Thursday, May 29, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 90, ஸ்ரீ நாராயணீயம் 90வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -90
விஷ்ணுவின் மகத்துவம் 

वृकभृगुमुनिमोहिन्यम्बरीषादिवृत्ते-
ष्वयि तव हि महत्त्वं सर्वशर्वादिजैत्रम् ।
स्थितमिह परमात्मन् निष्कलार्वागभिन्नं
किमपि यदवभातं तद्धि रूपं तवैव ॥१॥

வ்ருகப்₄ருகு₃முநிமோஹிந்யம்ப₃ரீஷாதி₃வ்ருத்தே-
ஷ்வயி தவ ஹி மஹத்த்வம் ஸர்வஶர்வாதி₃ஜைத்ரம் |
ஸ்தி₂தமிஹ பரமாத்மந் நிஷ்கலார்வாக₃பி₄ந்நம்
கிமபி யத₃வபா₄தம் தத்₃தி₄ ரூபம் தவைவ || 1||

1. வ்ருகாசுரன், பிருகு, அம்பரீஷன், மோஹினி ஆகியோருடைய சரித்திரத்தின் மூலம், பிரம்மா, பரமசிவன், தேவர்கள் ஆகியோரைவிட தங்களுடைய மகத்துவம் மேலானது என்று விளங்குகிறது. பரமாத்மாவே! பூர்ணப்ரும்மமான இறைவனின் வடிவங்களான பிரும்மா, விஷ்ணு, சிவன் இவர்களிடத்தில் இருந்து வேறுபடாமல், விவரிக்க முடியாததாய் உனது ஸ்வரூபம் பிரகாசிக்கிறது.

मूर्तित्रयेश्वरसदाशिवपञ्चकं यत्
प्राहु: परात्मवपुरेव सदाशिवोऽस्मिन् ।
तत्रेश्वरस्तु स विकुण्ठपदस्त्वमेव
त्रित्वं पुनर्भजसि सत्यपदे त्रिभागे ॥२॥

மூர்தித்ரயேஶ்வரஸதா₃ஶிவபஞ்சகம் யத்
ப்ராஹு: பராத்மவபுரேவ ஸதா₃ஶிவோ(அ)ஸ்மிந் |
தத்ரேஶ்வரஸ்து ஸ விகுண்ட₂பத₃ஸ்த்வமேவ
த்ரித்வம் புநர்ப₄ஜஸி ஸத்யபதே₃ த்ரிபா₄கே₃ || 2||

2. பிரம்மா, விஷ்ணு, சிவன், ஈஸ்வரன். சதாசிவம் என்று, மூர்த்திகளை ஐந்து விதமாக பக்தர்கள் கூறுகின்றனர். சதாசிவமும் பரமாத்ம வடிவான தாங்களேயாகும். ஈஸ்வரனும் வைகுண்டத்தில் உள்ள தாங்களேயாகும். மூவுலங்களிலும் தாங்களே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவுடையவராக விளங்குகின்றீர்.

तत्रापि सात्त्विकतनुं तव विष्णुमाहु-
र्धाता तु सत्त्वविरलो रजसैव पूर्ण: ।
सत्त्वोत्कटत्वमपि चास्ति तमोविकार-
चेष्टादिकञ्च तव शङ्करनाम्नि मूर्तौ ॥३॥

தத்ராபி ஸாத்த்விகதநும் தவ விஷ்ணுமாஹு-
ர்தா₄தா து ஸத்த்வவிரலோ ரஜஸைவ பூர்ண: |
ஸத்த்வோத்கடத்வமபி சாஸ்தி தமோவிகார-
சேஷ்டாதி₃கஞ்ச தவ ஶங்கரநாம்நி மூர்தௌ || 3||

3. அந்த மும்மூர்த்திகளில், ஸத்வ குணம் நிறைந்த உம்மை விஷ்ணு என்றும், சிறிது ஸத்வ குணத்துடன் ரஜோ குணம் நிறைந்தவரை பிரம்மா என்றும், சத்வ குணம் நிறைந்திருந்தும் தமோ குணங்கள் கொண்ட செய்கை உடையவரை சங்கரன் என்றும் கூறுகின்றனர்.

तं च त्रिमूर्त्यतिगतं परपूरुषं त्वां
शर्वात्मनापि खलु सर्वमयत्वहेतो: ।
शंसन्त्युपासनविधौ तदपि स्वतस्तु
त्वद्रूपमित्यतिदृढं बहु न: प्रमाणम् ॥४॥

தம் ச த்ரிமூர்த்யதிக₃தம் பரபூருஷம் த்வாம்
ஶர்வாத்மநாபி க₂லு ஸர்வமயத்வஹேதோ: |
ஶம்ஸந்த்யுபாஸநவிதௌ₄ தத₃பி ஸ்வதஸ்து
த்வத்₃ரூபமித்யதித்₃ருட₄ம் ப₃ஹு ந: ப்ரமாணம் || 4||

4. மும்மூர்த்திகளைக் காட்டிலும் மேலானவராயும், யாவராயும் தாங்கள் விளங்குகின்றீர்கள். தங்களையே சைவர்கள் வழிபாடு செய்யும்போது பரமேஸ்வரன் என்று கூறுகின்றனர். அதுவும் தங்களுடைய வடிவமே என்ற உண்மைக்குப் பல சான்றுகள் உள்ளன.

श्रीशङ्करोऽपि भगवान् सकलेषु ताव-
त्त्वामेव मानयति यो न हि पक्षपाती ।
त्वन्निष्ठमेव स हि नामसहस्रकादि
व्याख्यात् भवत्स्तुतिपरश्च गतिं गतोऽन्ते ॥५॥

ஶ்ரீஶங்கரோ(அ)பி ப₄க₃வாந் ஸகலேஷு தாவ-
த்த்வாமேவ மாநயதி யோ ந ஹி பக்ஷபாதீ |
த்வந்நிஷ்ட₂மேவ ஸ ஹி நாமஸஹஸ்ரகாதி₃
வ்யாக்₂யாத் ப₄வத்ஸ்துதிபரஶ்ச க₃திம் க₃தோ(அ)ந்தே || 5||

5. ஆதிசங்கரர் எல்லா வடிவங்களிலும் தங்களையே போற்றுகிறார். அவர் ஒரு சார்பாகப் பேசுபவர் இல்லை. தங்களுடைய ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை செய்திருக்கிறார். உம்மைக் குறித்து ஸ்தோத்திரங்களையும் செய்து இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தவர்.

मूर्तित्रयातिगमुवाच च मन्त्रशास्त्र-
स्यादौ कलायसुषमं सकलेश्वरं त्वाम् ।
ध्यानं च निष्कलमसौ प्रणवे खलूक्त्वा
त्वामेव तत्र सकलं निजगाद नान्यम् ॥६॥

மூர்தித்ரயாதிக₃முவாச ச மந்த்ரஶாஸ்த்ர-
ஸ்யாதௌ₃ கலாயஸுஷமம் ஸகலேஶ்வரம் த்வாம் |
த்₄யாநம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே க₂லூக்த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா₃த₃ நாந்யம் || 6||

6. அவர், மந்திரங்களின் ஆரம்பத்தில், காயாம்பூ போன்று பிரகாசிப்பவராகவும், அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவராகவும் தங்களைக் கூறியுள்ளார். அவர், பிரணவத்தைப் பற்றிக் கூறும்போது நிர்க்குணமான பிரம்மத்தின் தியானம் பற்றி விவரித்து, அதற்கு உண்மைப் பொருளாகக் கல்யாண குணங்களுடன் கூடிய உம்மையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும்  அவர் கூறவில்லை.

समस्तसारे च पुराणसङ्ग्रहे
विसंशयं त्वन्महिमैव वर्ण्यते ।
त्रिमूर्तियुक्सत्यपदत्रिभागत:
परं पदं ते कथितं न शूलिन: ॥७॥

ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்₃ரஹே
விஸம்ஶயம் த்வந்மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்தியுக்ஸத்யபத₃த்ரிபா₄க₃த:
பரம் பத₃ம் தே கதி₂தம் ந ஶூலிந: || 7||

7. புராணங்களின் சாரத்தைக் கூறும் புராண ஸங்க்ரஹம் என்னும் நூலில் உமது மகத்துவமே கூறப்பட்டிருக்கிறது. மும்மூர்த்திகள் வசிக்கும் ஸத்யலோகத்தைவிட உயர்ந்ததாக உமது வைகுண்டம் விவரிக்கப்படுகிறது. சிவலோகத்தைப் பற்றிக் கூறவில்லை.

यत् ब्राह्मकल्प इह भागवतद्वितीय-
स्कन्धोदितं वपुरनावृतमीश धात्रे ।
तस्यैव नाम हरिशर्वमुखं जगाद
श्रीमाधव: शिवपरोऽपि पुराणसारे ॥८॥

யத் ப்₃ராஹ்மகல்ப இஹ பா₄க₃வதத்₃விதீய-
ஸ்கந்தோ₄தி₃தம் வபுரநாவ்ருதமீஶ தா₄த்ரே |
தஸ்யைவ நாம ஹரிஶர்வமுக₂ம் ஜகா₃த₃
ஶ்ரீமாத₄வ: ஶிவபரோ(அ)பி புராணஸாரே || 8||

8. பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில், பிரம்மாவிற்குத் தங்கள் வடிவத்தைப் பிரத்யக்ஷமாகக் காட்டினீர். சிவபக்தரான ஸ்ரீ மாதவாச்சாரியார், புராணஸாரம் என்ற தமது நூலில் அந்த வடிவத்திற்கே விஷ்ணு, சிவன் முதலிய பெயர் என்று கூறியிருக்கிறார்.

ये स्वप्रकृत्यनुगुणा गिरिशं भजन्ते
तेषां फलं हि दृढयैव तदीयभक्त्या।
व्यासो हि तेन कृतवानधिकारिहेतो:
स्कन्दादिकेषु तव हानिवचोऽर्थवादै: ॥९॥

யே ஸ்வப்ரக்ருத்யநுகு₃ணா கி₃ரிஶம் ப₄ஜந்தே
தேஷாம் ப₂லம் ஹி த்₃ருட₄யைவ ததீ₃யப₄க்த்யா|
வ்யாஸோ ஹி தேந க்ருதவாநதி₄காரிஹேதோ:
ஸ்கந்தா₃தி₃கேஷு தவ ஹாநிவசோ(அ)ர்த₂வாதை₃: || 9||

9. தன் சொந்த இயல்புக்கு ஏற்ப, சிவனிடம் தன்னை அர்ப்பணித்து பக்தியுடன் வழிபடுவோருக்கு அதற்குரிய பலன் கிடைக்கிறது. அதனால், வியாசர் ஸ்காந்தம் முதலிய புராணங்களில் சிவனைப் பற்றிப் பெருமையாகக் கூறி உம்மை சிறுமைப்படுத்திக் கூறினார்.

भूतार्थकीर्तिरनुवादविरुद्धवादौ
त्रेधार्थवादगतय: खलु रोचनार्था: ।
स्कान्दादिकेषु बहवोऽत्र विरुद्धवादा-
स्त्वत्तामसत्वपरिभूत्युपशिक्षणाद्या: ॥१०॥

பூ₄தார்த₂கீர்திரநுவாத₃விருத்₃த₄வாதௌ₃
த்ரேதா₄ர்த₂வாத₃க₃தய: க₂லு ரோசநார்தா₂: |
ஸ்காந்தா₃தி₃கேஷு ப₃ஹவோ(அ)த்ர விருத்₃த₄வாதா₃-
ஸ்த்வத்தாமஸத்வபரிபூ₄த்யுபஶிக்ஷணாத்₃யா: || 10||

10. அர்த்தவாதம் மூன்று வகைப்படும். உண்மைகளை உள்ளபடி கூறுவது, அனுபவத்திற்கு ஏற்பப் புகழ்ந்து துதிப்பது, வேண்டாதவற்றை நிந்தித்து, முரணாகப் பேசுவது. ஸ்காந்தத்தில் தங்களைக் குறைவாகக் கூறியது மூன்றாவது வகையாகும். அது உண்மையல்ல.

यत् किञ्चिदप्यविदुषाऽपि विभो मयोक्तं
तन्मन्त्रशास्त्रवचनाद्यभिदृष्टमेव ।
व्यासोक्तिसारमयभागवतोपगीत
क्लेशान् विधूय कुरु भक्तिभरं परात्मन् ॥११॥

யத் கிஞ்சித₃ப்யவிது₃ஷா(அ)பி விபோ₄ மயோக்தம்
தந்மந்த்ரஶாஸ்த்ரவசநாத்₃யபி₄த்₃ருஷ்டமேவ |
வ்யாஸோக்திஸாரமயபா₄க₃வதோபகீ₃த
க்லேஶாந் விதூ₄ய குரு ப₄க்திப₄ரம் பராத்மந் || 11||

11. பிரபுவே! அறிவற்ற நான் கூறியதும்கூட மந்திர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டவையே. வியாசரின் பாகவதத்தில் போற்றிப் புகழப்பட்ட பரமாத்மாவே! என் துக்கங்களைப் போக்கி, வியாதிகளை ஒழித்து, எனக்கு உறுதியான பக்தி கிடைக்க அருள வேண்டும்.

No comments:

Post a Comment