Monday, April 28, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59

        ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 59, ஸ்ரீ நாராயணீயம் 59வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -59
குழலோசையின் வர்ணனை


त्वद्वपुर्नवकलायकोमलं प्रेमदोहनमशेषमोहनम् ।
ब्रह्म तत्त्वपरचिन्मुदात्मकं वीक्ष्य सम्मुमुहुरन्वहं स्त्रिय: ॥१॥

த்வத்₃வபுர்நவகலாயகோமலம் ப்ரேமதோ₃ஹநமஶேஷமோஹநம் | 
ப்₃ரஹ்ம தத்த்வபரசிந்முதா₃த்மகம் வீக்ஷ்ய ஸம்முமுஹுரந்வஹம் ஸ்த்ரிய: || 1||

1. காயாம்பூ போன்ற நிறமுள்ள தங்கள் திருமேனி அனைவரையும் ஆனந்திக்கச் செய்தது. தங்கள் சச்சிதானந்த, ப்ரும்ம வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்தார்கள்.

मन्मथोन्मथितमानसा: क्रमात्त्वद्विलोकनरतास्ततस्तत: ।
गोपिकास्तव न सेहिरे हरे काननोपगतिमप्यहर्मुखे ॥२॥

மந்மதோ₂ந்மதி₂தமாநஸா: க்ரமாத்த்வத்₃விலோகநரதாஸ்ததஸ்தத: | 
கோ₃பிகாஸ்தவ ந ஸேஹிரே ஹரே காநநோபக₃திமப்யஹர்முகே₂ || 2||

2. தங்களைக் காண்பதிலேயே விருப்பம் கொண்ட கோபியர், மன்மதனால் தாக்கப்பட்ட மனதை உடையவர்களாய் இருந்தார்கள். அதனால், காலையில் காட்டிற்கு மாடுகளை மேய்க்கக்கூடச் செல்லவில்லை. 

निर्गते भवति दत्तदृष्टयस्त्वद्गतेन मनसा मृगेक्षणा: ।
वेणुनादमुपकर्ण्य दूरतस्त्वद्विलासकथयाऽभिरेमिरे ॥३॥

நிர்க₃தே ப₄வதி த₃த்தத்₃ருஷ்டயஸ்த்வத்₃க₃தேந மநஸா ம்ருகே₃க்ஷணா: | 
வேணுநாத₃முபகர்ண்ய தூ₃ரதஸ்த்வத்₃விலாஸகத₂யா(அ)பி₄ரேமிரே || 3||

3. தாங்கள் மாடுகளை மேய்க்கச் சென்றபொழுது, தாங்கள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் வடிவத்தை மனதில் இருத்தி, வெகு தூரத்தில் இருந்து கேட்கும் தங்கள் குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தனர். தங்கள் விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளையே பேசி ஆனந்தித்தனர்.

काननान्तमितवान् भवानपि स्निग्धपादपतले मनोरमे ।
व्यत्ययाकलितपादमास्थित: प्रत्यपूरयत वेणुनालिकाम् ॥४॥

காநநாந்தமிதவாந் ப₄வாநபி ஸ்நிக்₃த₄பாத₃பதலே மநோரமே | 
வ்யத்யயாகலிதபாத₃மாஸ்தி₂த: ப்ரத்யபூரயத வேணுநாலிகாம் || 4|| 

4. கானகம் சென்றவுடன், அழகு நிரம்பிய மரத்தடியில், கால்களை மாற்றி நின்று  புல்லாங்குழலை ஊதினீர்கள்.

मारबाणधुतखेचरीकुलं निर्विकारपशुपक्षिमण्डलम् ।
द्रावणं च दृषदामपि प्रभो तावकं व्यजनि वेणुकूजितम् ॥५॥

மாரபா₃ணது₄தகே₂சரீகுலம் நிர்விகாரபஶுபக்ஷிமண்ட₃லம் | 
த்₃ராவணம் ச த்₃ருஷதா₃மபி ப்ரபோ₄ தாவகம் வ்யஜநி வேணுகூஜிதம் || 5||

5. தங்கள் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது. பசுக்கள், பறவைகள் முதலியன செயலற்று நின்றன. கற்களையும் உருகச் செய்தது. 

वेणुरन्ध्रतरलाङ्गुलीदलं तालसञ्चलितपादपल्लवम् ।
तत् स्थितं तव परोक्षमप्यहो संविचिन्त्य मुमुहुर्व्रजाङ्गना: ॥६॥

வேணுரந்த்₄ரதரலாங்கு₃லீத₃லம் தாலஸஞ்சலிதபாத₃பல்லவம் | 
தத் ஸ்தி₂தம் தவ பரோக்ஷமப்யஹோ ஸம்ʼவிசிந்த்ய முமுஹுர்வ்ரஜாங்க₃நா: || 6|| 

6. கோபிகைகள் தொலைவில் இருந்தாலும், குழலின் மீது விளையாடும் தங்கள் விரல்களையும், தாளமிடும் தங்கள் பாதங்களையும் நினைத்து மெய்மறந்தனர்.

निर्विशङ्कभवदङ्गदर्शिनी: खेचरी: खगमृगान् पशूनपि ।
त्वत्पदप्रणयि काननं च ता: धन्यधन्यमिति नन्वमानयन् ॥७॥

நிர்விஶங்கப₄வத₃ங்க₃த₃ர்ஶிநீ: கே₂சரீ: க₂க₃ம்ருகா₃ந் பஶூநபி | 
த்வத்பத₃ப்ரணயி காநநம் ச தா: த₄ந்யத₄ந்யமிதி நந்வமாநயந் || 7|| 

7. தங்களைப் பார்க்கும் தேவப்பெண்டிரையும், மிருகங்களையும், பசுக்களையும், தங்கள் தொடர்பு ஏற்பட்ட கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபியர்கள் எண்ணினார்கள்.

आपिबेयमधरामृतं कदा वेणुभुक्तरसशेषमेकदा ।
दूरतो बत कृतं दुराशयेत्याकुला मुहुरिमा: समामुहन् ॥८॥

ஆபிபே₃யமத₄ராம்ருதம் கதா₃ வேணுபு₄க்தரஸஶேஷமேகதா₃ | 
தூ₃ரதோ ப₃த க்ருதம் து₃ராஶயேத்யாகுலா முஹுரிமா: ஸமாமுஹந் || 8||

8. புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமா? வெகுதூரத்தில் உள்ள கிடைக்காத இதைப் பற்றிய ஆசை போதும் என்று ஏங்கித் தவித்தனர்.

प्रत्यहं च पुनरित्थमङ्गनाश्चित्तयोनिजनितादनुग्रहात् ।
बद्धरागविवशास्त्वयि प्रभो नित्यमापुरिह कृत्यमूढताम् ॥९॥

ப்ரத்யஹம் ச புநரித்த₂மங்க₃நாஶ்சித்தயோநிஜநிதாத₃நுக்₃ரஹாத் | 
ப₃த்₃த₄ராக₃விவஶாஸ்த்வயி ப்ரபோ₄ நித்யமாபுரிஹ க்ருத்யமூட₄தாம் || 9|| 

9. இவ்வாறு தினமும் மன்மதனால் கோபிகைகளின் மனம் கலக்கமுற்றது. தங்களிடம் வைத்த அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள். 

रागस्तावज्जायते हि स्वभावा-
न्मोक्षोपायो यत्नत: स्यान्न वा स्यात् ।
तासां त्वेकं तद्द्वयं लब्धमासीत्
भाग्यं भाग्यं पाहि मां मारुतेश ॥१०॥

ராக₃ஸ்தாவஜ்ஜாயதே ஹி ஸ்வபா₄வா-
ந்மோக்ஷோபாயோ யத்நத: ஸ்யாந்ந வா ஸ்யாத் | 
தாஸாம் த்வேகம் தத்₃த்₃வயம் லப்₃த₄மாஸீத்
பா₄க்₃யம் பா₄க்₃யம் பாஹி மாம் மாருதேஶ || 10||

10. உலகில் எல்லாருக்கும் இயற்கையாகவே ஆசை உண்டாகிறது. முயற்சியினால் மோக்ஷம் உண்டாகலாம் அல்லது உண்டாகாமலும் இருக்கலாம். ஆனால் கோபிகைகளுக்கு இவ்விரண்டும் ஒன்றாகவே கிடைத்துவிட்டது. என்னே பாக்யம்! குருவாயூரப்பா! என்னைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment