Wednesday, April 9, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 40, ஸ்ரீ நாராயணீயம் 40வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyamத³ஶகம் -40 

பூதனைக்கு மோக்ஷம் 


तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।
समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥


தத₃நு நந்த₃மமந்த₃ஶுபா₄ஸ்பத₃ம் ந்ருபபுரீம் கரதா₃நக்ருதே க₃தம்| 
ஸமவலோக்ய ஜகா₃த₃ ப₄வத்பிதா விதி₃தகம்ஸஸஹாயஜநோத்₃யம: || 1|| 

1. நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை வசுதேவர் நந்தகோபனிடம் கூறினார்.

अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।
इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥


அயி ஸகே₂ தவ பா₃லகஜந்ம மாம் ஸுக₂யதே(அ)த்₃ய நிஜாத்மஜஜந்மவத் | 
இதி ப₄வத்பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதி₄ரோப்ய ஶஶம்ஸ தமாத₃ராத் || 2|| 

2. “உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வசுதேவர் அன்புடன் நந்தகோபனிடம் கூறினார்.

इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।
इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥


இஹ ச ஸந்த்யநிமித்தஶதாநி தே கடகஸீம்நி ததோ லகு₄ க₃ம்யதாம் | 
இதி ச தத்₃வசஸா வ்ரஜநாயகோ ப₄வத₃பாயபி₄யா த்₃ருதமாயயௌ || 3|| 

3. மேலும், “சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்வாய்” என்று கூறினார். நந்தகோபனும் உனக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.

अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।
तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥


அவஸரே க₂லு தத்ர ச காசந வ்ரஜபதே₃ மது₄ராக்ருதிரங்க₃நா | 
தரலஷட்பத₃லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க₃தா || 4|| 

4. கபடக் குழந்தை வேடம் பூண்டவனே! கோகுலத்தில், அழகிய பெண் ஒருத்தி,  வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடன் தங்கள் அருகே வந்தாள்.

सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।
व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥


ஸபதி₃ ஸா ஹ்ருதபா₃லகசேதநா நிஶிசராந்வயஜா கில பூதநா | 
வ்ரஜவதூ₄ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப₄வந்தமுபாத₃தே₃ || 5||

5. எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். அவளும் தங்களைக் கையில் எடுத்தாள்.

ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।
स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने॥६॥


லலிதபா₄வவிலாஸஹ்ருதாத்மபி₄ர்யுவதிபி₄: ப்ரதிரோத்₃து₄மபாரிதா | 
ஸ்தநமஸௌ ப₄வநாந்தநிஷேது₃ஷீ ப்ரத₃து₃ஷீ ப₄வதே கபடாத்மநே || 6|| 

6. தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். வீட்டின் உள்ளே அமர்ந்து, தங்களை மார்போடணைத்து, தங்களுக்கு பாலூட்டினாள்.

समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।
महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥


ஸமதி₄ருஹ்ய தத₃ங்கமஶங்கிதஸ்த்வமத₂ பா₃லகலோபநரோஷித: | 
மஹதி₃வாம்ரப₂லம் குசமண்ட₃லம் ப்ரதிசுசூஷித₂ து₃ர்விஷதூ₃ஷிதம் || 7|| 

7. குழந்தைகளைக் கொன்றதால் கோபமடைந்த தாங்கள், பயமின்றி அவள் மடிமீது ஏறி விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினீர்கள்.

असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।
निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥


அஸுபி₄ரேவ ஸமம் த₄யதி த்வயி ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா | 
நிரபதத்₃ப₄யதா₃யி நிஜம் வபு: ப்ரதிக₃தா ப்ரவிஸார்ய பு₄ஜாவுபௌ₄ || 8|| 

8. பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தீர்கள். அவள், இடிபோலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன் இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு கீழே விழுந்தாள்.

भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।
व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥


ப₄யத₃கோ₄ஷணபீ₄ஷணவிக்₃ரஹஶ்ரவணத₃ர்ஶநமோஹிதவல்லவே | 
வ்ரஜபதே₃ தது₃ர:ஸ்த₂லகே₂லநம் நநு ப₄வந்தமக்₃ருஹ்ணத கோ₃பிகா: || 9|| 

9. அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த தங்களைக் கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள்.

भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।
त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥

பு₄வநமங்க₃லநாமபி₄ரேவ தே யுவதிபி₄ர்ப₃ஹுதா₄ க்ருதரக்ஷண: | 
த்வமயி வாதநிகேதநநாத₂ மாமக₃த₃யந் குரு தாவகஸேவகம் || 10||

10. மங்கலங்களைக் கொடுக்கும் தங்களின் நாமங்களைக் கொண்டே அவர்கள் தங்களுக்கு ரட்சை செய்தார்கள். குருவாயூரப்பா! தாங்கள் என் நோய்களைப் போக்கி, தங்கள் பக்தனாக ஏற்க வேண்டும்.

No comments:

Post a Comment