த³ஶகம் -52
பிரம்மனின் கர்வ பங்கம்
अन्यावतारनिकरेष्वनिरीक्षितं ते
भूमातिरेकमभिवीक्ष्य तदाघमोक्षे ।
ब्रह्मा परीक्षितुमना: स परोक्षभावं
निन्येऽथ वत्सकगणान् प्रवितत्य मायाम् ॥१॥
அந்யாவதாரநிகரேஷ்வநிரீக்ஷிதம் தே
பூ₄மாதிரேகமபி₄வீக்ஷ்ய ததா₃க₄மோக்ஷே |
ப்₃ரஹ்மா பரீக்ஷிதுமநா: ஸ பரோக்ஷபா₄வம்
நிந்யே(அ)த₂ வத்ஸகக₃ணாந் ப்ரவிதத்ய மாயாம் || 1||
1. தாங்கள் முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில், அகாசுர வதத்தில் காணப்பட்டது. தங்களைப் பரீட்சிக்க விரும்பிய பிரமன், தன் சக்தியால் மாடு கன்றுகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தார்.
वत्सानवीक्ष्य विवशे पशुपोत्करे ता-
नानेतुकाम इव धातृमतानुवर्ती ।
त्वं सामिभुक्तकबलो गतवांस्तदानीं
भुक्तांस्तिरोऽधित सरोजभव: कुमारान् ॥२॥
வத்ஸாநவீக்ஷ்ய விவஶே பஶுபோத்கரே தா-
நாநேதுகாம இவ தா₄த்ருமதாநுவர்தீ |
த்வம் ஸாமிபு₄க்தகப₃லோ க₃தவாம்ஸ்ததா₃நீம்
பு₄க்தாம்ஸ்திரோ(அ)தி₄த ஸரோஜப₄வ: குமாராந் || 2||
2. கோபகுமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர். உடனே தாங்கள், பிரம்மனின் செயலை முடிவுக்குக் கொண்டு வர எண்ணம் கொண்டவர் போல, பாதி உண்டுகொண்டிருக்கும்போது கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடச் சென்றீர். அப்போது பிரம்மா, உணவு உண்டு கொண்டிருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார்.
वत्सायितस्तदनु गोपगणायितस्त्वं
शिक्यादिभाण्डमुरलीगवलादिरूप: ।
प्राग्वद्विहृत्य विपिनेषु चिराय सायं
त्वं माययाऽथ बहुधा व्रजमाययाथ ॥३॥
வத்ஸாயிதஸ்தத₃நு கோ₃பக₃ணாயிதஸ்த்வம்
ஶிக்யாதி₃பா₄ண்ட₃முரலீக₃வலாதி₃ரூப: |
ப்ராக்₃வத்₃விஹ்ருத்ய விபிநேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயா(அ)த₂ ப₃ஹுதா₄ வ்ரஜமாயயாத₂ || 3||
3. மாயையால் தாங்களே கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் உருவெடுத்து, மேலும், உறி, உறியில் உள்ள பாத்திரம், புல்லாங்குழல், முதலியவைகளாகவும் வேடம் பூண்டு காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றீர்கள்.
त्वामेव शिक्यगवलादिमयं दधानो
भूयस्त्वमेव पशुवत्सकबालरूप: ।
गोरूपिणीभिरपि गोपवधूमयीभि-
रासादितोऽसि जननीभिरतिप्रहर्षात् ॥४॥
த்வாமேவ ஶிக்யக₃வலாதி₃மயம் த₃தா₄நோ
பூ₄யஸ்த்வமேவ பஶுவத்ஸகபா₃லரூப: |
கோ₃ரூபிணீபி₄ரபி கோ₃பவதூ₄மயீபி₄-
ராஸாதி₃தோ(அ)ஸி ஜநநீபி₄ரதிப்ரஹர்ஷாத் || 4||
4. கன்றுகளாகவும், கோபகுமாரர்களாகவும் உருவம் கொண்ட தங்களை, பசுக்களும், தாய்மார்களும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
जीवं हि कञ्चिदभिमानवशात्स्वकीयं
मत्वा तनूज इति रागभरं वहन्त्य: ।
आत्मानमेव तु भवन्तमवाप्य सूनुं
प्रीतिं ययुर्न कियतीं वनिताश्च गाव: ॥५॥
ஜீவம் ஹி கஞ்சித₃பி₄மாநவஶாத்ஸ்வகீயம்
மத்வா தநூஜ இதி ராக₃ப₄ரம் வஹந்த்ய: |
ஆத்மாநமேவ து ப₄வந்தமவாப்ய ஸூநும்
ப்ரீதிம் யயுர்ந கியதீம் வநிதாஶ்ச கா₃வ: || 5||
5. உலகில் தங்கள் குழந்தையாய்ப் பிறந்த ஒரு ஜீவனை, அபிமானத்தால் தன் பிள்ளையென்று கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படியிருக்க, பரமாத்மாவான தங்களையே குழந்தையாக அடைந்த பசுக்களும், தாய்களும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவும் உண்டோ?
एवं प्रतिक्षणविजृम्भितहर्षभार-
निश्शेषगोपगणलालितभूरिमूर्तिम् ।
त्वामग्रजोऽपि बुबुधे किल वत्सरान्ते
ब्रह्मात्मनोरपि महान् युवयोर्विशेष: ॥६॥
ஏவம் ப்ரதிக்ஷணவிஜ்ரும்பி₄தஹர்ஷபா₄ர-
நிஶ்ஶேஷகோ₃பக₃ணலாலிதபூ₄ரிமூர்திம் |
த்வாமக்₃ரஜோ(அ)பி பு₃பு₃தே₄ கில வத்ஸராந்தே
ப்₃ரஹ்மாத்மநோரபி மஹாந் யுவயோர்விஶேஷ: || 6||
6. ஒரு வருடம் இவ்வாறு கழிந்த பின்னரே, கன்றுகளும், சிறுவர்களும் தாங்களே என்று பலராமன் உணர்ந்தார். தாங்கள் இருவரும் ப்ரும்மத்தின் வடிவாக இருந்தாலும், இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.
वर्षावधौ नवपुरातनवत्सपालान्
दृष्ट्वा विवेकमसृणे द्रुहिणे विमूढे ।
प्रादीदृश: प्रतिनवान् मकुटाङ्गदादि
भूषांश्चतुर्भुजयुज: सजलाम्बुदाभान् ॥७॥
வர்ஷாவதௌ₄ நவபுராதநவத்ஸபாலாந்
த்₃ருஷ்ட்வா விவேகமஸ்ருணே த்₃ருஹிணே விமூடே₄ |
ப்ராதீ₃த்₃ருஶ: ப்ரதிநவாந் மகுடாங்க₃தா₃தி₃
பூ₄ஷாம்ஶ்சதுர்பு₄ஜயுஜ: ஸஜலாம்பு₃தா₃பா₄ந் || 7||
7. வருடத்தின் முடிவில், பிரம்மதேவன் கன்றுகளையும், சிறுவர்களையும் கண்டு, அவை தன்னால் மறைத்து வைக்கப்பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார். அப்போது தாங்கள் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம், தோள்வளைகளுடன், நான்கு கரங்கள் கொண்டவைகளாகக் காண்பித்தீர்கள்.
प्रत्येकमेव कमलापरिलालिताङ्गान्
भोगीन्द्रभोगशयनान् नयनाभिरामान् ।
लीलानिमीलितदृश: सनकादियोगि-
व्यासेवितान् कमलभूर्भवतो ददर्श ॥८॥
ப்ரத்யேகமேவ கமலாபரிலாலிதாங்கா₃ந்
போ₄கீ₃ந்த்₃ரபோ₄க₃ஶயநாந் நயநாபி₄ராமாந் |
லீலாநிமீலிதத்₃ருஶ: ஸநகாதி₃யோகி₃-
வ்யாஸேவிதாந் கமலபூ₄ர்ப₄வதோ த₃த₃ர்ஶ || 8||
8. ஒவ்வொருவரையும் லக்ஷ்மிதேவியுடன் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவர்களாகவும்,அழகிய வடிவமுடனும், கண்ணை மூடிக்கொண்டும், ஸனகாதியரும், முனிவர்களும் சேவித்துக்கொண்டிருக்கக் கண்டார்.
नारायणाकृतिमसंख्यतमां निरीक्ष्य
सर्वत्र सेवकमपि स्वमवेक्ष्य धाता ।
मायानिमग्नहृदयो विमुमोह याव-
देको बभूविथ तदा कबलार्धपाणि: ॥९॥
நாராயணாக்ருதிமஸம்க்₂யதமாம் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தா₄தா |
மாயாநிமக்₃நஹ்ருத₃யோ விமுமோஹ யாவ-
தே₃கோ ப₃பூ₄வித₂ ததா₃ கப₃லார்த₄பாணி: || 9||
9. கணக்கற்ற வடிவங்களைக் கண்டார். எங்கும் தான் சேவகனாய் இருப்பதாகவும் கண்டார். மிகுந்த குழப்பத்தை அடைந்தார். அப்போது தாங்கள், கையில் பாதி அன்னக்கவளத்துடன் காட்சி அளித்தீர்கள்.
नश्यन्मदे तदनु विश्वपतिं मुहुस्त्वां
नत्वा च नूतवति धातरि धाम याते ।
पोतै: समं प्रमुदितै: प्रविशन् निकेतं
वातालयाधिप विभो परिपाहि रोगात् ॥१०॥
நஶ்யந்மதே₃ தத₃நு விஶ்வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூதவதி தா₄தரி தா₄ம யாதே |
போதை: ஸமம் ப்ரமுதி₃தை: ப்ரவிஶந் நிகேதம்
வாதாலயாதி₄ப விபோ₄ பரிபாஹி ரோகா₃த் || 10||
10. பிரம்மன் கர்வம் நீங்கி, தங்களைத் துதித்துப் பாடி, நமஸ்கரித்து, சத்யலோகம் சென்றார். மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினீர்கள். குருவாயூரப்பனே! என்னுடைய வியாதியிலிருந்து என்னைக் காத்து அருள வேண்டும்.
Thank you so much for sharing this. Hare Krishna!
ReplyDeleteHare Krishna. Very happy to see the Tamil version and meaning of Shri Narayaneeyam. Hare Krishna.
ReplyDelete