Monday, April 7, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 38, ஸ்ரீ நாராயணீயம் 38வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம் Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

 த³ஶகம் -38
க்ருஷ்ணாவதாரம் 

आनन्दरूप भगवन्नयि तेऽवतारे
प्राप्ते प्रदीप्तभवदङ्गनिरीयमाणै: ।
कान्तिव्रजैरिव घनाघनमण्डलैर्द्या-
मावृण्वती विरुरुचे किल वर्षवेला ॥१॥

ஆநந்த₃ரூப ப₄க₃வந்நயி தே(அ)வதாரே
ப்ராப்தே ப்ரதீ₃ப்தப₄வத₃ங்க₃நிரீயமாணை: |
காந்திவ்ரஜைரிவ க₄நாக₄நமண்ட₃லைர்த்₃யா-
மாவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா || 1||

1. ஆனந்த வடிவானவனே! தாங்கள் அவதரித்தபொழுது, வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. தங்கள் நீலநிற உடலில் இருந்து தோன்றிய ஒளியால் மூடியிருந்ததுபோல் தோன்றியது.

आशासु शीतलतरासु पयोदतोयै-
राशासिताप्तिविवशेषु च सज्जनेषु ।
नैशाकरोदयविधौ निशि मध्यमायां
क्लेशापहस्त्रिजगतां त्वमिहाविरासी: ॥२॥

ஆஶாஸு ஶீதலதராஸு பயோத₃தோயை-
ராஶாஸிதாப்திவிவஶேஷு ச ஸஜ்ஜநேஷு |
நைஶாகரோத₃யவிதௌ₄ நிஶி மத்₄யமாயாம்
க்லேஶாபஹஸ்த்ரிஜக₃தாம் த்வமிஹாவிராஸீ: || 2||

2. மழைநீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அப்போது, நடு இரவில், சந்திரோதய வேளையில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்குபவராகத் தாங்கள் அவதரித்தீர்கள் அல்லவா?

बाल्यस्पृशाऽपि वपुषा दधुषा विभूती-
रुद्यत्किरीटकटकाङ्गदहारभासा ।
शङ्खारिवारिजगदापरिभासितेन
मेघासितेन परिलेसिथ सूतिगेहे ॥३॥

பா₃ல்யஸ்ப்ருஶா(அ)பி வபுஷா த₃து₄ஷா விபூ₄தீ-
ருத்₃யத்கிரீடகடகாங்க₃த₃ஹாரபா₄ஸா |
ஶங்கா₂ரிவாரிஜக₃தா₃பரிபா₄ஸிதேந
மேகா₄ஸிதேந பரிலேஸித₂ ஸூதிகே₃ஹே || 3||

3. குழந்தை ரூபத்தில் இருந்த தங்கள் மேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தீர். தங்கள் நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து, பிரசவ அறையில் விளங்கியது.

वक्ष:स्थलीसुखनिलीनविलासिलक्ष्मी-
मन्दाक्षलक्षितकटाक्षविमोक्षभेदै: ।
तन्मन्दिरस्य खलकंसकृतामलक्ष्मी-
मुन्मार्जयन्निव विरेजिथ वासुदेव ॥४॥

வக்ஷ:ஸ்த₂லீஸுக₂நிலீநவிலாஸிலக்ஷ்மீ-
மந்தா₃க்ஷலக்ஷிதகடாக்ஷவிமோக்ஷபே₄தை₃: |
தந்மந்தி₃ரஸ்ய க₂லகம்ஸக்ருதாமலக்ஷ்மீ-
முந்மார்ஜயந்நிவ விரேஜித₂ வாஸுதே₃வ || 4||

4. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், உன் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.

शौरिस्तु धीरमुनिमण्डलचेतसोऽपि
दूरस्थितं वपुरुदीक्ष्य निजेक्षणाभ्याम् ॥
आनन्दवाष्पपुलकोद्गमगद्गदार्द्र-
स्तुष्टाव दृष्टिमकरन्दरसं भवन्तम् ॥५॥

ஶௌரிஸ்து தீ₄ரமுநிமண்ட₃லசேதஸோ(அ)பி
தூ₃ரஸ்தி₂தம் வபுருதீ₃க்ஷ்ய நிஜேக்ஷணாப்₄யாம் ||
ஆநந்த₃வாஷ்பபுலகோத்₃க₃மக₃த்₃க₃தா₃ர்த்₃ர-
ஸ்துஷ்டாவ த்₃ருஷ்டிமகரந்த₃ரஸம் ப₄வந்தம் || 5||

5. ஞானிகளின் மனதிற்கும் எட்டாத, தங்கள் திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்து, தங்களைத் துதித்தார்.

देव प्रसीद परपूरुष तापवल्ली-
निर्लूनदात्रसमनेत्रकलाविलासिन् ।
खेदानपाकुरु कृपागुरुभि: कटाक्षै-
रित्यादि तेन मुदितेन चिरं नुतोऽभू: ॥६॥

தே₃வ ப்ரஸீத₃ பரபூருஷ தாபவல்லீ-
நிர்லூநதா₃த்ரஸமநேத்ரகலாவிலாஸிந் |
கே₂தா₃நபாகுரு க்ருபாகு₃ருபி₄: கடாக்ஷை-
ரித்யாதி₃ தேந முதி₃தேந சிரம் நுதோ(அ)பூ₄: || 6||

6. “தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! தங்கள் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்கவேண்டும்” என்று துதித்தார்.

मात्रा च नेत्रसलिलास्तृतगात्रवल्या
स्तोत्रैरभिष्टुतगुण: करुणालयस्त्वम् ।
प्राचीनजन्मयुगलं प्रतिबोध्य ताभ्यां
मातुर्गिरा दधिथ मानुषबालवेषम् ॥७॥

மாத்ரா ச நேத்ரஸலிலாஸ்த்ருதகா₃த்ரவல்யா
ஸ்தோத்ரைரபி₄ஷ்டுதகு₃ண: கருணாலயஸ்த்வம் |
ப்ராசீநஜந்மயுக₃லம் ப்ரதிபோ₃த்₄ய தாப்₄யாம்
மாதுர்கி₃ரா த₃தி₄த₂ மாநுஷபா₃லவேஷம் || 7||

7. கொடி போன்ற வடிவுடைய தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தங்களைத் துதித்தாள். கருணை வடிவான தாங்கள், அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னீர்கள். தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தீர்கள்.

त्वत्प्रेरितस्तदनु नन्दतनूजया ते
व्यत्यासमारचयितुं स हि शूरसूनु: ।
त्वां हस्तयोरधृत चित्तविधार्यमार्यै-
रम्भोरुहस्थकलहंसकिशोररम्यम् ॥८॥

த்வத்ப்ரேரிதஸ்தத₃நு நந்த₃தநூஜயா தே
வ்யத்யாஸமாரசயிதும் ஸ ஹி ஶூரஸூநு: |
த்வாம் ஹஸ்தயோரத்₄ருத சித்தவிதா₄ர்யமார்யை-
ரம்போ₄ருஹஸ்த₂கலஹம்ஸகிஶோரரம்யம் || 8||

8. பிறகு, வசுதேவருக்கு, தங்களை நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்துவரும்படி ஆணையிட்டீர்கள். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான தங்களை வசுதேவர் கையில் எடுத்துக்கொண்டார்.

जाता तदा पशुपसद्मनि योगनिद्रा ।
निद्राविमुद्रितमथाकृत पौरलोकम् ।
त्वत्प्रेरणात् किमिव चित्रमचेतनैर्यद्-
द्वारै: स्वयं व्यघटि सङ्घटितै: सुगाढम् ॥९॥

ஜாதா ததா₃ பஶுபஸத்₃மநி யோக₃நித்₃ரா |
நித்₃ராவிமுத்₃ரிதமதா₂க்ருத பௌரலோகம் |
த்வத்ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்₃-
த்₃வாரை: ஸ்வயம் வ்யக₄டி ஸங்க₄டிதை: ஸுகா₃ட₄ம் || 9||

9. பிறகு, தங்கள் ஏவுதலால் யோகநித்ரை நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள். நகரமக்கள் அனைவரும் யோகமாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட தங்களது கட்டளையால் தாமே திறந்து கொண்டனவாமே? ஆச்சர்யம்!

शेषेण भूरिफणवारितवारिणाऽथ
स्वैरं प्रदर्शितपथो मणिदीपितेन ।
त्वां धारयन् स खलु धन्यतम: प्रतस्थे
सोऽयं त्वमीश मम नाशय रोगवेगान् ॥१०॥

ஶேஷேண பூ₄ரிப₂ணவாரிதவாரிணா(அ)த₂
ஸ்வைரம் ப்ரத₃ர்ஶிதபதோ₂ மணிதீ₃பிதேந |
த்வாம் தா₄ரயந் ஸ க₂லு த₄ந்யதம: ப்ரதஸ்தே₂
ஸோ(அ)யம் த்வமீஶ மம நாஶய ரோக₃வேகா₃ந் || 10||

10. பாக்யசாலியான வசுதேவர், தங்களை கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால் வழிகாட்டிக் கொண்டு வந்தானாமே? இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த தாங்கள் என் நோய்களைப் போக்க வேண்டும்.

No comments:

Post a Comment