த³ஶகம் -47
யசோதை கண்ணனை உரலில் கட்டி வைத்தல்
एकदा दधिविमाथकारिणीं मातरं समुपसेदिवान् भवान् ।
स्तन्यलोलुपतया निवारयन्नङ्कमेत्य पपिवान् पयोधरौ ॥१॥
ஏகதா₃ த₃தி₄விமாத₂காரிணீம் மாதரம் ஸமுபஸேதி₃வாந் ப₄வாந் |
ஸ்தந்யலோலுபதயா நிவாரயந்நங்கமேத்ய பபிவாந் பயோத₄ரௌ || 1||
1. யசோதை ஒரு முறை தயிர் கடைந்து கொண்டிருந்தபொழுது, பால் குடிக்க ஆசை ஏற்பட்டதால், தாங்கள் அவள் மடியின்மீது ஏறி, தயிர் கடைவதைத் தடுத்து, பால் குடித்தீர்கள்.
अर्धपीतकुचकुड्मले त्वयि स्निग्धहासमधुराननाम्बुजे ।
दुग्धमीश दहने परिस्रुतं धर्तुमाशु जननी जगाम ते ॥२॥
அர்த₄பீதகுசகுட்₃மலே த்வயி ஸ்நிக்₃த₄ஹாஸமது₄ராநநாம்பு₃ஜே |
து₃க்₃த₄மீஶ த₃ஹநே பரிஸ்ருதம் த₄ர்துமாஶு ஜநநீ ஜகா₃ம தே || 2||
2. தாமரைமொட்டுக்கள் போன்ற மார்பில், தாமரை முகத்துடன் நீர் பால் குடித்துக் கொண்டிருந்தபொழுது, அடுப்பில் பால் பொங்கியதால் யசோதை உம்மை விட்டுச் சென்றாள்.
सामिपीतरसभङ्गसङ्गतक्रोधभारपरिभूतचेतसा।
मन्थदण्डमुपगृह्य पाटितं हन्त देव दधिभाजनं त्वया ॥३॥
ஸாமிபீதரஸப₄ங்க₃ஸங்க₃தக்ரோத₄பா₄ரபரிபூ₄தசேதஸா|
மந்த₂த₃ண்ட₃முபக்₃ருஹ்ய பாடிதம் ஹந்த தே₃வ த₃தி₄பா₄ஜநம் த்வயா || 3||
3. பாதி பால் குடித்துக் கொண்டிருக்கும்போது தடை ஏற்பட்டதால், தாங்கள் கோபம் கொண்டு மத்தை எடுத்து தயிர்ப் பானையை உடைத்தீர்கள்.
उच्चलद्ध्वनितमुच्चकैस्तदा सन्निशम्य जननी समाद्रुता ।
त्वद्यशोविसरवद्ददर्श सा सद्य एव दधि विस्तृतं क्षितौ ॥४॥
உச்சலத்₃த்₄வநிதமுச்சகைஸ்ததா₃ ஸந்நிஶம்ய ஜநநீ ஸமாத்₃ருதா |
த்வத்₃யஶோவிஸரவத்₃த₃த₃ர்ஶ ஸா ஸத்₃ய ஏவ த₃தி₄ விஸ்த்ருதம் க்ஷிதௌ || 4||
4. பானை உடைந்த சத்தம் கேட்டு வேகமாக வந்த யசோதை, உலகெங்கும் பரவிய உமது புகழைப் போல், கீழே சிதறிக் கிடந்த தயிரைக் கண்டாள்.
वेदमार्गपरिमार्गितं रुषा त्वमवीक्ष्य परिमार्गयन्त्यसौ ।
सन्ददर्श सुकृतिन्युलूखले दीयमाननवनीतमोतवे ॥५॥
வேத₃மார்க₃பரிமார்கி₃தம் ருஷா த்வமவீக்ஷ்ய பரிமார்க₃யந்த்யஸௌ |
ஸந்த₃த₃ர்ஶ ஸுக்ருதிந்யுலூக₂லே தீ₃யமாநநவநீதமோதவே || 5||
5. முனிவர்களால் வேதமார்க்கமாய்த் தேடப்படும் உம்மைக் காணாமல் யசோதை தேடினாள். பிறகு, உரலில் அமர்ந்துகொண்டு பூனைக்கு வெண்ணை கொடுத்துக்கொண்டிருந்த தங்களைக் கண்டாள்.
त्वां प्रगृह्य बत भीतिभावनाभासुराननसरोजमाशु सा ।
रोषरूषितमुखी सखीपुरो बन्धनाय रशनामुपाददे ॥६॥
த்வாம் ப்ரக்₃ருஹ்ய ப₃த பீ₄திபா₄வநாபா₄ஸுராநநஸரோஜமாஶு ஸா |
ரோஷரூஷிதமுகீ₂ ஸகீ₂புரோ ப₃ந்த₄நாய ரஶநாமுபாத₃தே₃ || 6||
6. பயத்தைப் பிரதிபலிக்கும் முகத்தாமரையை உடைய தங்களைக் கையில் பிடித்து, கோபத்துடன் உம்மைக் கட்டிப்போட கயிற்றை எடுத்தாள்.
बन्धुमिच्छति यमेव सज्जनस्तं भवन्तमयि बन्धुमिच्छती ।
सा नियुज्य रशनागुणान् बहून् द्व्यङ्गुलोनमखिलं किलैक्षत ॥७॥
ப₃ந்து₄மிச்ச₂தி யமேவ ஸஜ்ஜநஸ்தம் ப₄வந்தமயி ப₃ந்து₄மிச்ச₂தீ |
ஸா நியுஜ்ய ரஶநாகு₃ணாந் ப₃ஹூந் த்₃வ்யங்கு₃லோநமகி₂லம் கிலைக்ஷத || 7||
7. பந்தங்களாகிற கட்டுக்களை அறுக்கும் உம்மைக் கயிற்றால் கட்ட நினைத்தாள். ஆச்சர்யம்! பல கயிறுகளை ஒன்றாக இணைத்தும், உம்மைக் கட்ட இரண்டங்குலம் கயிறு குறைவாக இருக்கக் கண்டாள்.
विस्मितोत्स्मितसखीजनेक्षितां स्विन्नसन्नवपुषं निरीक्ष्य ताम् ।
नित्यमुक्तवपुरप्यहो हरे बन्धमेव कृपयाऽन्वमन्यथा: ॥८॥
விஸ்மிதோத்ஸ்மிதஸகீ₂ஜநேக்ஷிதாம் ஸ்விந்நஸந்நவபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்யமுக்தவபுரப்யஹோ ஹரே ப₃ந்த₄மேவ க்ருபயா(அ)ந்வமந்யதா₂: || 8||
8. தாயின் தோழிகள் பரிகாசமாய்ப் பார்ப்பதையும், தாயின் உடல் வியர்ப்பதையும் கண்ட பற்றற்றவரான தாங்கள், கருணை கொண்டு கயிற்றால் உரலில் கட்ட உடன்பட்டீர்கள்.
स्थीयतां चिरमुलूखले खलेत्यागता भवनमेव सा यदा।
प्रागुलूखलबिलान्तरे तदा सर्पिरर्पितमदन्नवास्थिथा: ॥९॥
ஸ்தீ₂யதாம் சிரமுலூக₂லே க₂லேத்யாக₃தா ப₄வநமேவ ஸா யதா₃|
ப்ராகு₃லூக₂லபி₃லாந்தரே ததா₃ ஸர்பிரர்பிதமத₃ந்நவாஸ்தி₂தா₂: || 9||
9. “துஷ்டனே! இந்த உரலிலேயே கட்டுப்பட்டு இரு” என்று சொல்லி யசோதை வீட்டிற்குள் சென்றாள். அவன் சென்றவுடன், முன்பே உரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையைத் தின்னத் தொடங்கினீர்கள்.
यद्यपाशसुगमो विभो भवान् संयत: किमु सपाशयाऽनया ।
एवमादि दिविजैरभिष्टुतो वातनाथ परिपाहि मां गदात् ॥१०॥
யத்₃யபாஶஸுக₃மோ விபோ₄ ப₄வாந் ஸம்யத: கிமு ஸபாஶயா(அ)நயா |
ஏவமாதி₃ தி₃விஜைரபி₄ஷ்டுதோ வாதநாத₂ பரிபாஹி மாம் க₃தா₃த் || 10||
10. பிரபுவே! பாசமற்றவர்களால் சுலபமாக அடையக்கூடிய தாங்கள், பாசம் உள்ள யசோதையால் ஏன் கட்டப்பட்டீர்கள்? தேவர்களால் துதிக்கப்படும் குருவாயூரப்பா! தாங்கள் என்னை நோய்களிலிருந்து காப்பாற்றி அருள் புரிவீராக.
No comments:
Post a Comment