Tuesday, April 8, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 39, ஸ்ரீ நாராயணீயம் 39வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

 த³ஶகம் -39
யோகமாயா அவதாரம்
கண்ணன் பிறப்பும் கோகுலத்தில் மகிழ்ச்சியும்

भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन्
ददर्श गगनोच्चलज्जलभरां कलिन्दात्मजाम् ।
अहो सलिलसञ्चय: स पुनरैन्द्रजालोदितो
जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ ॥१॥

ப₄வந்தமயமுத்₃வஹந் யது₃குலோத்₃வஹோ நிஸ்ஸரந்
த₃த₃ர்ஶ க₃க₃நோச்சலஜ்ஜலப₄ராம் கலிந்தா₃த்மஜாம் | 
அஹோ ஸலிலஸஞ்சய: ஸ புநரைந்த்₃ரஜாலோதி₃தோ
ஜலௌக₄ இவ தத்க்ஷணாத் ப்ரபத₃மேயதாமாயயௌ || 1|| 

1. யதுகுலத்தில் தோன்றிய வசுதேவர் தங்களைக் கையில் எடுத்துச் செல்லும்போது, யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!

प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका-
मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् ।
भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा-
द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगत: ॥२॥

ப்ரஸுப்தபஶுபாலிகாம் நிப்₄ருʼதமாருத₃த்₃பா₃லிகா-
மபாவ்ருதகவாடிகாம் பஶுபவாடிகாமாவிஶந் | 
ப₄வந்தமயமர்பயந் ப்ரஸவதல்பகே தத்பதா₃-
த்₃வஹந் கபடகந்யகாம் ஸ்வபுரமாக₃தோ வேக₃த: || 2|| 

2. கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே உம்மைப் படுக்க வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.

ततस्त्वदनुजारवक्षपितनिद्रवेगद्रवद्-
भटोत्करनिवेदितप्रसववार्तयैवार्तिमान् ।
विमुक्तचिकुरोत्करस्त्वरितमापतन् भोजरा-
डतुष्ट इव दृष्टवान् भगिनिकाकरे कन्यकाम् ॥३॥

ததஸ்த்வத₃நுஜாரவக்ஷபிதநித்₃ரவேக₃த்₃ரவத்₃-
ப₄டோத்கரநிவேதி₃தப்ரஸவவார்தயைவார்திமாந் | 
விமுக்தசிகுரோத்கரஸ்த்வரிதமாபதந் போ₄ஜரா-
ட₃துஷ்ட இவ த்₃ருஷ்டவாந் ப₄கி₃நிகாகரே கந்யகாம் || 3|| 

3. குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷமடையவில்லை.

ध्रुवं कपटशालिनो मधुहरस्य माया भवे-
दसाविति किशोरिकां भगिनिकाकरालिङ्गिताम् ।
द्विपो नलिनिकान्तरादिव मृणालिकामाक्षिप-
न्नयं त्वदनुजामजामुपलपट्टके पिष्टवान् ॥४॥

த்₄ருவம் கபடஶாலிநோ மது₄ஹரஸ்ய மாயா ப₄வே-
த₃ஸாவிதி கிஶோரிகாம் ப₄கி₃நிகாகராலிங்கி₃தாம் | 
த்₃விபோ நலிநிகாந்தராதி₃வ ம்ருணாலிகாமாக்ஷிப-
ந்நயம் த்வத₃நுஜாமஜாமுபலபட்டகே பிஷ்டவாந் || 4|| 

4. இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாக இழுத்து, கற்பாறையில் அடித்தான்.

तत: भवदुपासको झटिति मृत्युपाशादिव
प्रमुच्य तरसैव सा समधिरूढरूपान्तरा ।
अधस्तलमजग्मुषी विकसदष्टबाहुस्फुर-
न्महायुधमहो गता किल विहायसा दिद्युते ॥५॥

தத: ப₄வது₃பாஸகோ ஜ₂டிதி ம்ருத்யுபாஶாதி₃வ
ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதி₄ரூட₄ரூபாந்தரா | 
அத₄ஸ்தலமஜக்₃முஷீ விகஸத₃ஷ்டபா₃ஹுஸ்பு₂ர-
ந்மஹாயுத₄மஹோ க₃தா கில விஹாயஸா தி₃த்₃யுதே || 5|| 

5. யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் தங்கள் பக்தர்கள் போல, அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பரந்து விளங்கினாள்.

नृशंसतर कंस ते किमु मया विनिष्पिष्टया
बभूव भवदन्तक: क्वचन चिन्त्यतां ते हितम् ।
इति त्वदनुजा विभो खलमुदीर्य तं जग्मुषी
मरुद्गणपणायिता भुवि च मन्दिराण्येयुषी ॥६॥

ந்ருஶம்ஸதர கம்ʼஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா
ப₃பூ₄வ ப₄வத₃ந்தக: க்வசந சிந்த்யதாம் தே ஹிதம் | 
இதி த்வத₃நுஜா விபோ₄ க₂லமுதீ₃ர்ய தம் ஜக்₃முஷீ
மருத்₃க₃ணபணாயிதா பு₄வி ச மந்தி₃ராண்யேயுஷீ || 6|| 

6. “கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். தேவர்கள் துதிக்க, பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.

प्रगे पुनरगात्मजावचनमीरिता भूभुजा
प्रलम्बबकपूतनाप्रमुखदानवा मानिन: ।
भवन्निधनकाम्यया जगति बभ्रमुर्निर्भया:
कुमारकविमारका: किमिव दुष्करं निष्कृपै: ॥७॥

ப்ரகே₃ புநரகா₃த்மஜாவசநமீரிதா பூ₄பு₄ஜா
ப்ரலம்ப₃ப₃கபூதநாப்ரமுக₂தா₃நவா மாநிந: | 
ப₄வந்நித₄நகாம்யயா ஜக₃தி ப₃ப்₄ரமுர்நிர்ப₄யா:
குமாரகவிமாரகா: கிமிவ து₃ஷ்கரம் நிஷ்க்ருபை: || 7|| 

7. மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், தங்களை வதம் செய்ய வேண்டும் என்பதால், அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று பயமற்றுத் திரிந்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு, செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.

तत: पशुपमन्दिरे त्वयि मुकुन्द नन्दप्रिया-
प्रसूतिशयनेशये रुदति किञ्चिदञ्चत्पदे ।
विबुध्य वनिताजनैस्तनयसम्भवे घोषिते
मुदा किमु वदाम्यहो सकलमाकुलं गोकुलम् ॥८॥

தத: பஶுபமந்தி₃ரே த்வயி முகுந்த₃ நந்த₃ப்ரியா-
ப்ரஸூதிஶயநேஶயே ருத₃தி கிஞ்சித₃ஞ்சத்பதே₃ | 
விபு₃த்₄ய வநிதாஜநைஸ்தநயஸம்ப₄வே கோ₄ஷிதே
முதா₃ கிமு வதா₃ம்யஹோ ஸகலமாகுலம் கோ₃குலம் || 8|| 

8. முகுந்தா! தாங்கள், நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு அழுதீர்கள். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது.

अहो खलु यशोदया नवकलायचेतोहरं
भवन्तमलमन्तिके प्रथममापिबन्त्या दृशा ।
पुन: स्तनभरं निजं सपदि पाययन्त्या मुदा

मनोहरतनुस्पृशा जगति पुण्यवन्तो जिता: ॥९॥
அஹோ க₂லு யஶோத₃யா நவகலாயசேதோஹரம்
ப₄வந்தமலமந்திகே ப்ரத₂மமாபிப₃ந்த்யா த்₃ருஶா | 
புந: ஸ்தநப₄ரம் நிஜம் ஸபதி₃ பாயயந்த்யா முதா₃
மநோஹரதநுஸ்ப்ருஶா ஜக₃தி புண்யவந்தோ ஜிதா: || 9|| 

9. காயாம்பூ போன்ற தங்கள் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் தங்களுக்குப் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை.

भवत्कुशलकाम्यया स खलु नन्दगोपस्तदा
प्रमोदभरसङ्कुलो द्विजकुलाय किन्नाददात् ।
तथैव पशुपालका: किमु न मङ्गलं तेनिरे
जगत्त्रितयमङ्गल त्वमिह पाहि मामामयात् ॥१०॥

ப₄வத்குஶலகாம்யயா ஸ க₂லு நந்த₃கோ₃பஸ்ததா₃
ப்ரமோத₃ப₄ரஸங்குலோ த்₃விஜகுலாய கிந்நாத₃தா₃த் | 
ததை₂வ பஶுபாலகா: கிமு ந மங்க₃லம் தேநிரே
ஜக₃த்த்ரிதயமங்க₃ல த்வமிஹ பாஹி மாமாமயாத் || 10||

10. நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். இவ்வாறு மூவுலகங்களுக்கும் மங்களத்தை அளிக்கும் தாங்கள் என் வியாதிகளைப் போக்கிக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment