Thursday, April 17, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 48, ஸ்ரீ நாராயணீயம் 48வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -48
நளகூபர, மணிக்ரீவ சாப விமோசனம்

मुदा सुरौघैस्त्वमुदारसम्मदै-
रुदीर्य दामोदर इत्यभिष्टुत: ।
मृदुदर: स्वैरमुलूखले लग-
न्नदूरतो द्वौ ककुभावुदैक्षथा: ॥१॥

முதா₃ ஸுரௌகை₄ஸ்த்வமுதா₃ரஸம்மதை₃-
ருதீ₃ர்ய தா₃மோத₃ர இத்யபி₄ஷ்டுத: |
ம்ருது₃த₃ர: ஸ்வைரமுலூக₂லே லக₃-
ந்நதூ₃ரதோ த்₃வௌ ககுபா₄வுதை₃க்ஷதா₂: || 1||

1. தேவர்கள் தங்களை ஆனந்தமுடன் துதித்து “தாமோதரன்” (கயிற்றால் இடுப்பில் கட்டப்பட்டவன்) என்று அழைத்தனர். உரலில் கட்டப்பட்ட நீர் அருகில் இரண்டு மரங்களைக் கண்டீர். 

कुबेरसूनुर्नलकूबराभिध:
परो मणिग्रीव इति प्रथां गत: ।
महेशसेवाधिगतश्रियोन्मदौ
चिरं किल त्वद्विमुखावखेलताम् ॥२॥

குபே₃ரஸூநுர்நலகூப₃ராபி₄த₄:
பரோ மணிக்₃ரீவ இதி ப்ரதா₂ம் க₃த: |
மஹேஶஸேவாதி₄க₃தஶ்ரியோந்மதௌ₃
சிரம் கில த்வத்₃விமுகா₂வகே₂லதாம் || 2||

2. குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்கால், உம்மை மறந்து, உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். 

सुरापगायां किल तौ मदोत्कटौ
सुरापगायद्बहुयौवतावृतौ ।
विवाससौ केलिपरौ स नारदो
भवत्पदैकप्रवणो निरैक्षत ॥३॥

ஸுராபகா₃யாம் கில தௌ மதோ₃த்கடௌ
ஸுராபகா₃யத்₃ப₃ஹுயௌவதாவ்ருதௌ |
விவாஸஸௌ கேலிபரௌ ஸ நாரதோ₃
ப₄வத்பதை₃கப்ரவணோ நிரைக்ஷத || 3||

3. கங்கையில் மது அருந்திவிட்டு அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதைத் தங்கள் பக்தரான நாரதர் பார்த்தார்.

भिया प्रियालोकमुपात्तवाससं
पुरो निरीक्ष्यापि मदान्धचेतसौ ।
इमौ भवद्भक्त्युपशान्तिसिद्धये
मुनिर्जगौ शान्तिमृते कुत: सुखम् ॥४॥

பி₄யா ப்ரியாலோகமுபாத்தவாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மதா₃ந்த₄சேதஸௌ |
இமௌ ப₄வத்₃ப₄க்த்யுபஶாந்திஸித்₃த₄யே
முநிர்ஜகௌ₃ ஶாந்திம்ருதே குத: ஸுக₂ம் || 4||

4. நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். உம்மிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். மன அமைதியில்லாமல் சுகம் எப்படி உண்டாகும்?

युवामवाप्तौ ककुभात्मतां चिरं
हरिं निरीक्ष्याथ पदं स्वमाप्नुतम् ।
इतीरेतौ तौ भवदीक्षणस्पृहां
गतौ व्रजान्ते ककुभौ बभूवतु: ॥५॥

யுவாமவாப்தௌ ககுபா₄த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத₂ பத₃ம் ஸ்வமாப்நுதம் |
இதீரேதௌ தௌ ப₄வதீ₃க்ஷணஸ்ப்ருஹாம்
க₃தௌ வ்ரஜாந்தே ககுபௌ₄ ப₃பூ₄வது: || 5||

5. “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், தங்களைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர். 

अतन्द्रमिन्द्रद्रुयुगं तथाविधं
समेयुषा मन्थरगामिना त्वया ।
तिरायितोलूखलरोधनिर्धुतौ
चिराय जीर्णौ परिपातितौ तरू ॥६॥

அதந்த்₃ரமிந்த்₃ரத்₃ருயுக₃ம் ததா₂வித₄ம்
ஸமேயுஷா மந்த₂ரகா₃மிநா த்வயா |
திராயிதோலூக₂லரோத₄நிர்து₄தௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ || 6||

6. தாங்கள் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்றீர்கள். மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு சென்றீர்கள். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. 

अभाजि शाखिद्वितयं यदा त्वया
तदैव तद्गर्भतलान्निरेयुषा ।
महात्विषा यक्षयुगेन तत्क्षणा-
दभाजि गोविन्द भवानपि स्तवै: ॥७॥

அபா₄ஜி ஶாகி₂த்₃விதயம் யதா₃ த்வயா
ததை₃வ தத்₃க₃ர்ப₄தலாந்நிரேயுஷா |
மஹாத்விஷா யக்ஷயுகே₃ந தத்க்ஷணா-
த₃பா₄ஜி கோ₃விந்த₃ ப₄வாநபி ஸ்தவை: || 7||

7. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். தங்களைத் துதித்து நமஸ்கரித்தனர்.

इहान्यभक्तोऽपि समेष्यति क्रमात्
भवन्तमेतौ खलु रुद्रसेवकौ ।
मुनिप्रसादाद्भव्दङ्घ्रिमागतौ
गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम् ॥८॥

இஹாந்யப₄க்தோ(அ)பி ஸமேஷ்யதி க்ரமாத்
ப₄வந்தமேதௌ க₂லு ருத்₃ரஸேவகௌ |
முநிப்ரஸாதா₃த்₃ப₄வ்த₃ங்க்₄ரிமாக₃தௌ
க₃தௌ வ்ருணாநௌ க₂லு ப₄க்திமுத்தமாம் || 8||

8. இவ்வுலகில், மற்ற தெய்வங்களைப் பூஜிக்கிறவனும், இறுதியில் உம்மையே அடைகிறான். நாரதரின் ஆசியால் தங்களைத் தொழுது, தங்களிடம் பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர். 

ततस्तरूद्दारणदारुणारव-
प्रकम्पिसम्पातिनि गोपमण्डले ।
विलज्जितत्वज्जननीमुखेक्षिणा
व्यमोक्षि नन्देन भवान् विमोक्षद: ॥९॥

ததஸ்தரூத்₃தா₃ரணதா₃ருணாரவ-
ப்ரகம்பிஸம்பாதிநி கோ₃பமண்ட₃லே |
விலஜ்ஜிதத்வஜ்ஜநநீமுகே₂க்ஷிணா
வ்யமோக்ஷி நந்தே₃ந ப₄வாந் விமோக்ஷத₃: || 9||

9. மரம் முறிந்த சத்தத்தைக் கேட்ட இடையர்கள் ஓடி வந்தனர். வெட்கமடைந்த யசோதையின் முகத்தைக் கண்ட நந்தகோபர், பிறவித் தளைகளில் இருந்து அனைவரையும் விடுவிக்கும் தங்களை, கயிற்றிலிருந்து விடுவித்தார்.

महीरुहोर्मध्यगतो बतार्भको
हरे: प्रभावादपरिक्षतोऽधुना ।
इति ब्रुवाणैर्गमितो गृहं भवान्
मरुत्पुराधीश्वर पाहि मां गदात् ॥१०॥

மஹீருஹோர்மத்₄யக₃தோ ப₃தார்ப₄கோ
ஹரே: ப்ரபா₄வாத₃பரிக்ஷதோ(அ)து₄நா |
இதி ப்₃ருவாணைர்க₃மிதோ க்₃ருஹம் ப₄வாந்
மருத்புராதீ₄ஶ்வர பாஹி மாம் க₃தா₃த் || 10||

10. “தெய்வ அருளால் மரங்களுக்கு நடுவே அகப்பட்ட குழந்தை தப்பியது” என்று கூறிக்கொண்டே இடையர்களும், நந்தகோபனும் தங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். குருவாயூரப்பா! நோய்களில் இருந்து என்னைக் காக்கவேண்டும். 

1 comment: