Saturday, April 19, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 50, ஸ்ரீ நாராயணீயம் 50வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -50
பகாசுர, வத்ஸாசுர வதம்

तरलमधुकृत् वृन्दे वृन्दावनेऽथ मनोहरे
पशुपशिशुभि: साकं वत्सानुपालनलोलुप: ।
हलधरसखो देव श्रीमन् विचेरिथ धारयन्
गवलमुरलीवेत्रं नेत्राभिरामतनुद्युति: ॥१॥

தரலமது₄க்ருத் வ்ருந்தே₃ வ்ருந்தா₃வநே(அ)த₂ மநோஹரே
பஶுபஶிஶுபி₄: ஸாகம் வத்ஸாநுபாலநலோலுப: |
ஹலத₄ரஸகோ₂ தே₃வ ஶ்ரீமந் விசேரித₂ தா₄ரயந்
க₃வலமுரலீவேத்ரம் நேத்ராபி₄ராமதநுத்₃யுதி: || 1||

1. லக்ஷ்மீபதியே! வண்டுகள் ரீங்காரம் செய்யும் பிருந்தாவனத்தில், கொம்பு, புல்லாங்குழல், பிரம்பு முதலியவற்றை எடுத்துக்கொண்டு, பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு, தாங்கள் திரிந்து மகிழ்ந்தீர்கள்.

विहितजगतीरक्षं लक्ष्मीकराम्बुजलालितं
ददति चरणद्वन्द्वं वृन्दावने त्वयि पावने ।
किमिव न बभौ सम्पत्सम्पूरितं तरुवल्लरी-
सलिलधरणीगोत्रक्षेत्रादिकं कमलापते ॥२॥

விஹிதஜக₃தீரக்ஷம் லக்ஷ்மீகராம்பு₃ஜலாலிதம்
த₃த₃தி சரணத்₃வந்த்₃வம் வ்ருந்தா₃வநே த்வயி பாவநே |
கிமிவ ந ப₃பௌ₄ ஸம்பத்ஸம்பூரிதம் தருவல்லரீ-
ஸலிலத₄ரணீகோ₃த்ரக்ஷேத்ராதி₃கம் கமலாபதே || 2||

2. மகாலக்ஷ்மியின் கைகளால் வருடப்படுவதும், உலகத்தைக் காக்கின்றதுமான தங்கள் பாதம் பட்டு, மரங்கள், கொடிகள், நீர், பூமி, மலை, வயல்கள் முதலிய யாவையும் பெருமை உடையதாய் செழித்து விளங்கின.

विलसदुलपे कान्तारान्ते समीरणशीतले
विपुलयमुनातीरे गोवर्धनाचलमूर्धसु ।
ललितमुरलीनाद: सञ्चारयन् खलु वात्सकं
क्वचन दिवसे दैत्यं वत्साकृतिं त्वमुदैक्षथा: ॥३॥

விலஸது₃லபே காந்தாராந்தே ஸமீரணஶீதலே
விபுலயமுநாதீரே கோ₃வர்த₄நாசலமூர்த₄ஸு |
லலிதமுரலீநாத₃: ஸஞ்சாரயந் க₂லு வாத்ஸகம்
க்வசந தி₃வஸே தை₃த்யம் வத்ஸாக்ருதிம் த்வமுதை₃க்ஷதா₂: || 3||

3. பச்சைப் புல்வெளியிலும், கோவர்த்தன மலையிலும் குழலூதிக்கொண்டு கன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்த நீர், ஒரு நாள், கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தீர்கள்.

रभसविलसत्पुच्छं विच्छायतोऽस्य विलोकयन्
किमपि वलितस्कन्धं रन्ध्रप्रतीक्षमुदीक्षितम् ।
तमथ चरणे बिभ्रद्विभ्रामयन् मुहुरुच्चकै:
कुहचन महावृक्षे चिक्षेपिथ क्षतजीवितम् ॥४॥

ரப₄ஸவிலஸத்புச்ச₂ம் விச்சா₂யதோ(அ)ஸ்ய விலோகயந்
கிமபி வலிதஸ்கந்த₄ம் ரந்த்₄ரப்ரதீக்ஷமுதீ₃க்ஷிதம் |
தமத₂ சரணே பி₃ப்₄ரத்₃விப்₄ராமயந் முஹுருச்சகை:
குஹசந மஹாவ்ருக்ஷே சிக்ஷேபித₂ க்ஷதஜீவிதம் || 4||

4. அவன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு, தாங்கள் நெருங்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். அவனைப் பார்த்து, அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி, அவனை ஒரு மரத்தின் மீது எறிந்து, அவனைக் கொன்றீர்கள்.

निपतति महादैत्ये जात्या दुरात्मनि तत्क्षणं
निपतनजवक्षुण्णक्षोणीरुहक्षतकानने ।
दिवि परिमिलत् वृन्दा वृन्दारका: कुसुमोत्करै:
शिरसि भवतो हर्षाद्वर्षन्ति नाम तदा हरे ॥५॥

நிபததி மஹாதை₃த்யே ஜாத்யா து₃ராத்மநி தத்க்ஷணம்
நிபதநஜவக்ஷுண்ணக்ஷோணீருஹக்ஷதகாநநே |
தி₃வி பரிமிலத் வ்ருந்தா₃ வ்ருʼந்தா₃ரகா: குஸுமோத்கரை:
ஶிரஸி ப₄வதோ ஹர்ஷாத்₃வர்ஷந்தி நாம ததா₃ ஹரே || 5||

5. அவன் இறந்து கீழே விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

सुरभिलतमा मूर्धन्यूर्ध्वं कुत: कुसुमावली
निपतति तवेत्युक्तो बालै: सहेलमुदैरय: ।
झटिति दनुजक्षेपेणोर्ध्वं गतस्तरुमण्डलात्
कुसुमनिकर: सोऽयं नूनं समेति शनैरिति ॥६॥

ஸுரபி₄லதமா மூர்த₄ந்யூர்த்₄வம் குத: குஸுமாவலீ
நிபததி தவேத்யுக்தோ பா₃லை: ஸஹேலமுதை₃ரய: |
ஜ₂டிதி த₃நுஜக்ஷேபேணோர்த்₄வம் க₃தஸ்தருமண்ட₃லாத்
குஸுமநிகர: ஸோ(அ)யம் நூநம் ஸமேதி ஶநைரிதி || 6||

6. இடைச்சிறுவர்கள், உமது தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து, “மிகவும் மணம் நிரம்பிய இந்தப் பூக்கள் எங்கிருந்து விழுகின்றன?” என்று கேட்டனர். தாங்கள், “அசுரனை மரத்தில் எறிந்தபோது அம்மரத்திலிருந்த பூக்கள் உயரே கிளம்பி, மெதுவே கீழே விழுகிறது” என்று விளக்கம் அளித்தீர்கள்.

क्वचन दिवसे भूयो भूयस्तरे परुषातपे
तपनतनयापाथ: पातुं गता भवदादय: ।
चलितगरुतं प्रेक्षामासुर्बकं खलु विस्म्रृतं
क्षितिधरगरुच्छेदे कैलासशैलमिवापरम् ॥७॥

க்வசந தி₃வஸே பூ₄யோ பூ₄யஸ்தரே பருஷாதபே
தபநதநயாபாத₂: பாதும் க₃தா ப₄வதா₃த₃ய: |
சலிதக₃ருதம் ப்ரேக்ஷாமாஸுர்ப₃கம் க₂லு விஸ்ம்ர்ருதம்
க்ஷிதித₄ரக₃ருச்சே₂தே₃ கைலாஸஶைலமிவாபரம் || 7||

7. ஒரு நாள், அதிக வெயிலால் தாபமடைந்த ஆயர் சிறுவர்களும், தாங்களும்,
யமுனை நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றீர்கள். அங்கே, இறக்கைகளை அசைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டீர்கள். முன்பு இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டும்போது, வெட்ட மறந்த இறக்கையுள்ள மற்றொரு பெரிய மலை போல, கைலாச மலையைப் போலத் தோற்றமளித்தது.

पिबति सलिलं गोपव्राते भवन्तमभिद्रुत:
स किल निगिलन्नग्निप्रख्यं पुनर्द्रुतमुद्वमन् ।
दलयितुमगात्त्रोट्या: कोट्या तदाऽऽशु भवान् विभो
खलजनभिदाचुञ्चुश्चञ्चू प्रगृह्य ददार तम् ॥८॥

பிப₃தி ஸலிலம் கோ₃பவ்ராதே ப₄வந்தமபி₄த்₃ருத:
ஸ கில நிகி₃லந்நக்₃நிப்ரக்₂யம் புநர்த்₃ருதமுத்₃வமந் |
த₃லயிதுமகா₃த்த்ரோட்யா: கோட்யா ததா₃(அ)(அ)ஶு ப₄வாந் விபோ₄
க₂லஜநபி₄தா₃சுஞ்சுஶ்சஞ்சூ ப்ரக்₃ருʼஹ்ய த₃தா₃ர தம் || 8||

8. இடைச்சிறுவர்கள் தண்ணீர் குடிக்கும்போது, அந்தக் கொக்கு தங்களைக் கொத்தியது. அப்போது, தாங்கள் அதற்கு நெருப்பு போல ஆனீர்கள். மறுபடியும் தங்களை விழுங்க வந்தது. தீயவர்களை அழிக்க விருப்பம் கொண்ட தாங்கள், அதன் அலகினைப் பற்றி, இரு கூறாகக் கிழித்துக் கொன்றீர்கள்.

सपदि सहजां सन्द्रष्टुं वा मृतां खलु पूतना-
मनुजमघमप्यग्रे गत्वा प्रतीक्षितुमेव वा ।
शमननिलयं याते तस्मिन् बके सुमनोगणे
किरति सुमनोवृन्दं वृन्दावनात् गृहमैयथा: ॥९॥

ஸபதி₃ ஸஹஜாம் ஸந்த்₃ரஷ்டும் வா ம்ருதாம் க₂லு பூதநா-
மநுஜமக₄மப்யக்₃ரே க₃த்வா ப்ரதீக்ஷிதுமேவ வா |
ஶமநநிலயம் யாதே தஸ்மிந் ப₃கே ஸுமநோக₃ணே
கிரதி ஸுமநோவ்ருந்த₃ம் வ்ருந்தா₃வநாத் க்₃ருஹமையதா₂: || 9||

9. பகாசுரன் என்ற கொக்கு வடிவில் வந்த அசுரன், தன்னுடைய சகோதரியான பூதனையைக் காண்பதற்கோ, அல்லது இனிமேல் இறக்கப்போகும் அகாசுரனை எதிர்கொள்ளவோ யமலோகம் சென்றான். தேவர்கள் பூமழை பொழிந்தனர். தாங்களும் பிருந்தாவனத்திலிருந்து வீடு திரும்பினீர்கள்.

ललितमुरलीनादं दूरान्निशम्य वधूजनै-
स्त्वरितमुपगम्यारादारूढमोदमुदीक्षित: ।
जनितजननीनन्दानन्द: समीरणमन्दिर-
प्रथितवसते शौरे दूरीकुरुष्व ममामयान् ॥१०॥

லலிதமுரலீநாத₃ம் தூ₃ராந்நிஶம்ய வதூ₄ஜநை-
ஸ்த்வரிதமுபக₃ம்யாராதா₃ரூட₄மோத₃முதீ₃க்ஷித: |
ஜநிதஜநநீநந்தா₃நந்த₃: ஸமீரணமந்தி₃ர-
ப்ரதி₂தவஸதே ஶௌரே தூ₃ரீகுருஷ்வ மமாமயாந் || 10||

10. குருவாயூரில் குடி கொண்டிருக்கும் கிருஷ்ணா! தங்கள் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன் தங்கள் அருகே ஓடி வந்தனர். தந்தை நந்தகோபனுக்கும், தாய் யசோதைக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் தாங்கள், என் நோய்களைப் போக்கி அருள வேண்டும்.

No comments:

Post a Comment