Friday, April 25, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 56, ஸ்ரீ நாராயணீயம் 56வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam 

த³ஶகம் -56
காளியன் கர்வத்தை அடக்கி அனுக்ரஹித்தல்

रुचिरकम्पितकुण्डलमण्डल: सुचिरमीश ननर्तिथ पन्नगे ।
अमरताडितदुन्दुभिसुन्दरं वियति गायति दैवतयौवते ॥१॥

ருசிரகம்பிதகுண்ட₃லமண்ட₃ல: ஸுசிரமீஶ நநர்தித₂ பந்நகே₃ | 
அமரதாடி₃தது₃ந்து₃பி₄ஸுந்த₃ரம் வியதி கா₃யதி தை₃வதயௌவதே || 1||

1. குண்டலங்கள் ஆட, காளியன் தலைமேல் வெகு நேரம் நர்த்தனம் ஆடினீர். தேவப்பெண்கள் பாட, தேவர்கள் துந்துபி வாசிக்க, அழகாய் ஆடினீர்.

नमति यद्यदमुष्य शिरो हरे परिविहाय तदुन्नतमुन्नतम् ।
परिमथन् पदपङ्करुहा चिरं व्यहरथा: करतालमनोहरम् ॥२॥

நமதி யத்₃யத₃முஷ்ய ஶிரோ ஹரே பரிவிஹாய தது₃ந்நதமுந்நதம் | 
பரிமத₂ந் பத₃பங்கருஹா சிரம் வ்யஹரதா₂: கரதாலமநோஹரம் || 2|| 

2. காளியனுடைய எந்தத் தலை தொய்கிறதோ அதை விட்டுவிட்டு, உயரே கிளம்பிய தலை மீது தாமரைப் பாதங்களால் தாளமிட்டுக்கொண்டு நர்த்தனம் ஆடினீர். 

त्वदवभग्नविभुग्नफणागणे गलितशोणितशोणितपाथसि ।
फणिपताववसीदति सन्नतास्तदबलास्तव माधव पादयो: ॥३॥

த்வத₃வப₄க்₃நவிபு₄க்₃நப₂ணாக₃ணே க₃லிதஶோணிதஶோணிதபாத₂ஸி | 
ப₂ணிபதாவவஸீத₃தி ஸந்நதாஸ்தத₃ப₃லாஸ்தவ மாத₄வ பாத₃யோ: || 3|| 

3. காளியனுடைய படமெடுத்த தலைகள் தொய்ந்து சரிந்து, குளம் முழுவதும் ரத்தம் கக்கி, அவன் சோர்ந்து விழுந்தான். அப்போது, அவனுடைய மனைவியர் தங்கள் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கினார்கள்.

अयि पुरैव चिराय परिश्रुतत्वदनुभावविलीनहृदो हि ता: ।
मुनिभिरप्यनवाप्यपथै: स्तवैर्नुनुवुरीश भवन्तमयन्त्रितम् ॥४॥

அயி புரைவ சிராய பரிஶ்ருதத்வத₃நுபா₄வவிலீநஹ்ருதோ₃ ஹி தா: | 
முநிபி₄ரப்யநவாப்யபதை₂: ஸ்தவைர்நுநுவுரீஶ ப₄வந்தமயந்த்ரிதம் || 4||

 4. அவர்கள் முன்பேயே தங்களுடைய மகிமைகளை அறிந்திருந்ததால், தங்களிடம் மனதை செலுத்தி, முனிவர்களும் அறிய முடியாத பொருள் கொண்ட ஸ்தோத்திரங்களால் தங்களைத் துதித்தார்கள். 

फणिवधूगणभक्तिविलोकनप्रविकसत्करुणाकुलचेतसा ।
फणिपतिर्भवताऽच्युत जीवितस्त्वयि समर्पितमूर्तिरवानमत् ॥५॥

ப₂ணிவதூ₄க₃ணப₄க்திவிலோகநப்ரவிகஸத்கருணாகுலசேதஸா | 
ப₂ணிபதிர்ப₄வதா(அ)ச்யுத ஜீவிதஸ்த்வயி ஸமர்பிதமூர்திரவாநமத் || 5|| 

5. அவர்களுடைய பக்தியைக் கண்டு மிகுந்த கருணையுடன் காளியனை உயிர் பிழைக்க விட்டீர். அவனும் தங்கள் பாதங்களைச் சரணடைந்து, தங்களை வணங்கினான். 

रमणकं व्रज वारिधिमध्यगं फणिरिपुर्न करोति विरोधिताम् ।
इति भवद्वचनान्यतिमानयन् फणिपतिर्निरगादुरगै: समम् ॥६॥

ரமணகம் வ்ரஜ வாரிதி₄மத்₄யக₃ம் ப₂ணிரிபுர்ந கரோதி விரோதி₄தாம் | 
இதி ப₄வத்₃வசநாந்யதிமாநயந் ப₂ணிபதிர்நிரகா₃து₃ரகை₃: ஸமம் || 6|| 

6. அவனைக் கடலின் நடுவே இருக்கும் ரமணகம் என்ற இடத்திற்குச் செல்ல ஆணையிட்டீர். கருடன் அங்கு உன்னை தாக்க மாட்டான் என்று தாங்கள் சொன்னதும், காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்திற்குப் புறப்பட்டான்.

फणिवधूजनदत्तमणिव्रजज्वलितहारदुकूलविभूषित: ।
तटगतै: प्रमदाश्रुविमिश्रितै: समगथा: स्वजनैर्दिवसावधौ ॥७॥

ப₂ணிவதூ₄ஜநத₃த்தமணிவ்ரஜஜ்வலிதஹாரது₃கூலவிபூ₄ஷித: | 
தடக₃தை: ப்ரமதா₃ஶ்ருவிமிஶ்ரிதை: ஸமக₃தா₂: ஸ்வஜநைர்தி₃வஸாவதௌ₄ || 7||

7. அவனுடைய மனைவியர் கொடுத்த ஒளிவீசும் ரத்தினங்களாலும், முத்துமாலைகளாலும், பட்டு வஸ்திரங்களாலும் தங்களை அலங்கரித்துக்கொண்டு, ஆனந்தத்துடன் நதிக்கரையில் இருக்கும் தங்களது சுற்றத்தாரை அடைந்தீர்கள். 

निशि पुनस्तमसा व्रजमन्दिरं व्रजितुमक्षम एव जनोत्करे ।
स्वपति तत्र भवच्चरणाश्रये दवकृशानुररुन्ध समन्तत: ॥८॥

நிஶி புநஸ்தமஸா வ்ரஜமந்தி₃ரம் வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜநோத்கரே | 
ஸ்வபதி தத்ர ப₄வச்சரணாஶ்ரயே த₃வக்ருஶாநுரருந்த₄ ஸமந்தத: || 8|| 

8. தங்களையே நம்பியிருந்த அந்த இடையர்கள், இருட்டிவிட்டதால் வீடு செல்ல முடியாமல் கரையிலேயே தூங்கினார்கள். அப்போது நாலாபுறமும் காட்டுத்தீ சூழ்ந்தது.

प्रबुधितानथ पालय पालयेत्युदयदार्तरवान् पशुपालकान् ।
अवितुमाशु पपाथ महानलं किमिह चित्रमयं खलु ते मुखम् ॥९॥

ப்ரபு₃தி₄தாநத₂ பாலய பாலயேத்யுத₃யதா₃ர்தரவாந் பஶுபாலகாந் | 
அவிதுமாஶு பபாத₂ மஹாநலம் கிமிஹ சித்ரமயம் க₂லு தே முக₂ம் || 9|| 

9. அதனால் விழித்தெழுந்த அவர்கள், காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரலிட்டனர். அவர்களைக் காக்க அத்தீயைத் தாங்கள் உண்டீர். இதிலென்ன ஆச்சர்யம்? அக்னியே தங்கள் முகமல்லவா? 

शिखिनि वर्णत एव हि पीतता परिलसत्यधुना क्रिययाऽप्यसौ ।
इति नुत: पशुपैर्मुदितैर्विभो हर हरे दुरितै:सह मे गदान् ॥१०॥

 ஶிகி₂நி வர்ணத ஏவ ஹி பீததா பரிலஸத்யது₄நா க்ரியயா(அ)ப்யஸௌ | 
இதி நுத: பஶுபைர்முதி₃தைர்விபோ₄ ஹர ஹரே து₃ரிதை:ஸஹ மே க₃தா₃ந் || 10||

10. அக்னியிடம் நிறத்தினால் மட்டும் ‘பீதத்வம்’ (மஞ்சள்) இருந்தது. இப்போது தாங்கள் உண்டதாலும் ‘பீதத்வம்’ (குடிக்கப்பட்ட தன்மை) கொண்டது என்று கூறி கோபர்கள் ஆனந்தத்துடன் துதித்தார்கள். ஹரியே! என்னுடைய பாபங்களையும், அதனால் உண்டான என்னுடைய நோய்களையும் போக்கி என்னைக் காத்து அருள வேண்டும்.

No comments:

Post a Comment