶிரா மங்க்ஷு ப₄வதா |
சதுர்த₃ந்தைர்த₃ந்தாவலபதிபி₄ரிந்தா₄நஸமரம்
ரதா₂ங்கே₃ந சி₂த்வா நரகமகரோஸ்தீர்ணநரகம் || 7||
7. ஐந்து முகங்களைக் கொண்ட முரன் என்ற அசுரன், கடலைப் போன்ற பெரிய மடுவிலிருந்து உம்மை எதிர்த்துப் போரிட வந்தான். தங்களது சக்ராயுதத்தால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினீர். பிறகு, நரகாசுரன், நான்கு தந்தங்களையுடைய யானைகளுடன் போர் புரிய வந்தான். நீண்ட யுத்தத்திற்குப் பின்னர், அவனுடைய தலையை சக்ராயுதத்தால் வெட்டி, அவனை நரகத்தைத் தாண்டியவனாகச் செய்து மோக்ஷம் அளித்தீர்.
स्तुतो भूम्या राज्यं सपदि भगदत्तेऽस्य तनये
गजञ्चैकं दत्वा प्रजिघयिथ नागान्निजपुरीम् ।
खलेनाबद्धानां स्वगतमनसां षोडश पुन:
सहस्राणि स्त्रीणामपि च धनराशिं च विपुलं ॥८॥
ஸ்துதோ பூ₄ம்யா ராஜ்யம் ஸபதி₃ ப₄க₃த₃த்தே(அ)ஸ்ய தநயே
க₃ஜஞ்சைகம் த₃த்வா ப்ரஜிக₄யித₂ நாகா₃ந்நிஜபுரீம் |
க₂லேநாப₃த்₃தா₄நாம் ஸ்வக₃தமநஸாம் ஷோட₃ஶ புந:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாமபி ச த₄நராஶிம் ச விபுலம் || 8||
8. நரகாசுரனின் தாயான பூமாதேவி தங்களைத் துதித்தாள். அவனுடைய பிள்ளையான பகதத்தன் என்பவனுக்கு ராஜ்ஜியத்தையும், ஒரு யானையையும் அளித்தீர். மற்ற யானைகளையும், நரகாசுரனால் சிறைப்படுத்தப்பட்ட தங்கள் மீது அன்புகொண்ட பதினாறாயிரம் பெண்களையும், அளவற்ற செல்வங்களையும், தங்கள் நகரமான துவாரகைக்கு அனுப்பினீர்.
भौमापाहृतकुण्डलं तददितेर्दातुं प्रयातो दिवं
शक्राद्यैर्महित: समं दयितया द्युस्त्रीषु दत्तह्रिया ।
हृत्वा कल्पतरुं रुषाभिपतितं जित्वेन्द्रमभ्यागम-
स्तत्तु श्रीमददोष ईदृश इति व्याख्यातुमेवाकृथा: ॥९॥
பௌ₄மாபாஹ்ருதகுண்ட₃லம் தத₃தி₃தேர்தா₃தும் ப்ரயாதோ தி₃வம்
ஶக்ராத்₃யைர்மஹித: ஸமம் த₃யிதயா த்₃யுஸ்த்ரீஷு த₃த்தஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரும் ருஷாபி₄பதிதம் ஜித்வேந்த்₃ரமப்₄யாக₃ம-
ஸ்தத்து ஶ்ரீமத₃தோ₃ஷ ஈத்₃ருஶ இதி வ்யாக்₂யாதுமேவாக்ருதா₂: || 9||
9. இந்திரனின் தாயான அதிதியிடமிருந்து நரகாசுரன் கவர்ந்து சென்ற குண்டலங்களைப் பெற்று, அதை அதிதியிடம் கொடுப்பதற்காக, ஸத்யபாமாவுடன் தேவலோகம் சென்றீர். தன் அழகால் தேவப்பெண்களையும் வெட்கப்படச் செய்யும் ஸத்யபாமாவுடன் வந்த உம்மை இந்திரனும், தேவர்களும் வரவேற்றுப் பூஜித்தார்கள். ஸத்யபாமா விரும்பியதால், கல்பவ்ருக்ஷமான பாரிஜாத விருக்ஷத்தை எடுத்துச்சென்ற தங்களை இந்திரன் எதிர்த்தான். அவனை வென்று தங்கள் இருப்பிடம் அடைந்தீர். செல்வங்களின் மேல் உள்ள ஆசையால் தீய எண்ணம் உண்டாகும் என்பதை உலகிற்கு விளக்கவே இவ்வாறு செய்தீர்.
कल्पद्रुं सत्यभामाभवनभुवि सृजन् द्व्यष्टसाहस्रयोषा:
स्वीकृत्य प्रत्यगारं विहितबहुवपुर्लालयन् केलिभेदै: ।
आश्चर्यान्नारदालोकितविविधगतिस्तत्र तत्रापि गेहे
भूय: सर्वासु कुर्वन् दश दश तनयान् पाहि वातालयेश ॥१०॥
கல்பத்₃ரும் ஸத்யபா₄மாப₄வநபு₄வி ஸ்ருஜந் த்₃வ்யஷ்டஸாஹஸ்ரயோஷா:
ஸ்வீக்ருத்ய ப்ரத்யகா₃ரம் விஹிதப₃ஹுவபுர்லாலயந் கேலிபே₄தை₃: |
ஆஶ்சர்யாந்நாரதா₃லோகிதவிவித₄க₃திஸ்தத்ர தத்ராபி கே₃ஹே
பூ₄ய: ஸர்வாஸு குர்வந் த₃ஶ த₃ஶ தநயாந் பாஹி வாதாலயேஶ || 10||
10. கல்பவ்ருக்ஷத்தை ஸத்யபாமாவின் தோட்டத்தில் நட்டீர். தங்கள் மீது அன்புகொண்ட பதினாறாயிரம் பெண்களை மனைவியராக ஏற்று, தனித் தனியே வசிக்கச் செய்து, தாங்களும் பதினாறாயிரம் உருவங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் ஆனந்தமடையச் செய்தீர். தாங்கள் ஒவ்வொரு வீட்டிலும், ஒரே நேரத்தில் தோன்றி, பூஜை முதலிய கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சர்யம் அடைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்துக் குழந்தைகள் பிறந்தன. குருவாயூரப்பனே! தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment