Saturday, April 26, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57


ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 57, ஸ்ரீ நாராயணீயம் 57வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -57
பிரலம்பாசுர வதம்

रामसख: क्वापि दिने कामद भगवन् गतो भवान् विपिनम् ।
सूनुभिरपि गोपानां धेनुभिरभिसंवृतो लसद्वेष: ॥१॥

ராமஸக₂: க்வாபி தி₃நே காமத₃ ப₄க₃வந் க₃தோ ப₄வாந் விபிநம் | 
ஸூநுபி₄ரபி கோ₃பாநாம் தே₄நுபி₄ரபி₄ஸம்வ்ருதோ லஸத்₃வேஷ: || 1||

1. வேண்டியவற்றை அளிக்கும் குருவாயூரப்பா! ஒரு நாள் தாங்கள் அழகாக அலங்கரித்துக்கொண்டு, பலராமனுடனும், இடைச்சிறுவர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றீர். 

सन्दर्शयन् बलाय स्वैरं वृन्दावनश्रियं विमलाम् ।
काण्डीरै: सह बालैर्भाण्डीरकमागमो वटं क्रीडन् ॥२॥

ஸந்த₃ர்ஶயந் ப₃லாய ஸ்வைரம் வ்ருந்தா₃வநஶ்ரியம் விமலாம் | 
காண்டீ₃ரை: ஸஹ பா₃லைர்பா₄ண்டீ₃ரகமாக₃மோ வடம் க்ரீட₃ந் || 2||

2. சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க, பிருந்தாவனத்தின் அழகை ரசித்துக்கொண்டும், விளையாட்டாய்ப் பேசிக்கொண்டும் பாண்டீரகம் என்னும் ஆலமரத்தடிக்குச் சென்றீர்.

तावत्तावकनिधनस्पृहयालुर्गोपमूर्तिरदयालु: ।
दैत्य: प्रलम्बनामा प्रलम्बबाहुं भवन्तमापेदे ॥३॥

தாவத்தாவகநித₄நஸ்ப்ருஹயாலுர்கோ₃பமூர்திரத₃யாலு: | 
தை₃த்ய: ப்ரலம்ப₃நாமா ப்ரலம்ப₃பா₃ஹும் ப₄வந்தமாபேதே₃ || 3|| 

3. அப்போது, தங்களைக் கொல்லும் நோக்கத்துடன் பிரலம்பன் என்ற அசுரன் இடையன் வேடத்தில், நீண்ட கைகள் உடைய தங்களை அடைந்தான்.

जानन्नप्यविजानन्निव तेन समं निबद्धसौहार्द: ।
वटनिकटे पटुपशुपव्याबद्धं द्वन्द्वयुद्धमारब्धा: ॥४॥

ஜாநந்நப்யவிஜாநந்நிவ தேந ஸமம் நிப₃த்₃த₄ஸௌஹார்த₃: | 
வடநிகடே படுபஶுபவ்யாப₃த்₃த₄ம் த்₃வந்த்₃வயுத்₃த₄மாரப்₃தா₄: || 4||

4. அவன் எண்ணத்தை அறிந்த தாங்கள், அறியாதவர் போல் அவனுடன் நட்பு கொண்டீர். அம்மரத்தடியில் இடையர்களுடன் விளையாட்டாக த்வந்த்வ (ஒருவருடன் ஒருவர்) யுத்தம் செய்யத் தொடங்கினீர். 

गोपान् विभज्य तन्वन् सङ्घं बलभद्रकं भवत्कमपि ।
त्वद्बलभीरुं दैत्यं त्वद्बलगतमन्वमन्यथा भगवन् ॥५॥

கோ₃பாந் விப₄ஜ்ய தந்வந் ஸங்க₄ம் ப₃லப₄த்₃ரகம் ப₄வத்கமபி | 
த்வத்₃ப₃லபீ₄ரும் தை₃த்யம் த்வத்₃ப₃லக₃தமந்வமந்யதா₂ ப₄க₃வந் || 5|| 

5. தங்கள் தலைமையிலும், பலராமன் தலைமையிலும் இடையர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தீர். தங்கள் பலத்தில் பயந்த பிரலம்பாசுரனை தங்கள் குழுவிலேயே இருக்கச் செய்தீர்.

कल्पितविजेतृवहने समरे परयूथगं स्वदयिततरम् ।
श्रीदामानमधत्था: पराजितो भक्तदासतां प्रथयन् ॥६॥

கல்பிதவிஜேத்ருவஹநே ஸமரே பரயூத₂க₃ம் ஸ்வத₃யிததரம் | 
ஶ்ரீதா₃மாநமத₄த்தா₂: பராஜிதோ ப₄க்ததா₃ஸதாம் ப்ரத₂யந் || 6|| 

6. தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்ற விளையாட்டு நிபந்தனைப்படி, தங்கள் நண்பரான ஸ்ரீதாமா என்பவரை, தாங்கள் பக்தருக்கு அடிமை என்பது போலத் தூக்கினீர்கள். 

एवं बहुषु विभूमन् बालेषु वहत्सु वाह्यमानेषु ।
रामविजित: प्रलम्बो जहार तं दूरतो भवद्भीत्या ॥७॥

ஏவம் ப₃ஹுஷு விபூ₄மந் பா₃லேஷு வஹத்ஸு வாஹ்யமாநேஷு | 
ராமவிஜித: ப்ரலம்போ₃ ஜஹார தம் தூ₃ரதோ ப₄வத்₃பீ₄த்யா || 7|| 

7. இவ்வாறு எல்லா இடையர்களும், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள். அப்போது, தோற்ற பிரலம்பாசுரன், ஜயித்த பலராமனைத் தூக்கிக் கொண்டு, தங்களிடமுள்ள பயத்தால், வெகுதூரம் சென்றான். 

त्वद्दूरं गमयन्तं तं दृष्ट्वा हलिनि विहितगरिमभरे ।
दैत्य: स्वरूपमागाद्यद्रूपात् स हि बलोऽपि चकितोऽभूत् ॥८॥

த்வத்₃தூ₃ரம் க₃மயந்தம் தம் த்₃ருஷ்ட்வா ஹலிநி விஹிதக₃ரிமப₄ரே | 
தை₃த்ய: ஸ்வரூபமாகா₃த்₃யத்₃ரூபாத் ஸ ஹி ப₃லோ(அ)பி சகிதோ(அ)பூ₄த் || 8|| 

8. வெகுதூரத்திற்கப்பால் செல்லும்போது, பலராமன் தன் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார். உடனே அவன் பயங்கரமான அசுர உருவத்தை எடுத்துக்கொண்டான். அதைக் கண்டு பலராமனும் கொஞ்சம் பயந்தார்.

उच्चतया दैत्यतनोस्त्वन्मुखमालोक्य दूरतो राम: ।
विगतभयो दृढमुष्ट्या भृशदुष्टं सपदि पिष्टवानेनम् ॥९॥

உச்சதயா தை₃த்யதநோஸ்த்வந்முக₂மாலோக்ய தூ₃ரதோ ராம: | 
விக₃தப₄யோ த்₃ருட₄முஷ்ட்யா ப்₄ருஶது₃ஷ்டம் ஸபதி₃ பிஷ்டவாநேநம் || 9||

9. வெகுதூரத்தில் தெரியும் தங்கள் முகத்தைக் கண்டு பயத்தை விட்டார். அசுரனைத் தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார். 

हत्वा दानववीरं प्राप्तं बलमालिलिङ्गिथ प्रेम्णा ।
तावन्मिलतोर्युवयो: शिरसि कृता पुष्पवृष्टिरमरगणै: ॥१०॥

ஹத்வா தா₃நவவீரம் ப்ராப்தம் ப₃லமாலிலிங்கி₃த₂ ப்ரேம்ணா | 
தாவந்மிலதோர்யுவயோ: ஶிரஸி க்ருதா புஷ்பவ்ருஷ்டிரமரக₃ணை: || 10||

10. அசுரனைக் கொன்றுவிட்டு வரும் பலராமனைத் தாங்கள் தழுவிக் கொண்டீர். இருவர் மீதும் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

आलम्बो भुवनानां प्रालम्बं निधनमेवमारचयन् ।
कालं विहाय सद्यो लोलम्बरुचे हरे हरे: क्लेशान् ॥११॥

ஆலம்போ₃ பு₄வநாநாம் ப்ராலம்ப₃ம் நித₄நமேவமாரசயந் | 
காலம் விஹாய ஸத்₃யோ லோலம்ப₃ருசே ஹரே ஹரே: க்லேஶாந் || 11||

11. வண்டைப் போல் நிறமுள்ள குருவாயூரப்பா! உலகங்களுக்கெல்லாம் பிடித்தமானவரும், பிரலம்பனை அழித்தவருமான தாங்கள், தாமதிக்காமல் என்னுடைய துக்கங்களைப் போக்கி அருள வேண்டும். 

No comments:

Post a Comment