த³ஶகம் -89
வ்ருகாசுரன் கதை, ப்ருகுவை சோதித்தல்
रमाजाने जाने यदिह तव भक्तेषु विभवो
न सद्यस्सम्पद्यस्तदिह मदकृत्त्वादशमिनाम् ।
प्रशान्तिं कृत्वैव प्रदिशसि तत: काममखिलं
प्रशान्तेषु क्षिप्रं न खलु भवदीये च्युतिकथा ॥१॥
ரமாஜாநே ஜாநே யதி₃ஹ தவ ப₄க்தேஷு விப₄வோ
ந ஸத்₃யஸ்ஸம்பத்₃யஸ்ததி₃ஹ மத₃க்ருத்த்வாத₃ஶமிநாம் |
ப்ரஶாந்திம் க்ருத்வைவ ப்ரதி₃ஶஸி தத: காமமகி₂லம்
ப்ரஶாந்தேஷு க்ஷிப்ரம் ந க₂லு ப₄வதீ₃யே ச்யுதிகதா₂ || 1||
1. லக்ஷ்மியின் நாயகனே! இவ்வுலகத்தில் தங்களது பக்தர்களுக்கு எளிதில் ஐஸ்வர்யம் கிடைப்பதில்லை. ஏனெனில் செல்வங்களால் அகங்காரம் உண்டாகிறது என்பதால் அவ்வாறு செய்கிறீர்கள் போலும். இந்திரியங்களை அடக்கும் மனநிலையைத் தந்து, பிறகு அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றீர். அந்த மனநிலையை ஏற்கெனவே பெற்றவர்களுக்கு உடனேயே அனுக்ரஹம் செய்கின்றீர். தங்கள் பக்தர்களுக்கு வீழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
सद्य: प्रसादरुषितान् विधिशङ्करादीन्
केचिद्विभो निजगुणानुगुणं भजन्त: ।
भ्रष्टा भवन्ति बत कष्टमदीर्घदृष्ट्या
स्पष्टं वृकासुर उदाहरणं किलास्मिन् ॥२॥
ஸத்₃ய: ப்ரஸாத₃ருஷிதாந் விதி₄ஶங்கராதீ₃ந்
கேசித்₃விபோ₄ நிஜகு₃ணாநுகு₃ணம் ப₄ஜந்த: |
ப்₄ரஷ்டா ப₄வந்தி ப₃த கஷ்டமதீ₃ர்க₄த்₃ருஷ்ட்யா
ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா₃ஹரணம் கிலாஸ்மிந் || 2||
2. விரைவில் சந்தோஷத்தையும், கோபத்தையும் அடையும் பிரம்மா, பரமசிவன் முதலியோரை, மக்கள் தங்கள் சொந்த இயல்புக்கு ஏற்ப வழிபடுகின்றனர். அந்தோ! அவர்கள் குறுகிய நோக்கத்தில் வீழ்ந்து விடுகின்றனர். இதற்கு வ்ருகாசுரனே தெளிவான உதாரணம்.
शकुनिज: स तु नारदमेकदा
त्वरिततोषमपृच्छदधीश्वरम् ।
स च दिदेश गिरीशमुपासितुं
न तु भवन्तमबन्धुमसाधुषु ॥३॥
ஶகுநிஜ: ஸ து நாரத₃மேகதா₃
த்வரிததோஷமப்ருச்ச₂த₃தீ₄ஶ்வரம் |
ஸ ச தி₃தே₃ஶ கி₃ரீஶமுபாஸிதும்
ந து ப₄வந்தமப₃ந்து₄மஸாது₄ஷு || 3||
3. சகுனியின் பிள்ளையான வ்ருகாசுரன், எளிதில் மகிழும் தெய்வம் யார் என்று நாரதரிடம் கேட்டான். அவரும் பரமசிவனை வணங்கும்படி உபதேசித்தார். தீய எண்ணம் கொண்ட மக்களைத் தாங்கள் ஆதரிக்க மாட்டீர்கள் என்பதால் தீயவனான அவனிடம் அவ்வாறு உபதேசித்தார்.
तपस्तप्त्वा घोरं स खलु कुपित: सप्तमदिने
शिर: छित्वा सद्य: पुरहरमुपस्थाप्य पुरत: ।
अतिक्षुद्रं रौद्रं शिरसि करदानेन निधनं
जगन्नाथाद्वव्रे भवति विमुखानां क्व शुभधी: ॥४॥
தபஸ்தப்த்வா கோ₄ரம் ஸ க₂லு குபித: ஸப்தமதி₃நே
ஶிர: சி₂த்வா ஸத்₃ய: புரஹரமுபஸ்தா₂ப்ய புரத: |
அதிக்ஷுத்₃ரம் ரௌத்₃ரம் ஶிரஸி கரதா₃நேந நித₄நம்
ஜக₃ந்நாதா₂த்₃வவ்ரே ப₄வதி விமுகா₂நாம் க்வ ஶுப₄தீ₄: || 4||
4. கடுமையான தவம் செய்த வ்ருகாசுரன், சிவனைக் காணாததால் ஏழாவது நாளன்று கோபத்துடன் தனது தலையைத் துண்டித்துக் கொள்ள முயன்றபோது, பரமசிவன் அவன் முன் தோன்றினார். அசுரன், யார் தலையில் நான் கை வைக்கிறேனோ, அவன் உடனே சாம்பலாகிவிட வேண்டும் என்ற நீச்சமான, பயங்கரமான வரத்தைக் கேட்டான். உம்மிடம் பக்தி இல்லாதவர்களுக்கு எவ்வாறு நல்லறிவு உண்டாகும்?
मोक्तारं बन्धमुक्तो हरिणपतिरिव प्राद्रवत्सोऽथ रुद्रं
दैत्यात् भीत्या स्म देवो दिशि दिशि वलते पृष्ठतो दत्तदृष्टि: ।
तूष्णीके सर्वलोके तव पदमधिरोक्ष्यन्तमुद्वीक्ष्य शर्वं
दूरादेवाग्रतस्त्वं पटुवटुवपुषा तस्थिषे दानवाय ॥५॥
மோக்தாரம் ப₃ந்த₄முக்தோ ஹரிணபதிரிவ ப்ராத்₃ரவத்ஸோ(அ)த₂ ருத்₃ரம்
தை₃த்யாத் பீ₄த்யா ஸ்ம தே₃வோ தி₃ஶி தி₃ஶி வலதே ப்ருஷ்ட₂தோ த₃த்தத்₃ருஷ்டி: |
தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத₃மதி₄ரோக்ஷ்யந்தமுத்₃வீக்ஷ்ய ஶர்வம்
தூ₃ராதே₃வாக்₃ரதஸ்த்வம் படுவடுவபுஷா தஸ்தி₂ஷே தா₃நவாய || 5||
5. அந்த வ்ருகாசுரன், கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கம் விடுவித்தவனையே துரத்துவதுபோல், சிவனிடமே அந்த வரத்தை சோதிக்க நினைத்தான். சிவனும் அசுரனிடத்தில் பயந்து, திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திக்குகளிலும் ஓடினார். எல்லா உலகங்களுக்கும் ஓடினார். பின்னர் வைகுண்டத்திற்குச் செல்ல நினைத்தார். அதைக் கண்ட தாங்கள், அசுரன் வெகுதூரத்தில் வரும்போது ஒரு சாமர்த்தியமான பிரம்மச்சாரி வேடம் பூண்டு நின்றீர்.
भद्रं ते शाकुनेय भ्रमसि किमधुना त्वं पिशाचस्य वाचा
सन्देहश्चेन्मदुक्तौ तव किमु न करोष्यङ्गुलीमङ्गमौलौ ।
इत्थं त्वद्वाक्यमूढ: शिरसि कृतकर: सोऽपतच्छिन्नपातं
भ्रंशो ह्येवं परोपासितुरपि च गति: शूलिनोऽपि त्वमेव ॥६॥
ப₄த்₃ரம் தே ஶாகுநேய ப்₄ரமஸி கிமது₄நா த்வம் பிஶாசஸ்ய வாசா
ஸந்தே₃ஹஶ்சேந்மது₃க்தௌ தவ கிமு ந கரோஷ்யங்கு₃லீமங்க₃மௌலௌ |
இத்த₂ம் த்வத்₃வாக்யமூட₄: ஶிரஸி க்ருதகர: ஸோ(அ)பதச்சி₂ந்நபாதம்
ப்₄ரம்ஶோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி ச க₃தி: ஶூலிநோ(அ)பி த்வமேவ || 6||
6. அவன் தங்களிடம் வந்ததும் அவனிடம், “அந்தப் பிசாசின் பேச்சைக் கேட்டு ஏன் அலைகின்றாய்? சந்தேகமிருந்தால் உன் தலையிலேயே கைவைத்து ஏன் பார்க்கவில்லை? என்று கூறினீர். அந்த வார்த்தைகளில் மயங்கிய அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு வேரற்ற மரம் போல, சாம்பலாகிக் கீழே விழுந்தான். இவ்வாறு மற்ற தெய்வங்களை வணங்குவோருக்கு வீழ்ச்சி உண்டு. பரமசிவனுக்கும் கூட இறுதியில் அடைக்கலம் அளிப்பவர் தாங்கள்தான்.
भृगुं किल सरस्वतीनिकटवासिनस्तापसा-
स्त्रिमूर्तिषु समादिशन्नधिकसत्त्वतां वेदितुम् ।
अयं पुनरनादरादुदितरुद्धरोषे विधौ
हरेऽपि च जिहिंसिषौ गिरिजया धृते त्वामगात् ॥७॥
ப்₄ருகு₃ம் கில ஸரஸ்வதீநிகடவாஸிநஸ்தாபஸா-
ஸ்த்ரிமூர்திஷு ஸமாதி₃ஶந்நதி₄கஸத்த்வதாம் வேதி₃தும் |
அயம் புநரநாத₃ராது₃தி₃தருத்₃த₄ரோஷே விதௌ₄
ஹரே(அ)பி ச ஜிஹிம்ஸிஷௌ கி₃ரிஜயா த்₄ருதே த்வாமகா₃த் || 7||
7. ஒரு சமயம், சரஸ்வதி நதிக்கரையில் வசித்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் யாரிடம் ஸத்வ குணம் இருக்கிறது என்று அறிய பிருகு என்ற முனிவரை அனுப்பினார்கள். பிரம்மலோகம் சென்ற பிருகு, பிரம்மாவிற்கு நமஸ்காரம் செய்யவில்லை. அதைக் கண்ட பிரம்மா கோபமடைந்தார். ஆயினும், கோபத்தை அடக்கிக் கொண்டார். பின்னர் பிருகு கைலாசம் சென்று அவ்வாறே நடந்து கொண்டார். சிவன் கோபம் கொண்டு அவரைக் கொல்ல முயல, பார்வதிதேவி அதைத் தடுத்தாள். பிறகு, பிருகு உம்மிடம் வந்தார்.
सुप्तं रमाङ्कभुवि पङ्कजलोचनं त्वां
विप्रे विनिघ्नति पदेन मुदोत्थितस्त्वम् ।
सर्वं क्षमस्व मुनिवर्य भवेत् सदा मे
त्वत्पादचिन्हमिह भूषणमित्यवादी: ॥८॥
ஸுப்தம் ரமாங்கபு₄வி பங்கஜலோசநம் த்வாம்
விப்ரே விநிக்₄நதி பதே₃ந முதோ₃த்தி₂தஸ்த்வம் |
ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய ப₄வேத் ஸதா₃ மே
த்வத்பாத₃சிந்ஹமிஹ பூ₄ஷணமித்யவாதீ₃: || 8||
8. தாமரைக் கண்ணனான நீர் மஹாலக்ஷ்மியின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தீர். பிருகு உம்மைக் காலால் எட்டி உதைத்தார். தாங்கள் உடனே எழுந்து மன்னிப்பு கேட்டு, அவரது கால் அடையாளக்குறி எப்போதும் உமது மார்பின் மீது அலங்காரமாக இருக்க வேண்டும் என்று கூறினீர்.
निश्चित्य ते च सुदृढं त्वयि बद्धभावा:
सारस्वता मुनिवरा दधिरे विमोक्षम् ।
त्वामेवमच्युत पुनश्च्युतिदोषहीनं
सत्त्वोच्चयैकतनुमेव वयं भजाम: ॥९॥
நிஶ்சித்ய தே ச ஸுத்₃ருட₄ம் த்வயி ப₃த்₃த₄பா₄வா:
ஸாரஸ்வதா முநிவரா த₃தி₄ரே விமோக்ஷம் |
த்வாமேவமச்யுத புநஶ்ச்யுதிதோ₃ஷஹீநம்
ஸத்த்வோச்சயைகதநுமேவ வயம் ப₄ஜாம: || 9||
9. பிருகு முனிவர் இதை சரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் கூறியதும் அவர்கள் நீரே ஸத்வ குணம் நிரம்பியவர் என்று அறிந்து உம்மிடத்திலேயே அசையாத பக்தி கொண்டு மோக்ஷமடைந்தனர். அச்சுதனே! குறையொன்றும் இல்லாத ஸத்வகுணம் நிரம்பிய உம்மை நாங்கள் வணங்குகிறோம்.
जगत्सृष्ट्यादौ त्वां निगमनिवहैर्वन्दिभिरिव
स्तुतं विष्णो सच्चित्परमरसनिर्द्वैतवपुषम् ।
परात्मानं भूमन् पशुपवनिताभाग्यनिवहं
परितापश्रान्त्यै पवनपुरवासिन् परिभजे ॥१०॥
ஜக₃த்ஸ்ருஷ்ட்யாதௌ₃ த்வாம் நிக₃மநிவஹைர்வந்தி₃பி₄ரிவ
ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித்பரமரஸநிர்த்₃வைதவபுஷம் |
பராத்மாநம் பூ₄மந் பஶுபவநிதாபா₄க்₃யநிவஹம்
பரிதாபஶ்ராந்த்யை பவநபுரவாஸிந் பரிப₄ஜே || 10||
10. அரசர்களின் சபையில் துதிபாடும் இசைவாணர்களைப் போல், படைப்பின் ஆரம்பத்தில் வேதங்கள் உம்மைத் துதித்தன. தாங்கள் சச்சிதானந்த ரூபமாகவும், அத்வைத ரூபமாகவும், பரமாத்மாவாகவும் இருப்பவர். கோபிகைகளுடைய நல்வினையின் குவியல். என்னுடைய எல்லா துக்கங்களையும் போக்கி அருளத் தங்களையே வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment