Friday, April 18, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 49, ஸ்ரீ நாராயணீயம் 49வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -49
பிருந்தாவனம் செல்ல தீர்மானித்தல்

भवत्प्रभावाविदुरा हि गोपास्तरुप्रपातादिकमत्र गोष्ठे ।
अहेतुमुत्पातगणं विशङ्क्य प्रयातुमन्यत्र मनो वितेनु: ॥१॥

ப₄வத்ப்ரபா₄வாவிது₃ரா ஹி கோ₃பாஸ்தருப்ரபாதாதி₃கமத்ர கோ₃ஷ்டே₂ |
அஹேதுமுத்பாதக₃ணம் விஶங்க்ய ப்ரயாதுமந்யத்ர மநோ விதேநு: || 1||

1. தங்கள் பெருமையை உணராமல், இடையர்கள் மரங்கள் முறிந்ததை கெட்ட சகுனமாக எண்ணி, வேறு இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்.

तत्रोपनन्दाभिधगोपवर्यो जगौ भवत्प्रेरणयैव नूनम् ।
इत: प्रतीच्यां विपिनं मनोज्ञं वृन्दावनं नाम विराजतीति ॥२॥

தத்ரோபநந்தா₃பி₄த₄கோ₃பவர்யோ ஜகௌ₃ ப₄வத்ப்ரேரணயைவ நூநம் |
இத: ப்ரதீச்யாம் விபிநம் மநோஜ்ஞம் வ்ருந்தா₃வநம் நாம விராஜதீதி || 2||

2. உபநந்தன் என்ற இடையன், தங்கள் பிரேரணையினால், மேற்கே பிருந்தாவனம் என்ற அழகிய காடு உள்ளதாகக் கூறினான்.

बृहद्वनं तत् खलु नन्दमुख्या विधाय गौष्ठीनमथ क्षणेन ।
त्वदन्वितत्वज्जननीनिविष्टगरिष्ठयानानुगता विचेलु: ॥३॥

ப்₃ருஹத்₃வநம் தத் க₂லு நந்த₃முக்₂யா விதா₄ய கௌ₃ஷ்டீ₂நமத₂ க்ஷணேந |
த்வத₃ந்விதத்வஜ்ஜநநீநிவிஷ்டக₃ரிஷ்ட₂யாநாநுக₃தா விசேலு: || 3||

3. நந்தனும், மற்ற இடையர்களும் கோகுலத்தை பசுக்கொட்டிலாகச் செய்தனர். யசோதை தங்களைத் தூக்கிக்கொண்டு வண்டியில் ஏறினாள். மற்ற கோபர்கள் பின்தொடர்ந்தனர்.

अनोमनोज्ञध्वनिधेनुपालीखुरप्रणादान्तरतो वधूभि: ।
भवद्विनोदालपिताक्षराणि प्रपीय नाज्ञायत मार्गदैर्घ्यम् ॥४॥

அநோமநோஜ்ஞத்₄வநிதே₄நுபாலீகு₂ரப்ரணாதா₃ந்தரதோ வதூ₄பி₄: |
ப₄வத்₃விநோதா₃லபிதாக்ஷராணி ப்ரபீய நாஜ்ஞாயத மார்க₃தை₃ர்க்₄யம் || 4||

4. வண்டிகளின் சத்தத்திலும், பசுக்களின் குளம்புச்சத்தத்திலும், உமது அழகான பேச்சுக்களிலும் மனமகிழ்ந்த கோபியர், அந்த நீண்ட வழியைக் கடந்ததைக்கூட அறியவில்லை.

निरीक्ष्य वृन्दावनमीश नन्दत्प्रसूनकुन्दप्रमुखद्रुमौघम् ।
अमोदथा: शाद्वलसान्द्रलक्ष्म्या हरिन्मणीकुट्टिमपुष्टशोभम् ॥५॥

நிரீக்ஷ்ய வ்ருந்தா₃வநமீஶ நந்த₃த்ப்ரஸூநகுந்த₃ப்ரமுக₂த்₃ருமௌக₄ம் |
அமோத₃தா₂: ஶாத்₃வலஸாந்த்₃ரலக்ஷ்ம்யா ஹரிந்மணீகுட்டிமபுஷ்டஶோப₄ம் || 5||

5. பூத்துக் குலுங்கிய குந்த மரங்களால் நிறைந்திருந்த அழகான வனத்தைக் கண்டீர்கள். பச்சை மணிகளை வாரி இரைத்தது போன்ற புல்வெளிகளையும் கண்டு ஆனந்தம் அடைந்தீர்கள்.

नवाकनिर्व्यूढनिवासभेदेष्वशेषगोपेषु सुखासितेषु ।
वनश्रियं गोपकिशोरपालीविमिश्रित: पर्यगलोकथास्त्वम् ॥६॥

நவாகநிர்வ்யூட₄நிவாஸபே₄தே₃ஷ்வஶேஷகோ₃பேஷு ஸுகா₂ஸிதேஷு |
வநஶ்ரியம் கோ₃பகிஶோரபாலீவிமிஶ்ரித: பர்யக₃லோகதா₂ஸ்த்வம் || 6||

6. புது வீடுகள் கட்டப்பட்டு இடையர்கள் அங்கு குடியேறினர். தாங்களும் இடைச்சிறுவர்களோடு பிருந்தாவனத்தின் அழகைக் கண்டு களித்தீர்கள்.

अरालमार्गागतनिर्मलापां मरालकूजाकृतनर्मलापाम् ।
निरन्तरस्मेरसरोजवक्त्रां कलिन्दकन्यां समलोकयस्त्वम् ॥७॥

அராலமார்கா₃க₃தநிர்மலாபாம் மராலகூஜாக்ருதநர்மலாபாம் |
நிரந்தரஸ்மேரஸரோஜவக்த்ராம் கலிந்த₃கந்யாம் ஸமலோகயஸ்த்வம் || 7||

7. அன்னங்களின் சப்தத்துடன், தாமரைப்பூ போன்ற முகத்துடன் வளைந்து செல்லும் சுத்தமான நீரை உடைய களிந்தனின் பெண்ணான யமுனையைக் கண்டீர்கள்.

मयूरकेकाशतलोभनीयं मयूखमालाशबलं मणीनाम् ।
विरिञ्चलोकस्पृशमुच्चशृङ्गैर्गिरिं च गोवर्धनमैक्षथास्त्वम् ॥८॥

மயூரகேகாஶதலோப₄நீயம் மயூக₂மாலாஶப₃லம் மணீநாம் |
விரிஞ்சலோகஸ்ப்ருஶமுச்சஶ்ருங்கை₃ர்கி₃ரிம் ச கோ₃வர்த₄நமைக்ஷதா₂ஸ்த்வம் || 8||

8. அழகாக அகவும் மயில்கள் நிறைந்ததும், பல்வேறு நிறங்களுடன் ஒளிவீசிக்கொண்டு, வானை முட்டும் உயர்ந்த உச்சிகளோடு கூடிய கோவர்த்தனம் என்னும் மலையையும் கண்டீர்கள்.

समं ततो गोपकुमारकैस्त्वं समन्ततो यत्र वनान्तमागा: ।
ततस्ततस्तां कुटिलामपश्य: कलिन्दजां रागवतीमिवैकाम् ॥९॥

ஸமம் ததோ கோ₃பகுமாரகைஸ்த்வம் ஸமந்ததோ யத்ர வநாந்தமாகா₃: |
ததஸ்ததஸ்தாம் குடிலாமபஶ்ய: கலிந்த₃ஜாம் ராக₃வதீமிவைகாம் || 9||

9. தாங்கள் இடைச்சிறுவர்களுடன் எங்கெங்கு செல்கிறீர்களோ, அங்கெல்லாம் வளைந்து வளைந்து, ஆசை கொண்டவள்போல் வரும் யமுனையைப் பார்த்தீர்கள்.

तथाविधेऽस्मिन् विपिने पशव्ये समुत्सुको वत्सगणप्रचारे ।
चरन् सरामोऽथ कुमारकैस्त्वं समीरगेहाधिप पाहि रोगात् ॥१०॥

ததா₂விதே₄(அ)ஸ்மிந் விபிநே பஶவ்யே ஸமுத்ஸுகோ வத்ஸக₃ணப்ரசாரே |
சரந் ஸராமோ(அ)த₂ குமாரகைஸ்த்வம் ஸமீரகே₃ஹாதி₄ப பாஹி ரோகா₃த் || 10||

10. பசுக்களுக்கு ஏற்ற அக்காட்டில், பலராமனோடும், ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையும், பசுக்களையும் மேய்த்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தீர்கள். குருவாயூரப்பா! என்னைப் பிணியிலிருந்து காக்க வேண்டும்.

No comments:

Post a Comment