Saturday, April 12, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 43, ஸ்ரீ நாராயணீயம் 43வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -43
த்ருணாவர்த்த வதம் 

त्वामेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं
गाढाधिरूढगरिमाणमपारयन्ती ।
माता निधाय शयने किमिदं बतेति
ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का ॥१॥

த்வாமேகதா₃ கு₃ருமருத்புரநாத₂ வோடு₄ம்
கா₃டா₄தி₄ரூட₄க₃ரிமாணமபாரயந்தீ |
மாதா நிதா₄ய ஶயநே கிமித₃ம் ப₃தேதி
த்₄யாயந்த்யசேஷ்டத க்₃ருஹேஷு நிவிஷ்டஶங்கா || 1||

1. குருவாயூரப்பா! ஒரு நாள் யசோதை தங்களை மடியில் வைத்திருந்தாள். தாங்கள் எடை அதிகமாக இருந்ததால், அவளால் தூக்க முடியவில்லை. உடனே தங்களைப் படுக்கையில் கிடத்திவிட்டு, வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

तावद्विदूरमुपकर्णितघोरघोष-
व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताश: ।
वात्यावपुस्स किल दैत्यवरस्तृणाव-
र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम् ॥२॥

தாவத்₃விதூ₃ரமுபகர்ணிதகோ₄ரகோ₄ஷ-
வ்யாஜ்ரும்பி₄பாம்ஸுபடலீபரிபூரிதாஶ: |
வாத்யாவபுஸ்ஸ கில தை₃த்யவரஸ்த்ருணாவ-
ர்தாக்₂யோ ஜஹார ஜநமாநஸஹாரிணம் த்வாம் || 2||

2. அப்போது, த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்தான். தங்களையும் எடுத்துச் சென்றான்.

उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते
द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके ।
हा बालकस्य किमिति त्वदुपान्तमाप्ता
माता भवन्तमविलोक्य भृशं रुरोद ॥३॥

உத்₃தா₃மபாம்ஸுதிமிராஹதத்₃ருஷ்டிபாதே
த்₃ரஷ்டும் கிமப்யகுஶலே பஶுபாலலோகே |
ஹா பா₃லகஸ்ய கிமிதி த்வது₃பாந்தமாப்தா
மாதா ப₄வந்தமவிலோக்ய ப்₄ருஶம் ருரோத₃ || 3||

3. கோகுலம் முழுவதும் புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை உம்மைத் தேடினாள். தங்களைக் காணாமல் கதறி அழுதாள். 

तावत् स दानववरोऽपि च दीनमूर्ति-
र्भावत्कभारपरिधारणलूनवेग: ।
सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे
घोषे व्यतायत भवज्जननीनिनाद: ॥४॥

தாவத் ஸ தா₃நவவரோ(அ)பி ச தீ₃நமூர்தி-
ர்பா₄வத்கபா₄ரபரிதா₄ரணலூநவேக₃: |
ஸங்கோசமாப தத₃நு க்ஷதபாம்ஸுகோ₄ஷே
கோ₄ஷே வ்யதாயத ப₄வஜ்ஜநநீநிநாத₃: || 4||

4. அவள் அழுத சத்தம் எங்கும் பரவியது. அப்போது, த்ருணாவர்த்தன் தங்களுடைய பாரம் தாங்க முடியாமல், வேகம் குறைந்தவனானான்.. புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. 

रोदोपकर्णनवशादुपगम्य गेहं
क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीन: ।
त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु-
स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात् ॥५॥

ரோதோ₃பகர்ணநவஶாது₃பக₃ம்ய கே₃ஹம்
க்ரந்த₃த்ஸு நந்த₃முக₂கோ₃பகுலேஷு தீ₃ந: |
த்வாம் தா₃நவஸ்த்வகி₂லமுக்திகரம் முமுக்ஷு-
ஸ்த்வய்யப்ரமுஞ்சதி பபாத வியத்ப்ரதே₃ஶாத் || 5||

5. யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள் நந்தகோபன் வீட்டிற்கு வந்தனர். அனைவரும் அழுதனர். அசுரனும் தங்களை விட்டுவிட நினைத்தான். தாங்கள் அவனை விடவில்லை. அவனும் உயிரிழந்து பூமியில் விழுந்தான். 

रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ-
पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् ।
प्रैक्षन्त हन्त निपतन्तममुष्य वक्ष-
स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम् ॥६॥

ரோதா₃குலாஸ்தத₃நு கோ₃பக₃ணா ப₃ஹிஷ்ட₂-
பாஷாணப்ருஷ்ட₂பு₄வி தே₃ஹமதிஸ்த₂விஷ்ட₂ம் |
ப்ரைக்ஷந்த ஹந்த நிபதந்தமமுஷ்ய வக்ஷ-
ஸ்யக்ஷீணமேவ ச ப₄வந்தமலம் ஹஸந்தம் || 6||

6. அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும், அவனுடைய உடல் மேல், சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த தங்களைக் கண்டனர்.

ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह-
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥

க்₃ராவப்ரபாதபரிபிஷ்டக₃ரிஷ்ட₂தே₃ஹ-
ப்₄ரஷ்டாஸுது₃ஷ்டத₃நுஜோபரி த்₄ருஷ்டஹாஸம் |
ஆக்₄நாநமம்பு₃ஜகரேண ப₄வந்தமேத்ய
கோ₃பா த₃து₄ர்கி₃ரிவராதி₃வ நீலரத்நம் || 7||

7. அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான். தாங்கள் தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தீர்கள். மலைமேல் இருந்த நீலமணியைப் போன்ற தங்களைத் தூக்கி எடுத்து வந்தார்கள். 

एकैकमाशु परिगृह्य निकामनन्द-
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिताङ्गम् ।
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥

ஏகைகமாஶு பரிக்₃ருஹ்ய நிகாமநந்த₃-
ந்நந்தா₃தி₃கோ₃பபரிரப்₃த₄விசும்பி₃தாங்க₃ம் |
ஆதா₃துகாமபரிஶங்கிதகோ₃பநாரீ-
ஹஸ்தாம்பு₃ஜப்ரபதிதம் ப்ரணுமோ ப₄வந்தம் || 8||

8. நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும் தங்களை அணைத்து முத்தமிட்டனர். தங்களைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, தாங்களே அவர்களுடைய கைகளில் விளையாடினீர்கள். அப்படிப்பட்ட தங்களை நாங்கள் துதிக்கின்றோம்.

भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥

பூ₄யோ(அ)பி கிந்நு க்ருணும: ப்ரணதார்திஹாரீ
கோ₃விந்த₃ ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந: |
இத்யாதி₃ மாதரபித்ருப்ரமுகை₂ஸ்ததா₃நீம்
ஸம்ப்ரார்தி₂தஸ்த்வத₃வநாய விபோ₄ த்வமேவ || 9||

9. யசோதையும், நந்தனும், மற்றவர்களும், “ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையைக் காப்பாற்று” என்று தங்களைக் காக்க, தங்களையே வேண்டிக் கொண்டார்கள்.

वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन्
वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि ।
किं वा करोमि पुनरप्यनिलालयेश
निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम् ॥१०॥

வாதாத்மகம் த₃நுஜமேவமயி ப்ரதூ₄ந்வந்
வாதோத்₃ப₄வாந் மம க₃தா₃ந் கிமு நோ து₄நோஷி |
கிம் வா கரோமி புநரப்யநிலாலயேஶ
நிஶ்ஶேஷரோக₃ஶமநம் முஹுரர்த₂யே த்வாம் || 10||

10. குருவாயூரப்பா! சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனை அழித்தீர்கள். வாதநோயினால் உண்டான என்னுடைய பிணிகளை என் போக்கவில்லை? அதற்கு என்ன காரணம்? என்னுடைய முற்பிறவியின் வினையென்றால் அதற்கு நான் என்ன செய்வேன்? உம்மையே எல்லா நோய்க் கூட்டங்களில் இருந்தும் என்னைக் காத்து அருள் புரிய மறுபடி நமஸ்கரிக்கிறேன்.

No comments:

Post a Comment