த³ஶகம் -46
கண்ணன் வாயில் யசோதை பிரபஞ்சம் பார்த்தது
अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये ।கண்ணன் வாயில் யசோதை பிரபஞ்சம் பார்த்தது
परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी ॥१॥
அயி தே₃வ புரா கில த்வயி ஸ்வயமுத்தாநஶயே ஸ்தநந்த₄யே |
பரிஜ்ரும்ப₄ணதோ வ்யபாவ்ருதே வத₃நே விஶ்வமசஷ்ட வல்லவீ || 1||
1. முன்பு ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டீர்கள். அப்போது, யசோதை தங்கள் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள்.
पुनरप्यथ बालकै: समं त्वयि लीलानिरते जगत्पते ।
फलसञ्चयवञ्चनक्रुधा तव मृद्भोजनमूचुरर्भका: ॥२॥
புநரப்யத₂ பா₃லகை: ஸமம் த்வயி லீலாநிரதே ஜக₃த்பதே |
ப₂லஸஞ்சயவஞ்சநக்ருதா₄ தவ ம்ருத்₃போ₄ஜநமூசுரர்ப₄கா: || 2||
2. உலகத்திற்கெல்லாம் தலைவனே! இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினீர்கள். அதனால், கோபம் கொண்ட அவர்கள், தாங்கள் மண் தின்றதாகக் கூறினர்.
अयि ते प्रलयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिण: ।
मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा ॥३॥
அயி தே ப்ரலயாவதௌ₄ விபோ₄ க்ஷிதிதோயாதி₃ஸமஸ்தப₄க்ஷிண: |
ம்ருது₃பாஶநதோ ருஜா ப₄வேதி₃தி பீ₄தா ஜநநீ சுகோப ஸா || 3||
3. பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் தாங்கள் உண்கிறீர்கள். அப்படிப்பட்ட தங்களுக்கு, மண் தின்றதால் வியாதி எப்படி வரும்? யசோதை, மண் தின்றதால் தங்களுக்கு வியாதி வரும் என்று பயந்து கோபம் கொண்டாள்.
अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता ।
इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन् ॥४॥
அயி து₃ர்விநயாத்மக த்வயா கிமு ம்ருத்ஸா ப₃த வத்ஸ ப₄க்ஷிதா |
இதி மாத்ருகி₃ரம் சிரம் விபோ₄ விததா₂ம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் || 4||
4. “அடங்காதவனே! மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். தாங்கள் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தீர்கள்.
अयि ते सकलैर्विनिश्चिते विमतिश्चेद्वदनं विदार्यताम् ।
इति मातृविभर्त्सितो मुखं विकसत्पद्मनिभं व्यदारय: ॥५॥
அயி தே ஸகலைர்விநிஶ்சிதே விமதிஶ்சேத்₃வத₃நம் விதா₃ர்யதாம் |
இதி மாத்ருவிப₄ர்த்ஸிதோ முக₂ம் விகஸத்பத்₃மநிப₄ம் வ்யதா₃ரய: || 5||
5. “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தங்கள் திருவாயைத் திறந்து காட்டினீர்.
अपि मृल्लवदर्शनोत्सुकां जननीं तां बहु तर्पयन्निव ।
पृथिवीं निखिलां न केवलं भुवनान्यप्यखिलान्यदीदृश: ॥६॥
அபி ம்ருல்லவத₃ர்ஶநோத்ஸுகாம் ஜநநீம் தாம் ப₃ஹு தர்பயந்நிவ |
ப்ருதி₂வீம் நிகி₂லாம் ந கேவலம் பு₄வநாந்யப்யகி₂லாந்யதீ₃த்₃ருஶ: || 6||
6. உமது வாயில் சிறிதேனும் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தீர்கள்.
कुहचिद्वनमम्बुधि: क्वचित् क्वचिदभ्रं कुहचिद्रसातलम् ।
मनुजा दनुजा: क्वचित् सुरा ददृशे किं न तदा त्वदानने ॥७॥
குஹசித்₃வநமம்பு₃தி₄: க்வசித் க்வசித₃ப்₄ரம் குஹசித்₃ரஸாதலம் |
மநுஜா த₃நுஜா: க்வசித் ஸுரா த₃த்₃ருஶே கிம்ʼ ந ததா₃ த்வதா₃நநே || 7||
7. உமது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள்.
कलशाम्बुधिशायिनं पुन: परवैकुण्ठपदाधिवासिनम् ।
स्वपुरश्च निजार्भकात्मकं कतिधा त्वां न ददर्श सा मुखे ॥८॥
கலஶாம்பு₃தி₄ஶாயிநம் புந: பரவைகுண்ட₂பதா₃தி₄வாஸிநம் |
ஸ்வபுரஶ்ச நிஜார்ப₄காத்மகம் கதிதா₄ த்வாம் ந த₃த₃ர்ஶ ஸா முகே₂ || 8||
8. உம் வாயில், உம்மைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உம்முடைய வாயில் எதைத்தான் காணவில்லை? எத்தனை விதமாகத் தான் காணவில்லை?
विकसद्भुवने मुखोदरे ननु भूयोऽपि तथाविधानन: ।
अनया स्फुटमीक्षितो भवाननवस्थां जगतां बतातनोत् ॥९॥
விகஸத்₃பு₄வநே முகோ₂த₃ரே நநு பூ₄யோ(அ)பி ததா₂விதா₄நந: |
அநயா ஸ்பு₂டமீக்ஷிதோ ப₄வாநநவஸ்தா₂ம் ஜக₃தாம் ப₃தாதநோத் || 9||
9. உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் தங்களையும், தங்கள் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள்.
धृततत्त्वधियं तदा क्षणं जननीं तां प्रणयेन मोहयन् ।
स्तनमम्ब दिशेत्युपासजन् भगवन्नद्भुतबाल पाहि माम् ॥१०॥
த்₄ருததத்த்வதி₄யம் ததா₃ க்ஷணம் ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயந் |
ஸ்தநமம்ப₃ தி₃ஶேத்யுபாஸஜந் ப₄க₃வந்நத்₃பு₄தபா₃ல பாஹி மாம் || 10||
10. தாங்கள் பரமாத்மா என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மறுபடி அன்பினால், அவள் மகன் என்ற நினைவு வரும்படிச் செய்தீர்கள். எனக்குப் பால் கொடு என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்தீர்கள். அப்படிப்பட்ட அதிசயமான, ஆச்சர்யமான குழந்தையே! என்னைக் காப்பாற்றுவீராக.
No comments:
Post a Comment