த³ஶகம் -44
நாமகரணம் (பெயர் சூட்டுதல்)
गूढं वसुदेवगिरा कर्तुं ते निष्क्रियस्य संस्कारान् ।
हृद्गतहोरातत्त्वो गर्गमुनिस्त्वत् गृहं विभो गतवान् ॥१॥
கூ₃ட₄ம் வஸுதே₃வகி₃ரா கர்தும் தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காராந் |
ஹ்ருத்₃க₃தஹோராதத்த்வோ க₃ர்க₃முநிஸ்த்வத் க்₃ருஹம் விபோ₄ க₃தவாந் || 1||
1. வசுதேவர் தங்களுக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவரின் சொற்படி கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, தங்களது வீட்டிற்கு வந்தார்.
नन्दोऽथ नन्दितात्मा वृन्दिष्टं मानयन्नमुं यमिनाम् ।
मन्दस्मितार्द्रमूचे त्वत्संस्कारान् विधातुमुत्सुकधी: ॥२॥
நந்தோ₃(அ)த₂ நந்தி₃தாத்மா வ்ருந்தி₃ஷ்டம் மாநயந்நமும் யமிநாம் |
மந்த₃ஸ்மிதார்த்₃ரமூசே த்வத்ஸம்ஸ்காராந் விதா₄துமுத்ஸுகதீ₄: || 2||
2. சந்தோஷமடைந்த நந்தகோபன் அவரை வரவேற்றுப் பூஜித்தார். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார்.
यदुवंशाचार्यत्वात् सुनिभृतमिदमार्य कार्यमिति कथयन् ।
गर्गो निर्गतपुलकश्चक्रे तव साग्रजस्य नामानि ॥३॥
யது₃வம்ஶாசார்யத்வாத் ஸுநிப்₄ருதமித₃மார்ய கார்யமிதி கத₂யந் |
க₃ர்கோ₃ நிர்க₃தபுலகஶ்சக்ரே தவ ஸாக்₃ரஜஸ்ய நாமாநி || 3||
3. கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,”நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும் என்று கூறினார். பிறகு, தங்களுக்கும், தங்கள் அண்ணனான பலராமனுக்கும் நாமகரணம் செய்தார்.
कथमस्य नाम कुर्वे सहस्रनाम्नो ह्यनन्तनाम्नो वा ।
इति नूनं गर्गमुनिश्चक्रे तव नाम नाम रहसि विभो ॥४॥
கத₂மஸ்ய நாம குர்வே ஸஹஸ்ரநாம்நோ ஹ்யநந்தநாம்நோ வா |
இதி நூநம் க₃ர்க₃முநிஶ்சக்ரே தவ நாம நாம ரஹஸி விபோ₄ || 4||
4. தாங்கள் கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்டவர். இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார்.
कृषिधातुणकाराभ्यां सत्तानन्दात्मतां किलाभिलपत् ।
जगदघकर्षित्वं वा कथयदृषि: कृष्णनाम ते व्यतनोत् ॥५॥
க்ருஷிதா₄துணகாராப்₄யாம் ஸத்தாநந்தா₃த்மதாம் கிலாபி₄லபத் |
ஜக₃த₃க₄கர்ஷித்வம் வா கத₂யத்₃ருஷி: க்ருஷ்ணநாம தே வ்யதநோத் || 5||
5. மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார்.
अन्यांश्च नामभेदान् व्याकुर्वन्नग्रजे च रामादीन् ।
अतिमानुषानुभावं न्यगदत्त्वामप्रकाशयन् पित्रे ॥६॥
அந்யாம்ஶ்ச நாமபே₄தா₃ந் வ்யாகுர்வந்நக்₃ரஜே ச ராமாதீ₃ந் |
அதிமாநுஷாநுபா₄வம் ந்யக₃த₃த்த்வாமப்ரகாஶயந் பித்ரே || 6||
6. தங்களுக்கு வாசுதேவன் முதலிய பெயர்களையும் சூட்டினார். தாங்கள் ‘ஸ்ரீஹரி’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல், தங்கள் பெருமையை எடுத்துச் சொன்னார்.
स्निह्यति यस्तव पुत्रे मुह्यति स न मायिकै: पुन: शोकै: ।
द्रुह्यति य: स तु नश्येदित्यवदत्ते महत्त्वमृषिवर्य: ॥७॥
ஸ்நிஹ்யதி யஸ்தவ புத்ரே முஹ்யதி ஸ ந மாயிகை: புந: ஶோகை: |
த்₃ருஹ்யதி ய: ஸ து நஶ்யேதி₃த்யவத₃த்தே மஹத்த்வம்ருஷிவர்ய: || 7||
7. மேலும் நந்தகோபனிடத்தில், "உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்" என்று உன் பெருமையை எடுத்துச் சொன்னார்.
जेष्यति बहुतरदैत्यान् नेष्यति निजबन्धुलोकममलपदम् ।
श्रोष्यसि सुविमलकीर्तीरस्येति भवद्विभूतिमृषिरूचे ॥८॥
ஜேஷ்யதி ப₃ஹுதரதை₃த்யாந் நேஷ்யதி நிஜப₃ந்து₄லோகமமலபத₃ம் |
ஶ்ரோஷ்யஸி ஸுவிமலகீர்தீரஸ்யேதி ப₄வத்₃விபூ₄திம்ருஷிரூசே || 8||
8. மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார்.
अमुनैव सर्वदुर्गं तरितास्थ कृतास्थमत्र तिष्ठध्वम् ।
हरिरेवेत्यनभिलपन्नित्यादि त्वामवर्णयत् स मुनि: ॥९॥
அமுநைவ ஸர்வது₃ர்க₃ம் தரிதாஸ்த₂ க்ருதாஸ்த₂மத்ர திஷ்ட₂த்₄வம் |
ஹரிரேவேத்யநபி₄லபந்நித்யாதி₃ த்வாமவர்ணயத் ஸ முநி: || 9||
9. பிறகு கர்க்கர், வெளிப்படையாக தாங்கள் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள் என்று கூறினார்.
गर्गेऽथ निर्गतेऽस्मिन् नन्दितनन्दादिनन्द्यमानस्त्वम् ।
मद्गदमुद्गतकरुणो निर्गमय श्रीमरुत्पुराधीश ॥१०॥
க₃ர்கே₃(அ)த₂ நிர்க₃தே(அ)ஸ்மிந் நந்தி₃தநந்தா₃தி₃நந்த்₃யமாநஸ்த்வம் |
மத்₃க₃த₃முத்₃க₃தகருணோ நிர்க₃மய ஶ்ரீமருத்புராதீ₄ஶ || 10||
10. பின்பு கர்க்கர் சென்றார். நந்தகோபனும், மற்றவர்களும் தங்களை மிகவும் சீராட்டினர். குருவாயூரப்பா! கருணையுடன் தாங்கள் என்னுடைய வியாதியை நீக்கி அருள் புரிவீராக.
No comments:
Post a Comment