Tuesday, April 29, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60

            ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 60, ஸ்ரீ நாராயணீயம் 60வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam  

த³ஶகம் -60
கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் 

मदनातुरचेतसोऽन्वहं भवदङ्घ्रिद्वयदास्यकाम्यया ।
यमुनातटसीम्नि सैकतीं तरलाक्ष्यो गिरिजां समार्चिचन् ॥१॥

மத₃நாதுரசேதஸோ(அ)ந்வஹம் ப₄வத₃ங்க்₄ரித்₃வயதா₃ஸ்யகாம்யயா | 
யமுநாதடஸீம்நி ஸைகதீம் தரலாக்ஷ்யோ கி₃ரிஜாம் ஸமார்சிசந் || 1||

1. மன்மதனால் கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. தங்களுக்கே சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். 

तव नामकथारता: समं सुदृश: प्रातरुपागता नदीम् ।
उपहारशतैरपूजयन् दयितो नन्दसुतो भवेदिति ॥२॥

தவ நாமகதா₂ரதா: ஸமம் ஸுத்₃ருஶ: ப்ராதருபாக₃தா நதீ₃ம் | 
உபஹாரஶதைரபூஜயந் த₃யிதோ நந்த₃ஸுதோ ப₄வேதி₃தி || 2||

2. கோபிகைகள், தங்கள் திருநாமத்தையும், தங்கள் கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினர்.

इति मासमुपाहितव्रतास्तरलाक्षीरभिवीक्ष्य ता भवान् ।
करुणामृदुलो नदीतटं समयासीत्तदनुग्रहेच्छया ॥३॥

இதி மாஸமுபாஹிதவ்ரதாஸ்தரலாக்ஷீரபி₄வீக்ஷ்ய தா ப₄வாந் | 
கருணாம்ருது₃லோ நதீ₃தடம் ஸமயாஸீத்தத₃நுக்₃ரஹேச்ச₂யா || 3|| 

3. இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள். தாங்கள் அவர்களிடம் கருணை கொண்டு அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றீர்கள். 

नियमावसितौ निजाम्बरं तटसीमन्यवमुच्य तास्तदा ।
यमुनाजलखेलनाकुला: पुरतस्त्वामवलोक्य लज्जिता: ॥४॥

நியமாவஸிதௌ நிஜாம்ப₃ரம் தடஸீமந்யவமுச்ய தாஸ்ததா₃ | 
யமுநாஜலகே₂லநாகுலா: புரதஸ்த்வாமவலோக்ய லஜ்ஜிதா: || 4|| 

4. விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். அப்போது எதிரே தங்களைக் கண்டு வெட்கப்பட்டனர். 

त्रपया नमिताननास्वथो वनितास्वम्बरजालमन्तिके ।
निहितं परिगृह्य भूरुहो विटपं त्वं तरसाऽधिरूढवान् ॥५॥

த்ரபயா நமிதாநநாஸ்வதோ₂ வநிதாஸ்வம்ப₃ரஜாலமந்திகே | 
நிஹிதம் பரிக்₃ருஹ்ய பூ₄ருஹோ விடபம் த்வம் தரஸா(அ)தி₄ரூட₄வாந் || 5||

5. வெட்கத்துடன் தலைகுனிந்து நின்ற அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு தாங்கள் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினீர்கள்.

इह तावदुपेत्य नीयतां वसनं व: सुदृशो यथायथम् ।
इति नर्ममृदुस्मिते त्वयि ब्रुवति व्यामुमुहे वधूजनै: ॥६॥

இஹ தாவது₃பேத்ய நீயதாம் வஸநம் வ: ஸுத்₃ருஶோ யதா₂யத₂ம் | 
இதி நர்மம்ருது₃ஸ்மிதே த்வயி ப்₃ருவதி வ்யாமுமுஹே வதூ₄ஜநை: || 6||

6. ‘பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கூறினீர்கள். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர். 

अयि जीव चिरं किशोर नस्तव दासीरवशीकरोषि किम् ।
प्रदिशाम्बरमम्बुजेक्षणेत्युदितस्त्वं स्मितमेव दत्तवान् ॥७॥

அயி ஜீவ சிரம் கிஶோர நஸ்தவ தா₃ஸீரவஶீகரோஷி கிம் | 
ப்ரதி₃ஶாம்ப₃ரமம்பு₃ஜேக்ஷணேத்யுதி₃தஸ்த்வம் ஸ்மிதமேவ த₃த்தவாந் || 7||

7. ‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று வேண்டிய கோபிகைகளுக்கு, புன்சிரிப்பையே பதிலாகத் தந்தீர்கள். 

अधिरुह्य तटं कृताञ्जली: परिशुद्धा: स्वगतीर्निरीक्ष्य ता: ।
वसनान्यखिलान्यनुग्रहं पुनरेवं गिरमप्यदा मुदा ॥८॥

அதி₄ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலீ: பரிஶுத்₃தா₄: ஸ்வக₃தீர்நிரீக்ஷ்ய தா: | 
வஸநாந்யகி₂லாந்யநுக்₃ரஹம் புநரேவம் கி₃ரமப்யதா₃ முதா₃ || 8||

8. அவர்கள் கரையேறி கைகூப்பி வணங்கினார்கள். அதனால் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். தங்களையே சரணடைந்ததால் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, உபதேசமும் செய்தீர்கள். 

विदितं ननु वो मनीषितं वदितारस्त्विह योग्यमुत्तरम् ।
यमुनापुलिने सचन्द्रिका: क्षणदा इत्यबलास्त्वमूचिवान् ॥९॥

விதி₃தம் நநு வோ மநீஷிதம் வதி₃தாரஸ்த்விஹ யோக்₃யமுத்தரம் | 
யமுநாபுலிநே ஸசந்த்₃ரிகா: க்ஷணதா₃ இத்யப₃லாஸ்த்வமூசிவாந் || 9||

9.  உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல்குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் உங்களுக்கு வேண்டுவது கிடைக்கும் என்று கூறினீர். 

उपकर्ण्य भवन्मुखच्युतं मधुनिष्यन्दि वचो मृगीदृश: ।
प्रणयादयि वीक्ष्य वीक्ष्य ते वदनाब्जं शनकैर्गृहं गता: ॥१०॥

உபகர்ண்ய ப₄வந்முக₂ச்யுதம் மது₄நிஷ்யந்தி₃ வசோ ம்ருகீ₃த்₃ருஶ: | 
ப்ரணயாத₃யி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே வத₃நாப்₃ஜம் ஶநகைர்க்₃ருஹம் க₃தா: || 10||

10. தேனினும் இனிய தங்கள் சொற்களைக் கேட்ட கோபியர்கள், தங்கள் தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். 

इति नन्वनुगृह्य वल्लवीर्विपिनान्तेषु पुरेव सञ्चरन् ।
करुणाशिशिरो हरे हर त्वरया मे सकलामयावलिम् ॥११॥

இதி நந்வநுக்₃ருஹ்ய வல்லவீர்விபிநாந்தேஷு புரேவ ஸஞ்சரந் | 
கருணாஶிஶிரோ ஹரே ஹர த்வரயா மே ஸகலாமயாவலிம் || 11||

11. இவ்வாறு அப்பெண்களுக்கு அனுக்ரஹம் செய்து காட்டில் திரிந்து மகிழ்ந்தீர். கருணை உள்ளம் கொண்ட குருவாயூரப்பா! என் எல்லா வியாதிகளையும் சீக்கிரம் போக்கி அருள வேண்டும். 

No comments:

Post a Comment