த³ஶகம் -35
ஸ்ரீ ராமாவதாரம் தொடர்ச்சி
नीतस्सुग्रीवमैत्रीं तदनु हनुमता दुन्दुभे: कायमुच्चै:
क्षिप्त्वाङ्गुष्ठेन भूयो लुलुविथ युगपत् पत्रिणा सप्त सालान् ।
हत्वा सुग्रीवघातोद्यतमतुलबलं बालिनं व्याजवृत्त्या
वर्षावेलामनैषीर्विरहतरलितस्त्वं मतङ्गाश्रमान्ते ॥१॥
நீதஸ்ஸுக்₃ரீவமைத்ரீம் தத₃நு ஹநுமதா து₃ந்து₃பே₄: காயமுச்சை:
க்ஷிப்த்வாங்கு₃ஷ்டே₂ந பூ₄யோ லுலுவித₂ யுக₃பத் பத்ரிணா ஸப்த ஸாலாந் |
ஹத்வா ஸுக்₃ரீவகா₄தோத்₃யதமதுலப₃லம் பா₃லிநம் வ்யாஜவ்ருத்த்யா
வர்ஷாவேலாமநைஷீர்விரஹதரலிதஸ்த்வம் மதங்கா₃ஶ்ரமாந்தே || 1||
1. பிறகு, அனுமானால் சுக்ரீவனுடைய நட்பை அடைந்தீர்கள். கால் கட்டை விரலால் துந்துபி என்ற அசுரனை உயரே தூக்கி எறிந்தீர்கள். ஒரே அம்பால் ஒரே சமயத்தில் ஏழு மரங்களைத் துளைத்தீர்கள். சுக்ரீவனைக் கொல்ல நினைத்த, அதிக பலம் பொருந்திய, வாலியை வதம் செய்தீர்கள். சீதையின் பிரிவால் மனக்கவலை கொண்டு, மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகே, மழைக்காலத்தைக் கழித்தீர்கள்.
सुग्रीवेणानुजोक्त्या सभयमभियता व्यूहितां वाहिनीं ता-
मृक्षाणां वीक्ष्य दिक्षु द्रुतमथ दयितामार्गणायावनम्राम् ।
सन्देशं चाङ्गुलीयं पवनसुतकरे प्रादिशो मोदशाली
मार्गे मार्गे ममार्गे कपिभिरपि तदा त्वत्प्रिया सप्रयासै: ॥२॥
ஸுக்₃ரீவேணாநுஜோக்த்யா ஸப₄யமபி₄யதா வ்யூஹிதாம் வாஹிநீம் தா-
ம்ருக்ஷாணாம் வீக்ஷ்ய தி₃க்ஷு த்₃ருதமத₂ த₃யிதாமார்க₃ணாயாவநம்ராம் |
ஸந்தே₃ஶம் சாங்கு₃லீயம் பவநஸுதகரே ப்ராதி₃ஶோ மோத₃ஶாலீ
மார்கே₃ மார்கே₃ மமார்கே₃ கபிபி₄ரபி ததா₃ த்வத்ப்ரியா ஸப்ரயாஸை: || 2||
2. பிறகு, லக்ஷ்மணனின் வார்த்தைகளில் பயந்து தங்களை வந்தடைந்த சுக்ரீவனையும், அவனது வானர சேனைகளையும் பார்த்து மிக்க மகிழ்ந்தீர்கள். ஹனுமானுடைய கைகளில் கணையாழியையும், செய்தியையும் கொடுத்து அனுப்பினீர்கள். வானர சைன்யமும் சீதையைத் தேடப் புறப்பட்டன.
त्वद्वार्ताकर्णनोद्यद्गरुदुरुजवसम्पातिसम्पातिवाक्य-
प्रोत्तीर्णार्णोधिरन्तर्नगरि जनकजां वीक्ष्य दत्वाङ्गुलीयम् ।
प्रक्षुद्योद्यानमक्षक्षपणचणरण: सोढबन्धो दशास्यं
दृष्ट्वा प्लुष्ट्वा च लङ्कां झटिति स हनुमान् मौलिरत्नं ददौ ते ॥३॥
த்வத்₃வார்தாகர்ணநோத்₃யத்₃க₃ருது₃ருஜவஸம்பாதிஸம்பாதிவாக்ய-
ப்ரோத்தீர்ணார்ணோதி₄ரந்தர்நக₃ரி ஜநகஜாம் வீக்ஷ்ய த₃த்வாங்கு₃லீயம் |
ப்ரக்ஷுத்₃யோத்₃யாநமக்ஷக்ஷபணசணரண: ஸோட₄ப₃ந்தோ₄ த₃ஶாஸ்யம்
த்₃ருஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம் ஜ₂டிதி ஸ ஹநுமாந் மௌலிரத்நம் த₃தௌ₃ தே || 3||
3. தங்கள் சரித்திரத்தைக் கேட்ட சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்தன. உடனே அவர் உயரே பறந்து சீதை இருக்கும் இடத்தை அறிந்து சொன்னார். அதைக் கேட்ட அனுமன் கடலைத் தாண்டிச் சென்று, இலங்கையின் நடுவே சீதையைக் கண்டார். கணையாழியைக் கொடுத்தார். அசோக வனத்தை அழித்தார். அக்ஷயகுமாரனுடன் போரிட்டு, பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு ராவணனைக் கண்டார். இலங்கையை எரித்து, சீக்கிரமாகத் திரும்பி வந்து சீதையின் சூடாமணியைத் தங்களிடம் கொடுத்தார்.
त्वं सुग्रीवाङ्गदादिप्रबलकपिचमूचक्रविक्रान्तभूमी-
चक्रोऽभिक्रम्य पारेजलधि निशिचरेन्द्रानुजाश्रीयमाण: ।
तत्प्रोक्तां शत्रुवार्तां रहसि निशमयन् प्रार्थनापार्थ्यरोष-
प्रास्ताग्नेयास्त्रतेजस्त्रसदुदधिगिरा लब्धवान् मध्यमार्गम् ॥४॥
த்வம் ஸுக்₃ரீவாங்க₃தா₃தி₃ப்ரப₃லகபிசமூசக்ரவிக்ராந்தபூ₄மீ-
சக்ரோ(அ)பி₄க்ரம்ய பாரேஜலதி₄ நிஶிசரேந்த்₃ராநுஜாஶ்ரீயமாண: |
தத்ப்ரோக்தாம் ஶத்ருவார்தாம் ரஹஸி நிஶமயந் ப்ரார்த₂நாபார்த்₂யரோஷ-
ப்ராஸ்தாக்₃நேயாஸ்த்ரதேஜஸ்த்ரஸது₃த₃தி₄கி₃ரா லப்₃த₄வாந் மத்₄யமார்க₃ம் || 4||
4. பிறகு, சுக்ரீவன், அங்கதன் முதலிய பலசாலிகளான வானரப்படைகளோடு இலங்கை மீது போர் தொடுக்கப் புறப்பட்டீர்கள். ராவணனுடைய தம்பி விபீஷணன், சமுத்திரக்கரையில் தங்களைத் தஞ்சம் அடைந்தான். எதிரியின் செய்திகள் யாவற்றையும் அவன்மூலமாகக் கேட்டு அறிந்தீர்கள். தங்களுடைய வேண்டுகோளை ஏற்காததால், சமுத்திரராஜன் மீது அக்னி அஸ்திரத்தைத் தொடுத்தீர்கள். அவன் பயந்து கடலின் மத்தியில் வழி விட்டான்.
कीशैराशान्तरोपाहृतगिरिनिकरै: सेतुमाधाप्य यातो
यातून्यामर्द्य दंष्ट्रानखशिखरिशिलासालशस्त्रै: स्वसैन्यै: ।
व्याकुर्वन् सानुजस्त्वं समरभुवि परं विक्रमं शक्रजेत्रा
वेगान्नागास्त्रबद्ध: पतगपतिगरुन्मारुतैर्मोचितोऽभू: ॥५॥
கீஶைராஶாந்தரோபாஹ்ருதகி₃ரிநிகரை: ஸேதுமாதா₄ப்ய யாதோ
யாதூந்யாமர்த்₃ய த₃ம்ஷ்ட்ராநக₂ஶிக₂ரிஶிலாஸாலஶஸ்த்ரை: ஸ்வஸைந்யை: |
வ்யாகுர்வந் ஸாநுஜஸ்த்வம் ஸமரபு₄வி பரம் விக்ரமம் ஶக்ரஜேத்ரா
வேகா₃ந்நாகா₃ஸ்த்ரப₃த்₃த₄: பதக₃பதிக₃ருந்மாருதைர்மோசிதோ(அ)பூ₄: || 5||
5. வானரர்கள் அனைத்து திக்குகளிலிருந்தும் மலைகளைக்கொண்டு வந்து, அணை கட்டினார்கள். தாங்கள் இலங்கைக்குச் சென்று, பற்கள், நகங்கள், மலைகள், கற்கள், மரங்கள் ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்ட வானர சைன்யங்களைக் கொண்டு அசுரர்களை வதம் செய்தீர்கள். சிறந்த வீரத்தையுடைய தங்களையும், தங்கள் சகோதரனையும், இந்திரஜித் நாகாஸ்திரத்தால் கட்டினான். ஆனால், கருடனுடைய இறக்கைகளில் இருந்து வந்த காற்றால் விடுபட்டீர்கள்.
सौमित्रिस्त्वत्र शक्तिप्रहृतिगलदसुर्वातजानीतशैल-
घ्राणात् प्राणानुपेतो व्यकृणुत कुसृतिश्लाघिनं मेघनादम् ।
मायाक्षोभेषु वैभीषणवचनहृतस्तम्भन: कुम्भकर्णं
सम्प्राप्तं कम्पितोर्वीतलमखिलचमूभक्षिणं व्यक्षिणोस्त्वम् ॥६॥
ஸௌமித்ரிஸ்த்வத்ர ஶக்திப்ரஹ்ருதிக₃லத₃ஸுர்வாதஜாநீதஶைல-
க்₄ராணாத் ப்ராணாநுபேதோ வ்யக்ருணுத குஸ்ருதிஶ்லாகி₄நம் மேக₄நாத₃ம் |
மாயாக்ஷோபே₄ஷு வைபீ₄ஷணவசநஹ்ருதஸ்தம்ப₄ந: கும்ப₄கர்ணம்
ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலமகி₂லசமூப₄க்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் || 6||
6. சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணனின் உயிர் பிரிந்தது. அனுமன் கொண்டு வந்த ஸஞ்ஜீவி மலையின் இலைகளின் காற்றால் உயிர் பெற்றெழுந்தான். மாயாசக்தியால் போரிட்ட இந்திரஜித்தை லக்ஷ்மணன் கொன்றான். மாயையினால் தாங்களும் கலக்கமுற்றபோது, விபீஷணன் கூறிய வார்த்தையால் கலக்கம் நீங்கப் பெற்றீர்கள். பூமி அதிரத் தங்களை நோக்கி வந்த கும்பகர்ணனைக் கொன்றீர்கள்.
गृह्णन् जम्भारिसंप्रेषितरथकवचौ रावणेनाभियुद्ध्यन्
ब्रह्मास्त्रेणास्य भिन्दन् गलततिमबलामग्निशुद्धां प्रगृह्णन् ।
देवश्रेणीवरोज्जीवितसमरमृतैरक्षतै: ऋक्षसङ्घै-
र्लङ्काभर्त्रा च साकं निजनगरमगा: सप्रिय: पुष्पकेण ॥७॥
க்₃ருஹ்ணந் ஜம்பா₄ரிஸம்ப்ரேஷிதரத₂கவசௌ ராவணேநாபி₄யுத்₃த்₄யந்
ப்₃ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பி₄ந்த₃ந் க₃லததிமப₃லாமக்₃நிஶுத்₃தா₄ம் ப்ரக்₃ருஹ்ணந் |
தே₃வஶ்ரேணீவரோஜ்ஜீவிதஸமரம்ருதைரக்ஷதை: ருக்ஷஸங்கை₄-
ர்லங்காப₄ர்த்ரா ச ஸாகம் நிஜநக₃ரமகா₃: ஸப்ரிய: புஷ்பகேண || 7||
7. இந்திரன் அளித்த தேரையும், கவசத்தையும் ஏற்று ராவணனோடு போர் செய்தீர்கள். பிரம்மாஸ்திரத்தால் அவனுடைய தலைகளை வரிசையாக வெட்டினீர்கள். பிறகு, தீக்குளித்து தன் தூய்மையைக் காட்டிய சீதையை ஏற்றுக் கொண்டீர்கள். போரில் உயிரிழந்த வானரர்கள் தேவர்களால் பிழைப்பிக்கப்பட்டார்கள். அவர்களுடனும், விபீஷணனோடும், சீதையோடும், லக்ஷ்மணனோடும், புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பினீர்கள்.
प्रीतो दिव्याभिषेकैरयुतसमधिकान् वत्सरान् पर्यरंसी-
र्मैथिल्यां पापवाचा शिव! शिव! किल तां गर्भिणीमभ्यहासी: ।
शत्रुघ्नेनार्दयित्वा लवणनिशिचरं प्रार्दय: शूद्रपाशं
तावद्वाल्मीकिगेहे कृतवसतिरुपासूत सीता सुतौ ते ॥८॥
ப்ரீதோ தி₃வ்யாபி₄ஷேகைரயுதஸமதி₄காந் வத்ஸராந் பர்யரம்ஸீ-
ர்மைதி₂ல்யாம் பாபவாசா ஶிவ! ஶிவ! கில தாம் க₃ர்பி₄ணீமப்₄யஹாஸீ: |
ஶத்ருக்₄நேநார்த₃யித்வா லவணநிஶிசரம் ப்ரார்த₃ய: ஶூத்₃ரபாஶம்
தாவத்₃வால்மீகிகே₃ஹே க்ருதவஸதிருபாஸூத ஸீதா ஸுதௌ தே || 8||
8. கங்கை முதலிய தீர்த்தங்களால் தங்களுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பதினாயிரம் வருடங்களுக்குமேல் மகிழ்ச்சியாய் வாழ்ந்தீர்கள். படிப்பற்ற ஒருவனின் சொல்லால், கர்ப்பமாக இருந்த சீதையைக் காட்டுக்கு அனுப்பினீர். சத்ருக்னன், லவணன் என்ற அசுரனை அழித்தான். சம்பூகன் என்ற அசுரனைக் கொன்றீர்கள். வால்மீகியின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை, இரு மகன்களைப் பெற்றாள்.
वाल्मीकेस्त्वत्सुतोद्गापितमधुरकृतेराज्ञया यज्ञवाटे
सीतां त्वय्याप्तुकामे क्षितिमविशदसौ त्वं च कालार्थितोऽभू: ।
हेतो: सौमित्रिघाती स्वयमथ सरयूमग्ननिश्शेषभृत्यै:
साकं नाकं प्रयातो निजपदमगमो देव वैकुण्ठमाद्यम् ॥९॥
வால்மீகேஸ்த்வத்ஸுதோத்₃கா₃பிதமது₄ரக்ருதேராஜ்ஞயா யஜ்ஞவாடே
ஸீதாம் த்வய்யாப்துகாமே க்ஷிதிமவிஶத₃ஸௌ த்வம் ச காலார்தி₂தோ(அ)பூ₄: |
ஹேதோ: ஸௌமித்ரிகா₄தீ ஸ்வயமத₂ ஸரயூமக்₃நநிஶ்ஶேஷப்₄ருத்யை:
ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபத₃மக₃மோ தே₃வ வைகுண்ட₂மாத்₃யம் || 9||
9. தாங்கள் அஸ்வமேத யாகம் செய்தீர். அதில், தங்கள் புத்திரர்கள், வால்மீகி முனிவரின் சொல்படி ராமாயணத்தைப் பாடினார்கள். முனிவர், சீதையை ஏற்கும்படி உத்தரவிட்டார். தாங்கள் அடைய விரும்பினாலும் அவள் பூமியில் பிரவேசித்தாள். லக்ஷ்மணனையும் தியாகம் செய்தீர். யமதர்மனின் வேண்டுகோளுக்கிணங்க, சரயூ நதியில் மூழ்கி வைகுண்டத்தை அடைந்தீர்.
सोऽयं मर्त्यावतारस्तव खलु नियतं मर्त्यशिक्षार्थमेवं
विश्लेषार्तिर्निरागस्त्यजनमपि भवेत् कामधर्मातिसक्त्या ।
नो चेत् स्वात्मानुभूते: क्व नु तव मनसो विक्रिया चक्रपाणे
स त्वं सत्त्वैकमूर्ते पवनपुरपते व्याधुनु व्याधितापान् ॥१०॥
ஸோ(அ)யம் மர்த்யாவதாரஸ்தவ க₂லு நியதம் மர்த்யஶிக்ஷார்த₂மேவம்
விஶ்லேஷார்திர்நிராக₃ஸ்த்யஜநமபி ப₄வேத் காமத₄ர்மாதிஸக்த்யா |
நோ சேத் ஸ்வாத்மாநுபூ₄தே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்த்வைகமூர்தே பவநபுரபதே வ்யாது₄நு வ்யாதி₄தாபாந் || 10||
10. காமம், தர்மம் இவற்றினால் ஏற்பட்ட பற்றினாலும், பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தினாலும், குற்றமற்றவர்களும் சிரமத்தைக் அடைவார்கள் என்ற உண்மையை உலகிற்கு விளக்கவே தாங்கள் மனித உருவம் எடுத்து வந்தீர். இல்லையெனில் சக்கரம் ஏந்திய உமக்கு மனவிகாரம் எப்படி ஏற்படும்? சுத்தஸத்வ ரூபமான குருவாயூரப்பா! அத்தகைய நீர், வியாதிமூலம் ஏற்பட்ட எனது தாபங்களைப் போக்க வேண்டும்.
No comments:
Post a Comment