Saturday, April 5, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 36, ஸ்ரீ நாராயணீயம் 36வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -36
ஸ்ரீ பரசுராமர் சரித்திரம்

अत्रे: पुत्रतया पुरा त्वमनसूयायां हि दत्ताभिधो
जात: शिष्यनिबन्धतन्द्रितमना: स्वस्थश्चरन् कान्तया ।
दृष्टो भक्ततमेन हेहयमहीपालेन तस्मै वरा-
नष्टैश्वर्यमुखान् प्रदाय ददिथ स्वेनैव चान्ते वधम् ॥१॥

அத்ரே: புத்ரதயா புரா த்வமநஸூயாயாம் ஹி த₃த்தாபி₄தோ₄
ஜாத: ஶிஷ்யநிப₃ந்த₄தந்த்₃ரிதமநா: ஸ்வஸ்த₂ஶ்சரந் காந்தயா |
த்₃ருஷ்டோ ப₄க்ததமேந ஹேஹயமஹீபாலேந தஸ்மை வரா-
நஷ்டைஶ்வர்யமுகா₂ந் ப்ரதா₃ய த₃தி₃த₂ ஸ்வேநைவ சாந்தே வத₄ம் || 1||

1. அத்ரி முனிவருக்கும், அனசூயைக்கும் ‘தத்தர்’ என்ற மகனாகப் பிறந்தீர். பல சிஷ்யர்கள் தங்களை அண்டினார்கள். அவர்கள் தியானத்திற்கு இடையூறெனக் கருதி,  தனித்து வசித்து வந்தீர். தங்களிடம் மிகுந்த பக்தி கொண்ட கார்த்தவீர்யார்ஜுனனுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை வரமாக அளித்தீர்கள். தாங்களே அவனை வதம் செய்வதாகவும் வரம் கொடுத்தீர்கள்.

सत्यं कर्तुमथार्जुनस्य च वरं तच्छक्तिमात्रानतं
ब्रह्मद्वेषि तदाखिलं नृपकुलं हन्तुं च भूमेर्भरम् ।
सञ्जातो जमदग्नितो भृगुकुले त्वं रेणुकायां हरे
रामो नाम तदात्मजेष्ववरज: पित्रोरधा: सम्मदम् ॥२॥

ஸத்யம் கர்துமதா₂ர்ஜுநஸ்ய ச வரம் தச்ச₂க்திமாத்ராநதம்
ப்₃ரஹ்மத்₃வேஷி ததா₃கி₂லம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூ₄மேர்ப₄ரம் |
ஸஞ்ஜாதோ ஜமத₃க்₃நிதோ ப்₄ருகு₃குலே த்வம் ரேணுகாயாம் ஹரே
ராமோ நாம ததா₃த்மஜேஷ்வவரஜ: பித்ரோரதா₄: ஸம்மத₃ம் || 2||

2. அந்த வரத்தை மெய்ப்பிக்க நினைத்தீர். அரசர்களிடையே பிராம்மண த்வேஷத்தை உண்டாக்கி, பூபாரத்தைப் போக்க நினைத்தீர். பிருகு முனிவரின் வம்சத்தில் வந்த ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவி என்ற அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தீர்.

लब्धाम्नायगणश्चतुर्दशवया गन्धर्वराजे मना-
गासक्तां किल मातरं प्रति पितु: क्रोधाकुलस्याज्ञया ।
ताताज्ञातिगसोदरै: सममिमां छित्वाऽथ शान्तात् पितु-
स्तेषां जीवनयोगमापिथ वरं माता च तेऽदाद्वरान् ॥३॥

லப்₃தா₄ம்நாயக₃ணஶ்சதுர்த₃ஶவயா க₃ந்த₄ர்வராஜே மநா-
கா₃ஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது: க்ரோதா₄குலஸ்யாஜ்ஞயா |
தாதாஜ்ஞாதிக₃ஸோத₃ரை: ஸமமிமாம் சி₂த்வா(அ)த₂ ஶாந்தாத் பிது-
ஸ்தேஷாம் ஜீவநயோக₃மாபித₂ வரம் மாதா ச தே(அ)தா₃த்₃வராந் || 3||

3. தாங்கள் பதினான்கு வயதில் சகல வேதங்களையும் கற்றீர். சித்ரரதன் என்ற கந்தர்வனிடம், தங்கள் தாய் ஆசை கொண்டதால், தங்கள் தந்தையின் கட்டளைப்படி, தாயையும், கட்டளையை மீறிய சகோதரர்களையும் கொன்றீர். அதனால் சந்தோஷமடைந்த தங்கள் தந்தை வரம் கேட்கும்படி கூறினார். தாங்கள், அவர்கள் பிழைத்து எழ வரம் கேட்டீர்கள். அவர்களும் பிழைத்தனர். தாயும் தங்களுக்கு வரங்களை அளித்தாள். 

पित्रा मातृमुदे स्तवाहृतवियद्धेनोर्निजादाश्रमात्
प्रस्थायाथ भृगोर्गिरा हिमगिरावाराध्य गौरीपतिम् ।
लब्ध्वा तत्परशुं तदुक्तदनुजच्छेदी महास्त्रादिकं
प्राप्तो मित्रमथाकृतव्रणमुनिं प्राप्यागम: स्वाश्रमम् ॥४॥

பித்ரா மாத்ருமுதே₃ ஸ்தவாஹ்ருதவியத்₃தே₄நோர்நிஜாதா₃ஶ்ரமாத்
ப்ரஸ்தா₂யாத₂ ப்₄ருகோ₃ர்கி₃ரா ஹிமகி₃ராவாராத்₄ய கௌ₃ரீபதிம் |
லப்₃த்₄வா தத்பரஶும் தது₃க்தத₃நுஜச்சே₂தீ₃ மஹாஸ்த்ராதி₃கம்
ப்ராப்தோ மித்ரமதா₂க்ருதவ்ரணமுநிம் ப்ராப்யாக₃ம: ஸ்வாஶ்ரமம் || 4||

4. பிறகு, ஜமதக்னி முனிவர், தங்கள் தாயின் சந்தோஷத்திற்காக ஸ்தோத்திரங்கள் செய்து, காமதேனு என்று பசுவை ஆசிரமத்திற்கு வரவழைத்தார். தாங்கள் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்ய இமயமலைக்குச் சென்றீர். அவர் பரசு என்ற கோடரியை அளித்தார். அந்த ஆயுதத்தால், அவர் கூறிய அசுரனைக் கொன்றீர். அக்ருதவ்ரணர் என்ற முனிவரிடம் நட்பு கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்பினீர்.

आखेटोपगतोऽर्जुन: सुरगवीसम्प्राप्तसम्पद्गणै-
स्त्वत्पित्रा परिपूजित: पुरगतो दुर्मन्त्रिवाचा पुन: ।
गां क्रेतुं सचिवं न्ययुङ्क्त कुधिया तेनापि रुन्धन्मुनि-
प्राणक्षेपसरोषगोहतचमूचक्रेण वत्सो हृत: ॥५॥

ஆகே₂டோபக₃தோ(அ)ர்ஜுந: ஸுரக₃வீஸம்ப்ராப்தஸம்பத்₃க₃ணை-
ஸ்த்வத்பித்ரா பரிபூஜித: புரக₃தோ து₃ர்மந்த்ரிவாசா புந: |
கா₃ம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதி₄யா தேநாபி ருந்த₄ந்முநி-
ப்ராணக்ஷேபஸரோஷகோ₃ஹதசமூசக்ரேண வத்ஸோ ஹ்ருத: || 5||

5. வேட்டையாடிவிட்டு ஆசிரமத்திற்கு வந்த கார்த்தவீர்யார்ஜுனனைத் தங்கள் தந்தை, காமதேனுவின் உதவியால் உபசரித்தார். நாடு திரும்பிய அரசன், கெட்ட மந்திரியின் பேச்சைக்கேட்டு, காமதேனுவை விலைக்கு வாங்க நினைத்து, மந்திரியையும், சேனையையும் அனுப்பினான். முனிவர் தர மறுக்கவே, அவரைக் கொன்று, அதனைக் கவர்ந்து செல்ல முயன்றான். கோபம் கொண்ட காமதேனு, அவர்களை அழித்தது. மீதமிருந்த சிலர் காமதேனுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர்.

शुक्रोज्जीविततातवाक्यचलितक्रोधोऽथ सख्या समं
बिभ्रद्ध्यातमहोदरोपनिहितं चापं कुठारं शरान् ।
आरूढ: सहवाहयन्तृकरथं माहिष्मतीमाविशन्
वाग्भिर्वत्समदाशुषि क्षितिपतौ सम्प्रास्तुथा: सङ्गरम् ॥६॥

ஶுக்ரோஜ்ஜீவிததாதவாக்யசலிதக்ரோதோ₄(அ)த₂ ஸக்₂யா ஸமம்
பி₃ப்₄ரத்₃த்₄யாதமஹோத₃ரோபநிஹிதம் சாபம் குடா₂ரம் ஶராந் |
ஆரூட₄: ஸஹவாஹயந்த்ருகரத₂ம் மாஹிஷ்மதீமாவிஶந்
வாக்₃பி₄ர்வத்ஸமதா₃ஶுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா₂: ஸங்க₃ரம் || 6||

6. சுக்ராச்சார்யார் தங்கள் தந்தையை உயிர்த்தெழச் செய்தார். தந்தையின் மூலம் நடந்ததை அறிந்த தாங்கள் கோபம் கொண்டு, தியானத்தால், கோடரி, வில், அம்பு இவற்றைப் பெற்று, தங்கள் நண்பரான அக்ருதவ்ரணருடன் தேரில் ஏறி மாகிஷ்மதி என்ற நகருக்குச் சென்றீர். அரசனிடம் கன்றைக் கொடுக்கும்படி நயமாகக் கேட்டீர். அவன் தர மறுத்ததால், போர் புரியத் தொடங்கினீர்.

पुत्राणामयुतेन सप्तदशभिश्चाक्षौहिणीभिर्महा-
सेनानीभिरनेकमित्रनिवहैर्व्याजृम्भितायोधन: ।
सद्यस्त्वत्ककुठारबाणविदलन्निश्शेषसैन्योत्करो
भीतिप्रद्रुतनष्टशिष्टतनयस्त्वामापतत् हेहय: ॥७॥

புத்ராணாமயுதேந ஸப்தத₃ஶபி₄ஶ்சாக்ஷௌஹிணீபி₄ர்மஹா-
ஸேநாநீபி₄ரநேகமித்ரநிவஹைர்வ்யாஜ்ருʼம்பி₄தாயோத₄ந: |
ஸத்₃யஸ்த்வத்ககுடா₂ரபா₃ணவித₃லந்நிஶ்ஶேஷஸைந்யோத்கரோ
பீ₄திப்ரத்₃ருதநஷ்டஶிஷ்டதநயஸ்த்வாமாபதத் ஹேஹய: || 7||

7. கார்த்தவீர்யார்ஜுனன், பதினாயிரம் புத்திரர்களோடும், அக்ஷௌகிணிகள், சேனைகள், நண்பர்களோடும் எதிர்த்துப் போரிட்டான். கோடரியாலும், அம்புகளாலும் சேனையைக் கொன்றீர். மீதமிருந்தவர்களுடன் அவன் உம்முடன் போரிட்டான். 

लीलावारितनर्मदाजलवलल्लङ्केशगर्वापह-
श्रीमद्बाहुसहस्रमुक्तबहुशस्त्रास्त्रं निरुन्धन्नमुम् ।
चक्रे त्वय्यथ वैष्णवेऽपि विफले बुद्ध्वा हरिं त्वां मुदा
ध्यायन्तं छितसर्वदोषमवधी: सोऽगात् परं ते पदम् ॥८॥

லீலாவாரிதநர்மதா₃ஜலவலல்லங்கேஶக₃ர்வாபஹ-
ஶ்ரீமத்₃பா₃ஹுஸஹஸ்ரமுக்தப₃ஹுஶஸ்த்ராஸ்த்ரம் நிருந்த₄ந்நமும் |
சக்ரே த்வய்யத₂ வைஷ்ணவே(அ)பி விப₂லே பு₃த்₃த்₄வா ஹரிம் த்வாம் முதா₃
த்₄யாயந்தம் சி₂தஸர்வதோ₃ஷமவதீ₄: ஸோ(அ)கா₃த் பரம் தே பத₃ம் || 8||

8. முன்னொரு சமயம், கார்த்தவீர்யார்ஜுனன், தன்னுடைய ஆயிரம் கைகளால் நர்மதையின் பிரவாகத்தைத் தடுத்து, ராவணனுடைய செருக்கை அடக்கினான். அப்படிப்பட்ட அவன், ஆயிரம் கைகளால் பிரயோகித்த ஆயுதங்களும், சக்ராயுதமும் உம்மிடத்தில் பயன்படாது போகவே, தங்களை ஸ்ரீ ஹரியென்று எண்ணி, தியானம் செய்தான். அதனால் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றான். பரசுராமரான தாங்கள் அவனை வதம் செய்ய, அவன் வைகுண்டத்தை அடைந்தான்.

भूयोऽमर्षितहेहयात्मजगणैस्ताते हते रेणुका-
माघ्नानां हृदयं निरीक्ष्य बहुशो घोरां प्रतिज्ञां वहन् ।
ध्यानानीतरथायुधस्त्वमकृथा विप्रद्रुह: क्षत्रियान्
दिक्चक्रेषु कुठारयन् विशिखयन् नि:क्षत्रियां मेदिनीम् ॥९॥

பூ₄யோ(அ)மர்ஷிதஹேஹயாத்மஜக₃ணைஸ்தாதே ஹதே ரேணுகா-
மாக்₄நாநாம் ஹ்ருத₃யம் நிரீக்ஷ்ய ப₃ஹுஶோ கோ₄ராம் ப்ரதிஜ்ஞாம் வஹந் |
த்₄யாநாநீதரதா₂யுத₄ஸ்த்வமக்ருதா₂ விப்ரத்₃ருஹ: க்ஷத்ரியாந்
தி₃க்சக்ரேஷு குடா₂ரயந் விஶிக₂யந் நி:க்ஷத்ரியாம் மேதி₃நீம் || 9||

9. அவனுடைய புத்திரர்கள் கோபம் கொண்டு, தங்கள் தந்தையான ஜமதக்னியைக் கொன்றனர். தங்கள் தாயான ரேணுகாதேவி, மார்பில் இருபத்தொரு முறை அடித்துக்கொண்டு அழுதாள். அதனால், தாங்கள், இருபத்தொரு தடவை க்ஷத்ரியர்களை அழிக்க உறுதி பூண்டு, தியானத்தினால், ரதம், வில், அம்பு, கோடரி இவைகளைப் பெற்று அரசர்களைக் கொன்றீர்கள். பூமியில் அரசர்கள் இல்லாதபடி செய்தீர்கள்.

तातोज्जीवनकृन्नृपालककुलं त्रिस्सप्तकृत्वो जयन्
सन्तर्प्याथ समन्तपञ्चकमहारक्तहृदौघे पितृन्
यज्ञे क्ष्मामपि काश्यपादिषु दिशन् साल्वेन युध्यन् पुन:
कृष्णोऽमुं निहनिष्यतीति शमितो युद्धात् कुमारैर्भवान् ॥१०॥

தாதோஜ்ஜீவநக்ருந்ந்ருபாலககுலம் த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயந்
ஸந்தர்ப்யாத₂ ஸமந்தபஞ்சகமஹாரக்தஹ்ருதௌ₃கே₄ பித்ருந்
யஜ்ஞே க்ஷ்மாமபி காஶ்யபாதி₃ஷு தி₃ஶந் ஸால்வேந யுத்₄யந் புந:
க்ருஷ்ணோ(அ)மும் நிஹநிஷ்யதீதி ஶமிதோ யுத்₃தா₄த் குமாரைர்ப₄வாந் || 10||

10. பிறகு, தந்தையை உயிர்ப்பித்தீர். இருபத்தொரு முறை க்ஷத்ரியர்களை அழித்தீர். ‘ஸமந்தபஞ்சகம்’ என்ற புண்ணிய பூமியில், ரத்த மடுவில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தீர். யாகத்தில் காஸ்யபர் முதலிய முனிவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தீர். ஸால்வன் என்ற அரசனுடன் போர் புரிந்தீர். ஸனத்குமாரர்கள், ஸ்ரீ கிருஷ்ணன் இவர்களைக் கொல்லப் போகிறார் என்று சொல்லவே, போரை நிறுத்தினீர். 

न्यस्यास्त्राणि महेन्द्रभूभृति तपस्तन्वन् पुनर्मज्जितां
गोकर्णावधि सागरेण धरणीं दृष्ट्वार्थितस्तापसै: ।
ध्यातेष्वासधृतानलास्त्रचकितं सिन्धुं स्रुवक्षेपणा-
दुत्सार्योद्धृतकेरलो भृगुपते वातेश संरक्ष माम् ॥११॥

ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்₃ரபூ₄ப்₄ருதி தபஸ்தந்வந் புநர்மஜ்ஜிதாம்
கோ₃கர்ணாவதி₄ ஸாக₃ரேண த₄ரணீம் த்₃ருஷ்ட்வார்தி₂தஸ்தாபஸை: |
த்₄யாதேஷ்வாஸத்₄ருதாநலாஸ்த்ரசகிதம் ஸிந்து₄ம் ஸ்ருவக்ஷேபணா-
து₃த்ஸார்யோத்₃த்₄ருதகேரலோ ப்₄ருகு₃பதே வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 11||

11. மகேந்திரமலையில் ஆயுதங்களை வைத்துவிட்டு தவம் செய்தீர். கோகர்ணம் என்ற இடம் வரையில் உள்ள நிலம் கடலில் மூழ்கியது. முனிவர்கள் தங்களைத் துதிக்க, தியானத்தால் வில்லில் ஆக்னேயாஸ்திரத்தைத் தொடுத்தீர். கடல் பயந்தது. யாக பாத்திரத்தை வீசி, சமுத்திரத்தை, அந்த பாத்திரம் விழுந்த இடம் வரை விலகச் செய்து, நிலத்தை உண்டாக்கினீர். அந்த நிலமான கேரளத்தைக் கடலில்  மூழ்காமல் காப்பாற்றினீர். என்னையும் காப்பாற்ற வேண்டும் என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பன் தலையை அசைத்து அங்கீகரித்தாராம்.

No comments:

Post a Comment