Thursday, April 24, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 55, ஸ்ரீ நாராயணீயம் 55வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -55
காளிங்கநர்த்தனம்

अथ वारिणि घोरतरं फणिनं
प्रतिवारयितुं कृतधीर्भगवन् ।
द्रुतमारिथ तीरगनीपतरुं
विषमारुतशोषितपर्णचयम् ॥१॥

அத₂ வாரிணி கோ₄ரதரம் ப₂ணிநம்
ப்ரதிவாரயிதும் க்ருததீ₄ர்ப₄க₃வந் |
த்₃ருதமாரித₂ தீரக₃நீபதரும்
விஷமாருதஶோஷிதபர்ணசயம் || 1||

1. அந்தப் பாம்பின் கொடிய செயலைத் தடுக்க முடிவு செய்து, மடுவின் கரையில், விஷக்காற்றால் வாடி நின்ற மரத்தின்மீது ஏறினீர்கள்.

अधिरुह्य पदाम्बुरुहेण च तं
नवपल्लवतुल्यमनोज्ञरुचा ।
ह्रदवारिणि दूरतरं न्यपत:
परिघूर्णितघोरतरङ्ग्गणे ॥२॥

அதி₄ருஹ்ய பதா₃ம்பு₃ருஹேண ச தம்
நவபல்லவதுல்யமநோஜ்ஞருசா |
ஹ்ரத₃வாரிணி தூ₃ரதரம் ந்யபத:
பரிகூ₄ர்ணிதகோ₄ரதரங்₃க₃ணே || 2||

2. சிவந்த மென்மையான பாதங்களால் மரத்தின் மீது ஏறி, உயரத்திலிருந்து அலைகள் நிறைந்த மடுவில் குதித்தீர்கள்.

भुवनत्रयभारभृतो भवतो
गुरुभारविकम्पिविजृम्भिजला ।
परिमज्जयति स्म धनुश्शतकं
तटिनी झटिति स्फुटघोषवती ॥३॥

பு₄வநத்ரயபா₄ரப்₄ருதோ ப₄வதோ
கு₃ருபா₄ரவிகம்பிவிஜ்ரும்பி₄ஜலா |
பரிமஜ்ஜயதி ஸ்ம த₄நுஶ்ஶதகம்
தடிநீ ஜ₂டிதி ஸ்பு₂டகோ₄ஷவதீ || 3||

3. மூவுலங்களின் சுமையைத் தாங்கும் தாங்கள் குதித்ததும், தங்கள் பாரத்தால் அலைகள் உயரே கிளம்பி, மிகுந்த ஓசையுடன், கரைகளை மூழ்கடித்தது.

अथ दिक्षु विदिक्षु परिक्षुभित-
भ्रमितोदरवारिनिनादभरै: ।
उदकादुदगादुरगाधिपति-
स्त्वदुपान्तमशान्तरुषाऽन्धमना: ॥४॥

அத₂ தி₃க்ஷு விதி₃க்ஷு பரிக்ஷுபி₄த-
ப்₄ரமிதோத₃ரவாரிநிநாத₃ப₄ரை: |
உத₃காது₃த₃கா₃து₃ரகா₃தி₄பதி-
ஸ்த்வது₃பாந்தமஶாந்தருஷா(அ)ந்த₄மநா: || 4||

4. அந்த ஓசையைக் கேட்ட காளியன் கோபத்துடன் நீரிலிருந்து வெளியே வந்தான்.

फणशृङ्गसहस्रविनिस्सृमर-
ज्वलदग्निकणोग्रविषाम्बुधरम् ।
पुरत: फणिनं समलोकयथा
बहुशृङ्गिणमञ्जनशैलमिव ॥५॥

ப₂ணஶ்ருங்க₃ஸஹஸ்ரவிநிஸ்ஸ்ருமர-
ஜ்வலத₃க்₃நிகணோக்₃ரவிஷாம்பு₃த₄ரம் |
புரத: ப₂ணிநம் ஸமலோகயதா₂
ப₃ஹுஶ்ருங்கி₃ணமஞ்ஜநஶைலமிவ || 5||

5. ஆயிரக்கணக்கான அவன் படங்களிலிருந்து கொடிய விஷம் பெருக்கெடுத்து ஓட, பெரிய மலை போலத் தோற்றமளித்தான்.

ज्वलदक्षि परिक्षरदुग्रविष-
श्वसनोष्मभर: स महाभुजग: ।
परिदश्य भवन्तमनन्तबलं
समवेष्टयदस्फुटचेष्टमहो ॥६॥

ஜ்வலத₃க்ஷி பரிக்ஷரது₃க்₃ரவிஷ-
ஶ்வஸநோஷ்மப₄ர: ஸ மஹாபு₄ஜக₃: |
பரித₃ஶ்ய ப₄வந்தமநந்தப₃லம்
ஸமவேஷ்டயத₃ஸ்பு₂டசேஷ்டமஹோ || 6||

6. பயங்கரமான விஷ மூச்சை விட்டுக்கொண்டு, அளவற்ற பலம் உள்ள தங்களை, அசையாமல் இருக்கும்படி சுற்றிக் கொண்டான். ஆச்சர்யம்!

अविलोक्य भवन्तमथाकुलिते
तटगामिनि बालकधेनुगणे ।
व्रजगेहतलेऽप्यनिमित्तशतं
समुदीक्ष्य गता यमुनां पशुपा: ।।७॥

அவிலோக்ய ப₄வந்தமதா₂குலிதே
தடகா₃மிநி பா₃லகதே₄நுக₃ணே |
வ்ரஜகே₃ஹதலே(அ)ப்யநிமித்தஶதம்
ஸமுதீ₃க்ஷ்ய க₃தா யமுநாம் பஶுபா: || 7||

7. கரையில் நின்ற இடையர்களும், பசுக்களும், சிறுவர்களும் தங்களைக் காணாமல் துயரமடைந்தனர். கோபர்களும், பல கெட்ட சகுனங்களைக் கண்டு யமுனைக்கரைக்கு விரைந்து வந்தனர்.

अखिलेषु विभो भवदीय दशा-
मवलोक्य जिहासुषु जीवभरम् ।
फणिबन्धनमाशु विमुच्य जवा-
दुदगम्यत हासजुषा भवता ॥८॥

அகி₂லேஷு விபோ₄ ப₄வதீ₃ய த₃ஶா-
மவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவப₄ரம் |
ப₂ணிப₃ந்த₄நமாஶு விமுச்ய ஜவா-
து₃த₃க₃ம்யத ஹாஸஜுஷா ப₄வதா || 8||

8. தங்கள் நிலையைக் கண்ட அனைவரும் பிராணனை விட நினைத்தார்கள். அப்போது, அப்பாம்பின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, புன்சிரிப்புடன் ஆற்றிலிருந்து வெளியே வந்தீர்கள்.

अधिरुह्य तत: फणिराजफणान्
ननृते भवता मृदुपादरुचा ।
कलशिञ्जितनूपुरमञ्जुमिल-
त्करकङ्कणसङ्कुलसङ्क्वणितम् ॥९॥

அதி₄ருஹ்ய தத: ப₂ணிராஜப₂ணாந்
நந்ருதே ப₄வதா ம்ருது₃பாத₃ருசா |
கலஶிஞ்ஜிதநூபுரமஞ்ஜுமில-
த்கரகங்கணஸங்குலஸங்க்வணிதம் || 9||

9. மென்மையான தங்கள் கால்களால் அப்பாம்பின் படங்களின் மேல் ஏறி நடனம் செய்தீர்கள். தங்கள் கால்களில் அணிந்திருந்த கொலுசுகளும், கைவளைகளும் அந்த நடனத்திற்கு ஏற்றவாறு சப்தித்தன.

जहृषु: पशुपास्तुतुषुर्मुनयो
ववृषु: कुसुमानि सुरेन्द्रगणा: ।
त्वयि नृत्यति मारुतगेहपते
परिपाहि स मां त्वमदान्तगदात् ॥१०॥

ஜஹ்ருஷு: பஶுபாஸ்துதுஷுர்முநயோ
வவ்ருஷு: குஸுமாநி ஸுரேந்த்₃ரக₃ணா: |
த்வயி ந்ருத்யதி மாருதகே₃ஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதா₃ந்தக₃தா₃த் || 10||

10. தங்கள் நடனத்தைக் கண்ட கோபர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர்கள் ஆனந்தத்துடன் துதித்தனர். இப்படி
காளியனை அடக்கிய தாங்கள், நோயிலிருந்து என்னைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment