த³ஶகம் -37
கிருஷ்ணாவதாரத்தின் காரணம்
सान्द्रानन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे
त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् ।
तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दूरार्दिता
भूमि: प्राप विरिञ्चमाश्रितपदं देवै: पुरैवागतै: ॥१॥
ஸாந்த்₃ராநந்த₃தநோ ஹரே நநு புரா தை₃வாஸுரே ஸங்க₃ரே
த்வத்க்ருத்தா அபி கர்மஶேஷவஶதோ யே தே ந யாதா க₃திம் |
தேஷாம் பூ₄தலஜந்மநாம் தி₃திபு₄வாம் பா₄ரேண தூ₃ரார்தி₃தா
பூ₄மி: ப்ராப விரிஞ்சமாஶ்ரிதபத₃ம் தே₃வை: புரைவாக₃தை: || 1||
1. ஆனந்த ரூபமானவனே! முன்பு தேவாசுர யுத்தத்தின் போது பல
அசுரர்களைக் கொன்றீர். பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரமனை அண்டினாள்.हा हा दुर्जनभूरिभारमथितां पाथोनिधौ पातुका-
मेतां पालय हन्त मे विवशतां सम्पृच्छ देवानिमान् ।
इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्य धाता महीं
देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे ॥२॥
ஹா ஹா து₃ர்ஜநபூ₄ரிபா₄ரமதி₂தாம் பாதோ₂நிதௌ₄ பாதுகா-
மேதாம் பாலய ஹந்த மே விவஶதாம் ஸம்ப்ருச்ச₂ தே₃வாநிமாந் |
இத்யாதி₃ப்ரசுரப்ரலாபவிவஶாமாலோக்ய தா₄தா மஹீம்
தே₃வாநாம் வத₃நாநி வீக்ஷ்ய பரிதோ த₃த்₄யௌ ப₄வந்தம் ஹரே || 2||
2. “பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன். என் நிலைமையை தேவர்களிடம் கேட்டு அறியவும்” என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன் தங்களைத் தியானித்தார்.
ऊचे चाम्बुजभूरमूनयि सुरा: सत्यं धरित्र्या वचो
नन्वस्या भवतां च रक्षणविधौ दक्षो हि लक्ष्मीपति: ।
सर्वे शर्वपुरस्सरा वयमितो गत्वा पयोवारिधिं
नत्वा तं स्तुमहे जवादिति ययु: साकं तवाकेतनम् ॥३॥
ஊசே சாம்பு₃ஜபூ₄ரமூநயி ஸுரா: ஸத்யம் த₄ரித்ர்யா வசோ
நந்வஸ்யா ப₄வதாம் ச ரக்ஷணவிதௌ₄ த₃க்ஷோ ஹி லக்ஷ்மீபதி: |
ஸர்வே ஶர்வபுரஸ்ஸரா வயமிதோ க₃த்வா பயோவாரிதி₄ம்
நத்வா தம் ஸ்துமஹே ஜவாதி₃தி யயு: ஸாகம் தவாகேதநம் || 3||
3. “தேவர்களே! பூமாதேவி சொல்வது உண்மை என அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது” என்று பிரமன் சொன்னார். நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம் என்று கூறி பரமசிவனுடன் பாற்கடலை அடைந்தனர்.
ते मुग्धानिलशालिदुग्धजलधेस्तीरं गता: सङ्गता
यावत्त्वत्पदचिन्तनैकमनसस्तावत् स पाथोजभू: ।
त्वद्वाचं हृदये निशम्य सकलानानन्दयन्नूचिवा-
नाख्यात: परमात्मना स्वयमहं वाक्यं तदाकर्ण्यताम् ॥४॥
தே முக்₃தா₄நிலஶாலிது₃க்₃த₄ஜலதே₄ஸ்தீரம் க₃தா: ஸங்க₃தா
யாவத்த்வத்பத₃சிந்தநைகமநஸஸ்தாவத் ஸ பாதோ₂ஜபூ₄: |
த்வத்₃வாசம் ஹ்ருத₃யே நிஶம்ய ஸகலாநாநந்த₃யந்நூசிவா-
நாக்₂யாத: பரமாத்மநா ஸ்வயமஹம் வாக்யம் ததா₃கர்ண்யதாம் || 4||
4. குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்து, தங்களைத் தியானித்தனர். பிரமன் உம்முடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தம் தரும் தங்கள் சொற்களைக் கூறத் தொடங்கினார்.
जाने दीनदशामहं दिविषदां भूमेश्च भीमैर्नृपै-
स्तत्क्षेपाय भवामि यादवकुले सोऽहं समग्रात्मना ।
देवा वृष्णिकुले भवन्तु कलया देवाङ्गनाश्चावनौ
मत्सेवार्थमिति त्वदीयवचनं पाथोजभूरूचिवान् ॥५॥
ஜாநே தீ₃நத₃ஶாமஹம் தி₃விஷதா₃ம் பூ₄மேஶ்ச பீ₄மைர்ந்ருபை-
ஸ்தத்க்ஷேபாய ப₄வாமி யாத₃வகுலே ஸோ(அ)ஹம் ஸமக்₃ராத்மநா |
தே₃வா வ்ருஷ்ணிகுலே ப₄வந்து கலயா தே₃வாங்க₃நாஶ்சாவநௌ
மத்ஸேவார்த₂மிதி த்வதீ₃யவசநம் பாதோ₂ஜபூ₄ரூசிவாந் || 5||
5. “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில் அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று தாங்கள் கூறியதை பிரமன் கூறினார்.
श्रुत्वा कर्णरसायनं तव वच: सर्वेषु निर्वापित-
स्वान्तेष्वीश गतेषु तावककृपापीयूषतृप्तात्मसु ।
विख्याते मधुरापुरे किल भवत्सान्निध्यपुण्योत्तरे
धन्यां देवकनन्दनामुदवहद्राजा स शूरात्मज: ॥६॥
ஶ்ருத்வா கர்ணரஸாயநம் தவ வச: ஸர்வேஷு நிர்வாபித-
ஸ்வாந்தேஷ்வீஶ க₃தேஷு தாவகக்ருபாபீயூஷத்ருப்தாத்மஸு |
விக்₂யாதே மது₄ராபுரே கில ப₄வத்ஸாந்நித்₄யபுண்யோத்தரே
த₄ந்யாம் தே₃வகநந்த₃நாமுத₃வஹத்₃ராஜா ஸ ஶூராத்மஜ: || 6||
6. உம்முடைய ஆனந்தம் தரும் சொற்களைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர். தங்கள் தொடர்பால் சிறந்த மதுரா நகரை ஆண்ட வசுதேவர் என்பவர் புண்ணியசாலியான தேவகியை மணந்தார்.
उद्वाहावसितौ तदीयसहज: कंसोऽथ सम्मानय-
न्नेतौ सूततया गत: पथि रथे व्योमोत्थया त्वद्गिरा ।
अस्यास्त्वामतिदुष्टमष्टमसुतो हन्तेति हन्तेरित:
सन्त्रासात् स तु हन्तुमन्तिकगतां तन्वीं कृपाणीमधात् ॥७॥
உத்₃வாஹாவஸிதௌ ததீ₃யஸஹஜ: கம்ஸோ(அ)த₂ ஸம்மாநய-
ந்நேதௌ ஸூததயா க₃த: பதி₂ ரதே₂ வ்யோமோத்த₂யா த்வத்₃கி₃ரா |
அஸ்யாஸ்த்வாமதிது₃ஷ்டமஷ்டமஸுதோ ஹந்தேதி ஹந்தேரித:
ஸந்த்ராஸாத் ஸ து ஹந்துமந்திகக₃தாம் தந்வீம் க்ருபாணீமதா₄த் || 7||
7. அவர்களைப் பெருமைப்படுத்த, தேவகியின் சகோதரனான கம்ஸன், அவர்களது ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “ மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.
गृह्णानश्चिकुरेषु तां खलमति: शौरेश्चिरं सान्त्वनै-
र्नो मुञ्चन् पुनरात्मजार्पणगिरा प्रीतोऽथ यातो गृहान् ।
आद्यं त्वत्सहजं तथाऽर्पितमपि स्नेहेन नाहन्नसौ
दुष्टानामपि देव पुष्टकरुणा दृष्टा हि धीरेकदा ॥८॥
க்₃ருஹ்ணாநஶ்சிகுரேஷு தாம் க₂லமதி: ஶௌரேஶ்சிரம் ஸாந்த்வநை-
ர்நோ முஞ்சந் புநராத்மஜார்பணகி₃ரா ப்ரீதோ(அ)த₂ யாதோ க்₃ருஹாந் |
ஆத்₃யம் த்வத்ஸஹஜம் ததா₂(அ)ர்பிதமபி ஸ்நேஹேந நாஹந்நஸௌ
து₃ஷ்டாநாமபி தே₃வ புஷ்டகருணா த்₃ருஷ்டா ஹி தீ₄ரேகதா₃ || 8||
8. தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப்படுத்தி, தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!
तावत्त्वन्मनसैव नारदमुनि: प्रोचे स भोजेश्वरं
यूयं नन्वसुरा: सुराश्च यदवो जानासि किं न प्रभो ।
मायावी स हरिर्भवद्वधकृते भावी सुरप्रार्थना-
दित्याकर्ण्य यदूनदूधुनदसौ शौरेश्च सूनूनहन् ॥९॥
தாவத்த்வந்மநஸைவ நாரத₃முநி: ப்ரோசே ஸ போ₄ஜேஶ்வரம்
யூயம் நந்வஸுரா: ஸுராஶ்ச யத₃வோ ஜாநாஸி கிம் ந ப்ரபோ₄ |
மாயாவீ ஸ ஹரிர்ப₄வத்₃வத₄க்ருதே பா₄வீ ஸுரப்ரார்த₂நா-
தி₃த்யாகர்ண்ய யதூ₃நதூ₃து₄நத₃ஸௌ ஶௌரேஶ்ச ஸூநூநஹந் || 9||
9. தங்கள் ஏவுதலால் நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன், வசுதேவருடைய குழந்தைகளைக் கொன்றான். யாதவர்களையும் நகரத்தை விட்டு விரட்டினான்.
प्राप्ते सप्तमगर्भतामहिपतौ त्वत्प्रेरणान्मायया
नीते माधव रोहिणीं त्वमपि भो:सच्चित्सुखैकात्मक: ।
देवक्या जठरं विवेशिथ विभो संस्तूयमान: सुरै:
स त्वं कृष्ण विधूय रोगपटलीं भक्तिं परां देहि मे ॥१०॥
ப்ராப்தே ஸப்தமக₃ர்ப₄தாமஹிபதௌ த்வத்ப்ரேரணாந்மாயயா
நீதே மாத₄வ ரோஹிணீம் த்வமபி போ₄:ஸச்சித்ஸுகை₂காத்மக: |
தே₃வக்யா ஜட₂ரம் விவேஶித₂ விபோ₄ ஸம்ஸ்தூயமாந: ஸுரை:
ஸ த்வம் க்ருஷ்ண விதூ₄ய ரோக₃படலீம் ப₄க்திம் பராம் தே₃ஹி மே || 10||
10. குருவாயூரப்பா! உம்முடைய சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். மாயையானவள் தங்கள் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். தாங்களும் தேவகியின் கர்ப்பத்தை அடைந்தீர்கள். அப்போது, தேவர்கள் தங்களைத் துதித்தனர். பெருமை நிரம்பிய கிருஷ்ணனான தாங்கள் என் நோய்களைப் போக்கி, என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.
No comments:
Post a Comment