த³ஶகம் -33
அம்பரீஷ சரித்திரம்
वैवस्वताख्यमनुपुत्रनभागजात-
नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीष: ।
सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे
त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव ॥१॥
வைவஸ்வதாக்₂யமநுபுத்ரநபா₄க₃ஜாத-
நாபா₄க₃நாமகநரேந்த்₃ரஸுதோ(அ)ம்ப₃ரீஷ: |
ஸப்தார்ணவாவ்ருதமஹீத₃யிதோ(அ)பி ரேமே
த்வத்ஸங்கி₃ஷு த்வயி ச மக்₃நமநாஸ்ஸதை₃வ || 1||
1. வைவஸ்வத மனுவின் பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், தங்களிடத்திலும், தங்கள் பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.
त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य
भक्त्यैव देव नचिरादभृथा: प्रसादम् ।
येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं
चक्रं भवान् प्रविततार सहस्रधारम् ॥२॥
த்வத்ப்ரீதயே ஸகலமேவ விதந்வதோ(அ)ஸ்ய
ப₄க்த்யைவ தே₃வ நசிராத₃ப்₄ருதா₂: ப்ரஸாத₃ம் |
யேநாஸ்ய யாசநம்ருதே(அ)ப்யபி₄ரக்ஷணார்த₂ம்
சக்ரம் ப₄வாந் ப்ரவிததார ஸஹஸ்ரதா₄ரம் || 2||
2. தேவனே! உம்மிடம் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்றுவிடாமல் செய்தான். அவன் கேட்காமலேயே, அவனைக் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய தங்கள் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்தீர்கள்.
स द्वादशीव्रतमथो भवदर्चनार्थं
वर्षं दधौ मधुवने यमुनोपकण्ठे ।
पत्न्या समं सुमनसा महतीं वितन्वन्
पूजां द्विजेषु विसृजन् पशुषष्टिकोटिम् ॥३॥
ஸ த்₃வாத₃ஶீவ்ரதமதோ₂ ப₄வத₃ர்சநார்த₂ம்
வர்ஷம் த₃தௌ₄ மது₄வநே யமுநோபகண்டே₂ |
பத்ந்யா ஸமம் ஸுமநஸா மஹதீம் விதந்வந்
பூஜாம் த்₃விஜேஷு விஸ்ருஜந் பஶுஷஷ்டிகோடிம் || 3||
3. பிறகு, அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன் தங்களைப் பூஜித்து வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத் தங்களைப் பூஜித்து வந்தான்.
तत्राथ पारणदिने भवदर्चनान्ते
दुर्वाससाऽस्य मुनिना भवनं प्रपेदे ।
भोक्तुं वृतश्चस नृपेण परार्तिशीलो
मन्दं जगाम यमुनां नियमान्विधास्यन् ॥४॥
தத்ராத₂ பாரணதி₃நே ப₄வத₃ர்சநாந்தே
து₃ர்வாஸஸா(அ)ஸ்ய முநிநா ப₄வநம் ப்ரபேதே₃ |
போ₄க்தும் வ்ருதஶ்சஸ ந்ருபேண பரார்திஶீலோ
மந்த₃ம் ஜகா₃ம யமுநாம் நியமாந்விதா₄ஸ்யந் || 4||
4. விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்குச் சென்றார்.
राज्ञाऽथ पारणमुहूर्तसमाप्तिखेदा-
द्वारैव पारणमकारि भवत्परेण ।
प्राप्तो मुनिस्तदथ दिव्यदृशा विजानन्
क्षिप्यन् क्रुधोद्धृतजटो विततान कृत्याम् ॥५॥
ராஜ்ஞா(அ)த₂ பாரணமுஹூர்தஸமாப்திகே₂தா₃-
த்₃வாரைவ பாரணமகாரி ப₄வத்பரேண |
ப்ராப்தோ முநிஸ்தத₃த₂ தி₃வ்யத்₃ருஶா விஜாநந்
க்ஷிப்யந் க்ருதோ₄த்₃த்₄ருதஜடோ விததாந க்ருத்யாம் || 5||
5. அரசனான அம்பரீஷன், பாரணை செய்யவேண்டிய திதி முடியப்போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கினார்.
कृत्यां च तामसिधरां भुवनं दहन्ती-
मग्रेऽभिवीक्ष्यनृपतिर्न पदाच्चकम्पे ।
त्वद्भक्तबाधमभिवीक्ष्य सुदर्शनं ते
कृत्यानलं शलभयन् मुनिमन्वधावीत् ॥६॥
க்ருத்யாம் ச தாமஸித₄ராம் பு₄வநம் த₃ஹந்தீ-
மக்₃ரே(அ)பி₄வீக்ஷ்யந்ருபதிர்ந பதா₃ச்சகம்பே |
த்வத்₃ப₄க்தபா₃த₄மபி₄வீக்ஷ்ய ஸுத₃ர்ஶநம் தே
க்ருத்யாநலம் ஶலப₄யந் முநிமந்வதா₄வீத் || 6||
6. கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது.
धावन्नशेषभुवनेषु भिया स पश्यन्
विश्वत्र चक्रमपि ते गतवान् विरिञ्चम् ।
क: कालचक्रमतिलङ्घयतीत्यपास्त:
शर्वं ययौ स च भवन्तमवन्दतैव ॥७॥
தா₄வந்நஶேஷபு₄வநேஷு பி₄யா ஸ பஶ்யந்
விஶ்வத்ர சக்ரமபி தே க₃தவாந் விரிஞ்சம் |
க: காலசக்ரமதிலங்க₄யதீத்யபாஸ்த:
ஶர்வம் யயௌ ஸ ச ப₄வந்தமவந்த₃தைவ || 7||
7. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பிவிட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் தங்களை சரணடைய உபதேசம் செய்தார்.
भूयो भवन्निलयमेत्य मुनिं नमन्तं
प्रोचे भवानहमृषे ननु भक्तदास: ।
ज्ञानं तपश्च विनयान्वितमेव मान्यं
याह्यम्बरीषपदमेव भजेति भूमन् ॥८॥
பூ₄யோ ப₄வந்நிலயமேத்ய முநிம் நமந்தம்
ப்ரோசே ப₄வாநஹம்ருஷே நநு ப₄க்ததா₃ஸ: |
ஜ்ஞாநம் தபஶ்ச விநயாந்விதமேவ மாந்யம்
யாஹ்யம்ப₃ரீஷபத₃மேவ ப₄ஜேதி பூ₄மந் || 8||
8. எங்கும் நிறைந்தவனே! கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து உம்மைச் சரணடைந்தார். தாங்கள்,"முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்"என்று சொன்னீர்கள்.
तावत्समेत्य मुनिना स गृहीतपादो
राजाऽपसृत्य भवदस्त्रमसावनौषीत् ।
चक्रे गते मुनिरदादखिलाशिषोऽस्मै
त्वद्भक्तिमागसि कृतेऽपि कृपां च शंसन् ॥९॥
தாவத்ஸமேத்ய முநிநா ஸ க்₃ருஹீதபாதோ₃
ராஜா(அ)பஸ்ருத்ய ப₄வத₃ஸ்த்ரமஸாவநௌஷீத் |
சக்ரே க₃தே முநிரதா₃த₃கி₂லாஶிஷோ(அ)ஸ்மை
த்வத்₃ப₄க்திமாக₃ஸி க்ருதே(அ)பி க்ருபாம் ச ஶம்ஸந் || 9||
9. முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. துர்வாசர், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.
राजा प्रतीक्ष्य मुनिमेकसमामनाश्वान्
सम्भोज्य साधु तमृषिं विसृजन् प्रसन्नम् ।
भुक्त्वा स्वयं त्वयि ततोऽपि दृढं रतोऽभू-
त्सायुज्यमाप च स मां पवनेश पाया: ॥१०॥
ராஜா ப்ரதீக்ஷ்ய முநிமேகஸமாமநாஶ்வாந்
ஸம்போ₄ஜ்ய ஸாது₄ தம்ருஷிம் விஸ்ருஜந் ப்ரஸந்நம் |
பு₄க்த்வா ஸ்வயம் த்வயி ததோ(அ)பி த்₃ருட₄ம் ரதோ(அ)பூ₄-
த்ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவநேஶ பாயா: || 10||
10. அம்பரீஷன், ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். முன்பு இருந்ததைவிட அதிகமாய்த் தங்களிடம் பக்தி கொண்டு முடிவில் தங்களை அடைந்தான். அத்தகைய மகிமை வாய்ந்த குருவாயூரப்பா! என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment