த³ஶகம் -54
காளியமர்த்தனம்
त्वत्सेवोत्कस्सौभरिर्नाम पूर्वं
कालिन्द्यन्तर्द्वादशाब्दम् तपस्यन् ।
मीनव्राते स्नेहवान् भोगलोले
तार्क्ष्यं साक्षादैक्षताग्रे कदाचित् ॥१॥
த்வத்ஸேவோத்கஸ்ஸௌப₄ரிர்நாம பூர்வம்
காலிந்த்₃யந்தர்த்₃வாத₃ஶாப்₃த₃ம் தபஸ்யந் |
மீநவ்ராதே ஸ்நேஹவாந் போ₄க₃லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாதை₃க்ஷதாக்₃ரே கதா₃சித் || 1||
1. முன்னொரு சமயம் ஸௌபரி என்ற முனிவர், தங்களைத் தரிசிக்க ஆசை கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம் அன்பு கொண்டார். ஒரு நாள் எதிரே கருடன் வருவதைக் கண்டார்.
त्वद्वाहं तं सक्षुधं तृक्षसूनुं
मीनं कञ्चिज्जक्षतं लक्षयन् स: ।
तप्तश्चित्ते शप्तवानत्र चेत्त्वं
जन्तून् भोक्ता जीवितं चापि मोक्ता ॥२॥
த்வத்₃வாஹம் தம் ஸக்ஷுத₄ம் த்ருக்ஷஸூநும்
மீநம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷயந் ஸ: |
தப்தஶ்சித்தே ஶப்தவாநத்ர சேத்த்வம்
ஜந்தூந் போ₄க்தா ஜீவிதம் சாபி மோக்தா || 2||
2. கருடன் பசியால் மீன்களைத் தின்பதைக் கண்டார். துயரமடைந்த அவர் ‘இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிரிழப்பாய்’ என்று கருடனைச் சபித்தார்.
तस्मिन् काले कालिय: क्ष्वेलदर्पात्
सर्पाराते: कल्पितं भागमश्नन् ।
तेन क्रोधात्त्वत्पदाम्भोजभाजा
पक्षक्षिप्तस्तद्दुरापं पयोऽगात् ॥३॥
தஸ்மிந் காலே காலிய: க்ஷ்வேலத₃ர்பாத்
ஸர்பாராதே: கல்பிதம் பா₄க₃மஶ்நந் |
தேந க்ரோதா₄த்த்வத்பதா₃ம்போ₄ஜபா₄ஜா
பக்ஷக்ஷிப்தஸ்தத்₃து₃ராபம் பயோ(அ)கா₃த் || 3||
3. காளியன் என்ற பாம்பு, கருடனுக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது. கோபமடைந்த கருடன், தன் இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான். காளியனும் கருடன் வரமுடியாத காளிந்தி மடுவிற்குச் சென்றது.
घोरे तस्मिन् सूरजानीरवासे
तीरे वृक्षा विक्षता: क्ष्वेलवेगात् ।
पक्षिव्राता: पेतुरभ्रे पतन्त:
कारुण्यार्द्रं त्वन्मनस्तेन जातम् ॥४॥
கோ₄ரே தஸ்மிந் ஸூரஜாநீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா: க்ஷ்வேலவேகா₃த் |
பக்ஷிவ்ராதா: பேதுரப்₄ரே பதந்த:
காருண்யார்த்₃ரம் த்வந்மநஸ்தேந ஜாதம் || 4||
4. அந்த மடுவில் காளியன் புகுந்ததும், அதன் விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையிலுள்ள மரங்கள் கருகின. மடுவிற்கு மேல் வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன.
काले तस्मिन्नेकदा सीरपाणिं
मुक्त्वा याते यामुनं काननान्तम् ।
त्वय्युद्दामग्रीष्मभीष्मोष्मतप्ता
गोगोपाला व्यापिबन् क्ष्वेलतोयम् ॥५॥
காலே தஸ்மிந்நேகதா₃ ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுநம் காநநாந்தம் |
த்வய்யுத்₃தா₃மக்₃ரீஷ்மபீ₄ஷ்மோஷ்மதப்தா
கோ₃கோ₃பாலா வ்யாபிப₃ந் க்ஷ்வேலதோயம் || 5||
5. ஒரு முறை, பலராமனை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையிலுள்ள காட்டிற்குச் சென்றீர்கள். கடுமையான வெய்யிலினால் துன்பமடைந்த இடையர்களும், பசுக்களும் அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள்.
नश्यज्जीवान् विच्युतान् क्ष्मातले तान्
विश्वान् पश्यन्नच्युत त्वं दयार्द्र: ।
प्राप्योपान्तं जीवयामासिथ द्राक्
पीयूषाम्भोवर्षिभि: श्रीकटक्षै: ॥६॥
நஶ்யஜ்ஜீவாந் விச்யுதாந் க்ஷ்மாதலே தாந்
விஶ்வாந் பஶ்யந்நச்யுத த்வம் த₃யார்த்₃ர: |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித₂ த்₃ராக்
பீயூஷாம்போ₄வர்ஷிபி₄: ஶ்ரீகடக்ஷை: || 6||
6. உடனே உயிரிழந்து கீழே விழுந்தார்கள். தாங்கள் கருணையுடன் அவர்கள் அருகே வந்து, அமிர்தமாகிற தங்கள் கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்கச் செய்தீர்கள்.
किं किं जातो हर्षवर्षातिरेक:
सर्वाङ्गेष्वित्युत्थिता गोपसङ्घा: ।
दृष्ट्वाऽग्रे त्वां त्वत्कृतं तद्विदन्त-
स्त्वामालिङ्गन् दृष्टनानाप्रभावा: ॥७॥
கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷாதிரேக:
ஸர்வாங்கே₃ஷ்வித்யுத்தி₂தா கோ₃பஸங்கா₄: |
த்₃ருஷ்ட்வா(அ)க்₃ரே த்வாம் த்வத்க்ருதம் தத்₃வித₃ந்த-
ஸ்த்வாமாலிங்க₃ந் த்₃ருஷ்டநாநாப்ரபா₄வா: || 7||
7. உயிர் பிழைத்த அவர்கள், இந்த ஆனந்தம் எங்கிருந்து உண்டாகிறது? என்று கூறிக் கொண்டு எதிரில் தங்களைக் கண்டார்கள். இவ்விதமான தங்கள் மகிமையைப் பல முறை கண்டிருந்ததால், இதற்கும் தாங்களே காரணம் என்று உணர்ந்து தங்களைக் கட்டித் தழுவினர்.
गावश्चैवं लब्धजीवा: क्षणेन
स्फीतानन्दास्त्वां च दृष्ट्वा पुरस्तात् ।
द्रागावव्रु: सर्वतो हर्षबाष्पं
व्यामुञ्चन्त्यो मन्दमुद्यन्निनादा: ॥८॥
கா₃வஶ்சைவம் லப்₃த₄ஜீவா: க்ஷணேந
ஸ்பீ₂தாநந்தா₃ஸ்த்வாம் ச த்₃ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்₃ராகா₃வவ்ரு: ஸர்வதோ ஹர்ஷபா₃ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த₃முத்₃யந்நிநாதா₃: || 8||
8. நொடிப்பொழுதில் பிழைத்த பசுக்களும், ஆனந்தமுடன் மெதுவாகக் குரல் கொடுத்துக் கொண்டே தங்களைச் சுற்றி வந்தன.
रोमाञ्चोऽयं सर्वतो न: शरीरे
भूयस्यन्त: काचिदानन्दमूर्छा ।
आश्चर्योऽयं क्ष्वेलवेगो मुकुन्दे-
त्युक्तो गोपैर्नन्दितो वन्दितोऽभू: ॥९॥
ரோமாஞ்சோ(அ)யம் ஸர்வதோ ந: ஶரீரே
பூ₄யஸ்யந்த: காசிதா₃நந்த₃மூர்சா₂ |
ஆஶ்சர்யோ(அ)யம் க்ஷ்வேலவேகோ₃ முகுந்தே₃-
த்யுக்தோ கோ₃பைர்நந்தி₃தோ வந்தி₃தோ(அ)பூ₄: || 9||
9. ‘எங்கள் தேகத்தில் மயிர்க்கூச்சலுடன், சொல்லமுடியாத ஆனந்தம் உண்டாகிறது. இந்த விஷவேகம் ஆச்சர்யமாக உள்ளது’ என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள்.
एवं भक्तान् मुक्तजीवानपि त्वं
मुग्धापाङ्गैरस्तरोगांस्तनोषि ।
तादृग्भूतस्फीतकारुण्यभूमा
रोगात् पाया वायुगेहाधिवास ॥१०॥
ஏவம் ப₄க்தாந் முக்தஜீவாநபி த்வம்
முக்₃தா₄பாங்கை₃ரஸ்தரோகா₃ம்ஸ்தநோஷி |
தாத்₃ருக்₃பூ₄தஸ்பீ₂தகாருண்யபூ₄மா
ரோகா₃த் பாயா வாயுகே₃ஹாதி₄வாஸ || 10||
10. தங்களை அண்டிய பக்தர்களை, மரணமடைந்தாலும், அழகான கடாக்ஷத்தால், தாபத்தைப் போக்கிப் பிழைப்பிக்கிறீர்கள். அளவற்ற கருணை நிரம்பிய குருவாயூரப்பா! என்னை வியாதியிலிருந்து காத்தருள வேண்டும்.
No comments:
Post a Comment