த³ஶகம் -61
பிராமணப் பெண்களுக்கு அனுக்ரஹித்தல்
ततश्च वृन्दावनतोऽतिदूरतो
वनं गतस्त्वं खलु गोपगोकुलै: ।
हृदन्तरे भक्ततरद्विजाङ्गना-
कदम्बकानुग्रहणाग्रहं वहन् ॥१॥
ததஶ்ச வ்ருந்தா₃வநதோ(அ)திதூ₃ரதோ
வநம் க₃தஸ்த்வம் க₂லு கோ₃பகோ₃குலை: |
ஹ்ருத₃ந்தரே ப₄க்ததரத்₃விஜாங்க₃நா-
கத₃ம்ப₃காநுக்₃ரஹணாக்₃ரஹம் வஹந் || 1||
1. ஒரு முறை, தங்களிடத்தில் பக்தி கொண்ட பிராமணப் பெண்களை ஆசீர்வதிக்கும் நோக்கத்துடன், தாங்கள் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு, பசுக்களுடனும், இடைச்சிறுவர்களுடனும் சென்றீர்கள்.
ततो निरीक्ष्याशरणे वनान्तरे
किशोरलोकं क्षुधितं तृषाकुलम् ।
अदूरतो यज्ञपरान् द्विजान् प्रति
व्यसर्जयो दीदिवियाचनाय तान् ॥२॥
ததோ நிரீக்ஷ்யாஶரணே வநாந்தரே
கிஶோரலோகம் க்ஷுதி₄தம் த்ருஷாகுலம் |
அதூ₃ரதோ யஜ்ஞபராந் த்₃விஜாந் ப்ரதி
வ்யஸர்ஜயோ தீ₃தி₃வியாசநாய தாந் || 2||
2. மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும், பசுக்களும் பசியாலும் , தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட தாங்கள், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினீர்.
गतेष्वथो तेष्वभिधाय तेऽभिधां
कुमारकेष्वोदनयाचिषु प्रभो ।
श्रुतिस्थिरा अप्यभिनिन्युरश्रुतिं
न किञ्चिदूचुश्च महीसुरोत्तमा: ॥३॥
க₃தேஷ்வதோ₂ தேஷ்வபி₄தா₄ய தே(அ)பி₄தா₄ம்
குமாரகேஷ்வோத₃நயாசிஷு ப்ரபோ₄ |
ஶ்ருதிஸ்தி₂ரா அப்யபி₄நிந்யுரஶ்ருதிம்
ந கிஞ்சிதூ₃சுஶ்ச மஹீஸுரோத்தமா: || 3||
3. அவர்கள் அந்தணர்களிடம் தம் பெயரைக்கூறி யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள்.
अनादरात् खिन्नधियो हि बालका: ।
समाययुर्युक्तमिदं हि यज्वसु ।
चिरादभक्ता: खलु ते महीसुरा:
कथं हि भक्तं त्वयि तै: समर्प्यते ॥४॥
அநாத₃ராத் கி₂ந்நதி₄யோ ஹி பா₃லகா: |
ஸமாயயுர்யுக்தமித₃ம் ஹி யஜ்வஸு |
சிராத₃ப₄க்தா: க₂லு தே மஹீஸுரா:
கத₂ம் ஹி ப₄க்தம் த்வயி தை: ஸமர்ப்யதே || 4||
4. உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். உண்மையான பக்தியில்லாத அந்தணர்கள் எவ்வாறு தங்களுக்கு உணவைத் தர முன்வருவார்கள்?
निवेदयध्वं गृहिणीजनाय मां
दिशेयुरन्नं करुणाकुला इमा: ।
इति स्मितार्द्रं भवतेरिता गता-
स्ते दारका दारजनं ययाचिरे ॥५॥
நிவேத₃யத்₄வம் க்₃ருஹிணீஜநாய மாம்
தி₃ஶேயுரந்நம் கருணாகுலா இமா: |
இதி ஸ்மிதார்த்₃ரம் ப₄வதேரிதா க₃தா-
ஸ்தே தா₃ரகா தா₃ரஜநம் யயாசிரே || 5||
5. “அந்தணர்களின் மனைவியரிடம் நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்” என்று சிறுவர்களிடம் கூறினீர்கள். குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர்.
गृहीतनाम्नि त्वयि सम्भ्रमाकुला-
श्चतुर्विधं भोज्यरसं प्रगृह्य ता: ।
चिरंधृतत्वत्प्रविलोकनाग्रहा:
स्वकैर्निरुद्धा अपि तूर्णमाययु: ॥६॥
க்₃ருஹீதநாம்நி த்வயி ஸம்ப்₄ரமாகுலா-
ஶ்சதுர்வித₄ம் போ₄ஜ்யரஸம் ப்ரக்₃ருʼஹ்ய தா: |
சிரம்த்₄ருதத்வத்ப்ரவிலோகநாக்₃ரஹா:
ஸ்வகைர்நிருத்₃தா₄ அபி தூர்ணமாயயு: || 6||
6. தங்கள் பெயரைக் கேட்டவுடன், நெடுநாட்களாகத் தங்களைக் காண விரும்பிய அப்பெண்கள், ஆவலுடன் தங்களை நேரில் காணவேண்டும் என்று நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய்த் தங்களிடம் வந்தார்கள்.
विलोलपिञ्छं चिकुरे कपोलयो:
समुल्लसत्कुण्डलमार्द्रमीक्षिते ।
निधाय बाहुं सुहृदंससीमनि
स्थितं भवन्तं समलोकयन्त ता: ॥७॥
விலோலபிஞ்ச₂ம் சிகுரே கபோலயோ:
ஸமுல்லஸத்குண்ட₃லமார்த்₃ரமீக்ஷிதே |
நிதா₄ய பா₃ஹும் ஸுஹ்ருத₃ம்ஸஸீமநி
ஸ்தி₂தம் ப₄வந்தம் ஸமலோகயந்த தா: || 7||
7. தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு நிற்கும் தங்களை அப்பெண்கள் கண்டார்கள்.
तदा च काचित्त्वदुपागमोद्यता
गृहीतहस्ता दयितेन यज्वना ।
तदैव सञ्चिन्त्य भवन्तमञ्जसा
विवेश कैवल्यमहो कृतिन्यसौ ॥८॥
ததா₃ ச காசித்த்வது₃பாக₃மோத்₃யதா
க்₃ருஹீதஹஸ்தா த₃யிதேந யஜ்வநா |
ததை₃வ ஸஞ்சிந்த்ய ப₄வந்தமஞ்ஜஸா
விவேஶ கைவல்யமஹோ க்ருதிந்யஸௌ || 8||
8. அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே தங்களை தியானம் செய்து தங்களுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். ஆச்சர்யம்!
आदाय भोज्यान्यनुगृह्य ता: पुन-
स्त्वदङ्गसङ्गस्पृहयोज्झतीर्गृहम् ।
विलोक्य यज्ञाय विसर्जयन्निमा-
श्चकर्थ भर्तृनपि तास्वगर्हणान् ॥९॥
ஆதா₃ய போ₄ஜ்யாந்யநுக்₃ருஹ்ய தா: புந-
ஸ்த்வத₃ங்க₃ஸங்க₃ஸ்ப்ருஹயோஜ்ஜ₂தீர்க்₃ருஹம் |
விலோக்ய யஜ்ஞாய விஸர்ஜயந்நிமா-
ஶ்சகர்த₂ ப₄ர்த்ருநபி தாஸ்வக₃ர்ஹணாந் || 9||
9. அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹித்தீர். உம்முடைய சேவையை விரும்பிய அவர்களை யாகத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கச் செய்தீர்.
निरूप्य दोषं निजमङ्गनाजने
विलोक्य भक्तिं च पुनर्विचारिभि:
प्रबुद्धतत्त्वैस्त्वमभिष्टुतो द्विजै-
र्मरुत्पुराधीश निरुन्धि मे गदान् ॥१०॥
நிரூப்ய தோ₃ஷம் நிஜமங்க₃நாஜநே
விலோக்ய ப₄க்திம் ச புநர்விசாரிபி₄:
ப்ரபு₃த்₃த₄தத்த்வைஸ்த்வமபி₄ஷ்டுதோ த்₃விஜை-
ர்மருத்புராதீ₄ஶ நிருந்தி₄ மே க₃தா₃ந் || 10||
10. அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, தங்களைத் துதித்தனர். குருவாயூரப்பா! என் துன்பங்களையும், நோய்களையும் போக்கி என்னைக் காக்க வேண்டும்.
No comments:
Post a Comment