Monday, April 14, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 45, ஸ்ரீ நாராயணீயம் 45வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam
த³ஶகம் -45
பால லீலை

अयि सबल मुरारे पाणिजानुप्रचारै:
किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ ।
चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा-
श्रवणकुतुकभाजौ चेरतुश्चारुवेगात् ॥१॥

அயி ஸப₃ல முராரே பாணிஜாநுப்ரசாரை:
கிமபி ப₄வநபா₄கா₃ந் பூ₄ஷயந்தௌ ப₄வந்தௌ |
சலிதசரணகஞ்ஜௌ மஞ்ஜுமஞ்ஜீரஶிஞ்ஜா-
ஶ்ரவணகுதுகபா₄ஜௌ சேரதுஶ்சாருவேகா₃த் || 1||

1. பலராமனுடன் இருக்கும் முராரியே! நீங்கள் இருவரும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாடினீர்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தீர்கள்.

मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ
वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ ।
भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ
मतिमहरतमुच्चै: पश्यतां विश्वनृणाम् ॥२॥

ம்ருது₃ ம்ருது₃ விஹஸந்தாவுந்மிஷத்₃த₃ந்தவந்தௌ
வத₃நபதிதகேஶௌ த்₃ருஶ்யபாதா₃ப்₃ஜதே₃ஶௌ |
பு₄ஜக₃லிதகராந்தவ்யாலக₃த்கங்கணாங்கௌ
மதிமஹரதமுச்சை: பஶ்யதாம் விஶ்வந்ருணாம் || 2||

2. இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினீர்கள். கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டீர்கள்.

अनुसरति जनौघे कौतुकव्याकुलाक्षे
किमपि कृतनिनादं व्याहसन्तौ द्रवन्तौ ।
वलितवदनपद्मं पृष्ठतो दत्तदृष्टी
किमिव न विदधाथे कौतुकं वासुदेव ॥३॥

அநுஸரதி ஜநௌகே₄ கௌதுகவ்யாகுலாக்ஷே
கிமபி க்ருதநிநாத₃ம் வ்யாஹஸந்தௌ த்₃ரவந்தௌ |
வலிதவத₃நபத்₃மம் ப்ருஷ்ட₂தோ த₃த்தத்₃ருஷ்டீ
கிமிவ ந வித₃தா₄தே₂ கௌதுகம் வாஸுதே₃வ || 3||

3. கிருஷ்ணா! அனைவரும் ஆசை கொண்டு தங்களைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினீர்கள். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தீர்கள்.

द्रुतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ
दिवि मुनिभिरपङ्कै: सस्मितं वन्द्यमानौ ।
द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ
मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च ॥४॥

த்₃ருதக₃திஷு பதந்தாவுத்தி₂தௌ லிப்தபங்கௌ
தி₃வி முநிபி₄ரபங்கை: ஸஸ்மிதம் வந்த்₃யமாநௌ |
த்₃ருதமத₂ ஜநநீப்₄யாம் ஸாநுகம்பம் க்₃ருஹீதௌ
முஹுரபி பரிரப்₃தௌ₄ த்₃ராக்₃யுவாம் சும்பி₃தௌ ச || 4||

4. நீங்கள் இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டீர்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள்.

स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं
तरलमति यशोदा स्तन्यदा धन्यधन्या ।
कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते
दशनमुकुलहृद्यं वीक्ष्य वक्त्रं जहर्ष ॥५॥

ஸ்நுதகுசப₄ரமங்கே தா₄ரயந்தீ ப₄வந்தம்
தரலமதி யஶோதா₃ ஸ்தந்யதா₃ த₄ந்யத₄ந்யா |
கபடபஶுப மத்₄யே முக்₃த₄ஹாஸாங்குரம் தே
த₃ஶநமுகுலஹ்ருத்₃யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ || 5||

5. யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், தங்களை எடுத்துப் பாலூட்டினாள். மிகவும் பேறு பெற்றவளானாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய தங்களது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள்.

तदनुचरणचारी दारकैस्साकमारा-
न्निलयततिषु खेलन् बालचापल्यशाली ।
भवनशुकविडालान् वत्सकांश्चानुधावन्
कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभू: ॥६॥

தத₃நுசரணசாரீ தா₃ரகைஸ்ஸாகமாரா-
ந்நிலயததிஷு கே₂லந் பா₃லசாபல்யஶாலீ |
ப₄வநஶுகவிடா₃லாந் வத்ஸகாம்ஶ்சாநுதா₄வந்
கத₂மபி க்ருதஹாஸைர்கோ₃பகைர்வாரிதோ(அ)பூ₄: || 6||

6. பிறகு, தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினீர்கள். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினீர்கள். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு தங்களைத் தடுத்தனர்.

हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो
विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्य: ।
विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या
मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन् ॥७॥

ஹலத₄ரஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ
விவஶபதிதநேத்ராஸ்தத்ர தத்ரைவ கோ₃ப்ய: |
விக₃லிதக்₃ருஹக்ருத்யா விஸ்ம்ருதாபத்யப்₄ருத்யா
முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸந் || 7||

7. முரன் என்ற அசுரனைக் கொன்றவனே! பலராமனுடன் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் தங்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து உம்மையே நினைத்து, பரவசமாக ஆனார்கள்.

प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन्
कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् ।
सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन्
क्वचन नवविपक्वं दुग्धमप्यापिबस्त्वम् ॥८॥

ப்ரதிநவநவநீதம் கோ₃பிகாத₃த்தமிச்ச₂ந்
கலபத₃முபகா₃யந் கோமலம் க்வாபி ந்ருʼத்யந் |
ஸத₃யயுவதிலோகைரர்பிதம் ஸர்பிரஶ்நந்
க்வசந நவவிபக்வம் து₃க்₃த₄மப்யாபிப₃ஸ்த்வம் || 8||

8. கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினீர்கள். அழகாய் ஆடினீர்கள். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டீர்கள். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தீர்கள்.

मम खलु बलिगेहे याचनं जातमास्ता-
मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे ।
इति विहितमति: किं देव सन्त्यज्य याच्ञां
दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन ॥९॥

மம க₂லு ப₃லிகே₃ஹே யாசநம் ஜாதமாஸ்தா-
மிஹ புநரப₃லாநாமக்₃ரதோ நைவ குர்வே |
இதி விஹிதமதி: கிம் தே₃வ ஸந்த்யஜ்ய யாச்ஞாம்
த₃தி₄க்₄ருதமஹரஸ்த்வம் சாருணா சோரணேந || 9||

9. கிருஷ்ணா! வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவரைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினீர்கள்.

तव दधिघृतमोषे घोषयोषाजनाना-
मभजत हृदि रोषो नावकाशं न शोक: ।
हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं
स मम शमय रोगान् वातगेहाधिनाथ ॥१०॥

தவ த₃தி₄க்₄ருதமோஷே கோ₄ஷயோஷாஜநாநா-
மப₄ஜத ஹ்ருதி₃ ரோஷோ நாவகாஶம் ந ஶோக: |
ஹ்ருத₃யமபி முஷித்வா ஹர்ஷஸிந்தௌ₄ ந்யதா₄ஸ்த்வம்
ஸ மம ஶமய ரோகா₃ந் வாதகே₃ஹாதி₄நாத₂ || 10||

10. கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை நீங்கள் திருடினாலும், இடைப்பெண்கள் தங்களிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. அவர்கள் மனதையும் திருடி, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினீர். அவ்விதமான குருவாயூரப்பா! என்னுடைய வாதநோயைப் போக்குவீராக.

ஸ்லோகங்கள் 11, 12 அனந்தராம தீக்ஷிதர் எழுதிய உரையில் இல்லை. 
शाखाग्रे विधुं विलोक्य फलमित्य्म्बां च तातं मुहु:
संप्रार्थ्याथ तदा तदीयवचसा प्रोत्क्षिप्तबाहौ त्वयि।
चित्रं देव शशी स ते कर्मगात् किं ब्रूमहे संपत:
ज्योतिर्मण्डलपूरिताखिलवपु: प्रागा विराड्रूपताम् ॥ ११॥

ஶாகா₂க்₃ரே விது₄ம் விலோக்ய ப₂லமித்ய்ம்பா₃ம் ச தாதம் முஹு:
ஸம்ப்ரார்த்₂யாத₂ ததா₃ ததீ₃யவசஸா ப்ரோத்க்ஷிப்தபா₃ஹௌ த்வயி|
சித்ரம் தே₃வ ஶஶீ ஸ தே கர்மகா₃த் கிம் ப்₃ரூமஹே ஸம்பத:
ஜ்யோதிர்மண்ட₃லபூரிதாகி₂லவபு: ப்ராகா₃ விராட்₃ரூபதாம் ||  11||

11. ஒரு நாள்,  மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து  தங்கள் பெற்றோரிடம் கேட்டீர்கள். அவர்கள் வேடிக்கையாக  நீயே கூப்பிடு, அது வரும் என்றார்கள். நீங்கள் கூப்பிட, நிலவு நேராக தங்களின் கைகளில் வந்தது. தாங்கள் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினீர்

किं किं बतेदमिति संभ्रम भाजमेनं
ब्रह्मार्णवे क्षणममुं परिमज्ज्य तातम् ।
मायां पुनस्तनय-मोहमयीं वितन्वन्
आनन्दचिन्मय जगन्मय पाहि रोगात् ॥१२॥

கிம் கிம் ப₃தேத₃மிதி ஸம்ப்₄ரம பா₄ஜமேநம்
ப்₃ரஹ்மார்ணவே க்ஷணமமும் பரிமஜ்ஜ்ய தாதம் |
மாயாம் புநஸ்தநய-மோஹமயீம் விதந்வந்
ஆநந்த₃சிந்மய ஜக₃ந்மய பாஹி ரோகா₃த் || 12||

12. திகைப்புடன் தங்கள் தந்தை நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால் தாங்கள் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினீர்கள். தேவனே! நோய்களில் இருந்து என்னைக் காப்பாற்றும். 

No comments:

Post a Comment