Tuesday, April 22, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 53, ஸ்ரீ நாராயணீயம் 53வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -53
தேனுகாசுர வதம்

अतीत्य बाल्यं जगतां पते त्वमुपेत्य पौगण्डवयो मनोज्ञं ।
उपेक्ष्य वत्सावनमुत्सवेन प्रावर्तथा गोगणपालनायाम् ॥१॥

அதீத்ய பா₃ல்யம் ஜக₃தாம் பதே த்வமுபேத்ய பௌக₃ண்ட₃வயோ மநோஜ்ஞம் |
உபேக்ஷ்ய வத்ஸாவநமுத்ஸவேந ப்ராவர்ததா₂ கோ₃க₃ணபாலநாயாம் || 1||

1. குழந்தைப் பருவத்தைத் தாண்டி, பிள்ளைப் பருவத்தை அடைந்தீர்கள். கன்றுகளை மேய்ப்பதை விட்டு, பசுக்களை மேய்த்து ரக்ஷிக்கத் தொடங்கினீர்கள்.

उपक्रमस्यानुगुणैव सेयं मरुत्पुराधीश तव प्रवृत्ति: ।
गोत्रापरित्राणकृतेऽवतीर्णस्तदेव देवाऽऽरभथास्तदा यत् ॥२॥

உபக்ரமஸ்யாநுகு₃ணைவ ஸேயம் மருத்புராதீ₄ஶ தவ ப்ரவ்ருத்தி: |
கோ₃த்ராபரித்ராணக்ருதே(அ)வதீர்ணஸ்ததே₃வ தே₃வா(அ)(அ)ரப₄தா₂ஸ்ததா₃ யத் || 2||

2. பூமியைக் காக்க அவதாரம் செய்த தாங்கள், ‘கோ’ எனப்படும் பசுக்களையும் காக்கத் தொடங்கினீர்கள்.

कदापि रामेण समं वनान्ते वनश्रियं वीक्ष्य चरन् सुखेन ।
श्रीदामनाम्न: स्वसखस्य वाचा मोदादगा धेनुककाननं त्वम् ॥३॥

கதா₃பி ராமேண ஸமம் வநாந்தே வநஶ்ரியம் வீக்ஷ்ய சரந் ஸுகே₂ந |
ஶ்ரீதா₃மநாம்ந: ஸ்வஸக₂ஸ்ய வாசா மோதா₃த₃கா₃ தே₄நுககாநநம் த்வம் || 3||

3. ஒரு முறை பலராமனுடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும்போது, ஸ்ரீதாமன் என்ற நண்பன் சொன்னபடி தேனுகன் என்ற அசுரனின் காட்டிற்குச் சென்றீர்கள்.

उत्तालतालीनिवहे त्वदुक्त्या बलेन धूतेऽथ बलेन दोर्भ्याम् ।
मृदु: खरश्चाभ्यपतत्पुरस्तात् फलोत्करो धेनुकदानवोऽपि ॥४॥

உத்தாலதாலீநிவஹே த்வது₃க்த்யா ப₃லேந தூ₄தே(அ)த₂ ப₃லேந தோ₃ர்ப்₄யாம் |
ம்ருது₃: க₂ரஶ்சாப்₄யபதத்புரஸ்தாத் ப₂லோத்கரோ தே₄நுகதா₃நவோ(அ)பி || 4||

4. தாங்கள் கூறியதால், பலராமன், அங்கு உயர்ந்திருந்த பனைமரங்களை வலுவாக அசைத்தார். பழுத்ததும், பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன. கூடவே தேனுகனென்ற அசுரனும் கீழே விழுந்தான்.

समुद्यतो धैनुकपालनेऽहं कथं वधं धैनुकमद्य कुर्वे ।
इतीव मत्वा ध्रुवमग्रजेन सुरौघयोद्धारमजीघनस्त्वम् ॥५॥

ஸமுத்₃யதோ தை₄நுகபாலநே(அ)ஹம் கத₂ம் வத₄ம் தை₄நுகமத்₃ய குர்வே |
இதீவ மத்வா த்₄ருவமக்₃ரஜேந ஸுரௌக₄யோத்₃தா₄ரமஜீக₄நஸ்த்வம் || 5||

5. தேவனே! பசுக்களைக் (தைனுக) காக்கத் தொடங்கிய தாங்கள், அந்தப் பெயர் கொண்ட அசுரனை (தேனுகன்) வதம் செய்ய மனம் வராததால், பலராமனைக் கொண்டு வதம் செய்தீர்கள்.

तदीयभृत्यानपि जम्बुकत्वेनोपागतानग्रजसंयुतस्त्वम् ।
जम्बूफलानीव तदा निरास्थस्तालेषु खेलन् भगवन् निरास्थ: ॥६॥

ததீ₃யப்₄ருத்யாநபி ஜம்பு₃கத்வேநோபாக₃தாநக்₃ரஜஸம்யுதஸ்த்வம் |
ஜம்பூ₃ப₂லாநீவ ததா₃ நிராஸ்த₂ஸ்தாலேஷு கே₂லந் ப₄க₃வந் நிராஸ்த₂: || 6||

6. அந்த அசுரனுடைய பணியாட்கள் நரி வேடத்தில் தங்களைத் தாக்க வந்தனர். அவர்களை அனாயாசமாக, நாகப்பழங்களைப் போல பனைமரங்களில் எறிந்தீர்கள்.

विनिघ्नति त्वय्यथ जम्बुकौघं सनामकत्वाद्वरुणस्तदानीम् ।
भयाकुलो जम्बुकनामधेयं श्रुतिप्रसिद्धं व्यधितेति मन्ये ॥७॥

விநிக்₄நதி த்வய்யத₂ ஜம்பு₃கௌக₄ம் ஸநாமகத்வாத்₃வருணஸ்ததா₃நீம் |
ப₄யாகுலோ ஜம்பு₃கநாமதே₄யம் ஶ்ருதிப்ரஸித்₃த₄ம் வ்யதி₄தேதி மந்யே || 7||

7. நரி வேடத்தில் வந்த அனைவரையும் கொன்றீர்கள். அதைக் கண்ட வருணன் தனக்கு ‘ஜம்புகன்’ என்ற பெயர் இருப்பதால் பயந்தான். வேதத்தில் மட்டும் தனக்கு அந்தப் பெயர் இருக்கட்டும் என்று நினைத்தான்.

तवावतारस्य फलं मुरारे सञ्जातमद्येति सुरैर्नुतस्त्वम् ।
सत्यं फलं जातमिहेति हासी बालै: समं तालफलान्यभुङ्क्था: ॥८॥

தவாவதாரஸ்ய ப₂லம் முராரே ஸஞ்ஜாதமத்₃யேதி ஸுரைர்நுதஸ்த்வம் |
ஸத்யம் ப₂லம் ஜாதமிஹேதி ஹாஸீ பா₃லை: ஸமம் தாலப₂லாந்யபு₄ங்க்தா₂: || 8||

8. தாங்கள் அவதரித்த பலன் கிடைத்துவிட்டது என்று தேவர்கள் துதித்தனர். ‘ஆம் பழம் கிடைத்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே சிறுவர்களுடன் பனம்பழங்களைச் சாப்பிட்டீர்கள்.

मधुद्रवस्रुन्ति बृहन्ति तानि फलानि मेदोभरभृन्ति भुक्त्वा ।
तृप्तैश्च दृप्तैर्भवनं फलौघं वहद्भिरागा: खलु बालकैस्त्वम् ॥९॥

மது₄த்₃ரவஸ்ருந்தி ப்₃ருஹந்தி தாநி ப₂லாநி மேதோ₃ப₄ரப்₄ருந்தி பு₄க்த்வா |
த்ருப்தைஶ்ச த்₃ருப்தைர்ப₄வநம் ப₂லௌக₄ம் வஹத்₃பி₄ராகா₃: க₂லு பா₃லகைஸ்த்வம் || 9||

9. பெரிதாகவும், நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை உண்டு மகிழ்ச்சி அடைந்தீர்கள். நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினீர்கள்.

हतो हतो धेनुक इत्युपेत्य फलान्यदद्भिर्मधुराणि लोकै: ।
जयेति जीवेति नुतो विभो त्वं मरुत्पुराधीश्वर पाहि रोगात् ॥१०॥

ஹதோ ஹதோ தே₄நுக இத்யுபேத்ய ப₂லாந்யத₃த்₃பி₄ர்மது₄ராணி லோகை: |
ஜயேதி ஜீவேதி நுதோ விபோ₄ த்வம் மருத்புராதீ₄ஶ்வர பாஹி ரோகா₃த் || 10||

10. மக்கள், பழங்களைத் தின்று கொண்டு, ‘தேனுகன் இறந்தான்’ என்று கூறிக்கொண்டு, ‘தாங்கள் நன்றாக இருக்க வேண்டும், நீண்ட காலம் வாழ வேண்டும்’ என்று தங்களை வாழ்த்தினார்கள். அப்படிப்பட்ட தாங்கள் நோயிலிருந்து என்னைக் காக்க வேண்டும் என பட்டத்ரி வேண்ட, குருவாயூரப்பனான தாங்களும் தலையை அசைத்து அங்கீகரித்தீராமே!

No comments:

Post a Comment